Wednesday, March 10, 2010

நிர்வாணப்பார்வை 2: யாதும் ஊரே!

புகழ் பெற்ற ஓவியர் திருவாளர் எம். எஃப். ஹுசைனுக்கு கட்டார் நாடு குடியுரிமை கொடுத்ததை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதை உசைனும் ஏற்றுக்கொண்டாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பொதுவாக, நாம் சின்ன குழந்தைகளாய் இருக்கும் காலம் தொட்டே, “இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் எல்லோரும் என் உடன் பிறந்தவர்கள், என் தாய் நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்....” என்றெல்லாம் சொல்லவும் நினைக்கவும் நாம் பயிற்றுவிக்க படுகிறோம்.

இதனாலேயே என் நாடு என்கிற ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுவிடுகிறோம். ஆனால் இதுவும் ஒரு வித மாயை தான்.

உதாரணத்திற்கு இந்தியா என்கிற இந்த நாட்டையே எடுத்துக்கொள்வோமே. ஒரு காலத்தில் சிந்து நதி ஓடிய பகுதியை தான் இந்தியா என்று அழைத்தார்கள் பாரசீகர்களும், கிரேக்கர்களும், அரேபியர்களும்.....அப்படி பார்த்தால், அந்த சிந்து நதி இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பிரதேசம் தான் நிஜமான இந்தியா. ஆனால் அந்த பிரதேசம் இப்போது இருப்பதென்னவோ ஆஃப்பாக் என்றழைக்கப்படும் ஆஃப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகுதியில் தான்.

ஒரு காலத்தில் கன்னியாகுமரி பகுதி என்பது திருவான்கூர் அரசரின் சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு தொகுதி மட்டுமே. 1947ழுக்கு முன் இந்த ஊர் காரர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லை, திருவான்கூர்காரர்கள் தான். ஆனால் 1947ழுக்கு பிறகு அவர்களின் அடையாளம் மாறி, இந்தியர்களாய் தங்களை நினைத்துக்கொள்ள அவர்கள் பழகிவிட்டார்கள்.

ஆக நாடு என்பது வெறும் ஒரு நம்பிக்கை தான். மற்ற நம்பிக்கையை போல அதுவும் மாறக்கூடியது தான். சின்ன குழந்தை பிறந்த புதிதில், தன் தாயின் கரங்களையே தன் உலகமாக நினைக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், அந்த அறையை மட்டுமே தன் உலகமாக நினைக்கும். அதே குழந்தை வளர வளர, தன் வீட்டையும், தன் தெருவையும், தன் ஊரையும், தன் நாட்டையும், தன் உலகம் என்று கருதிக்கொள்ளும். சிலர் இந்த வளர்ச்சியோடே நின்று விடுகிறார்கள். ஆனால் இதை விட அதிக சிந்தனா சக்தியும், பரந்த மனமும் உள்ளவர்களுக்கு நாடு என்பது கூட ஒரு சின்ன வட்டம் தான். அதனால் அவர்கள் தன் கண்டத்தையும், அதையும் தாண்டி, இந்த மொத்த பூமியையும், அதற்கு அப்பாலும், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் தன் உலகமாகவே கருதுகிறார்கள். அவர்களை பொருத்தவரை இந்த அண்ட சராசரமே அவர்களுக்கு உலகம் தான்…..

இந்த அளவு பறந்து விரியும் மனம் கொண்ட மனிதர்களை எல்லாம் சொல்லி வைத்தார்மாதிரி நாம் எல்லோருமே எப்போதுமே உளமாற பாராட்டி இருக்கிறோம். உதாரணத்திற்கு விஷ்வ பாரதி, என்கிற பல்கலை கழகத்தை துவக்கிய ரபீந்திரநாத் தாகூர். உலகில் என்ன நடந்தாலும், அது என்னவோ தன் வீட்டில் நடந்தது மாதிரி பாடிய மஹாகவி சுப்ரமண்ய பாரதி. மற்ற நாட்டு பெண்களை போலவே தமிழ் பெண்களும் முடியை வெட்டிக்கொண்டு, பாண்டு சட்டை போட்டால் தேவலை என்று யோசித்த பெரியார்….இவர்கள் எல்லாம் நம்ம ஏரியா Transnational Heroes, என்றால், ஆர்ஜெண்டீனாவில் பிறந்தாலும், கூபாவின் சுந்ததிர போருக்காக போராடிய ஷே குவேரா, யுகஸ்லோவியாவில் பிறந்தாலும் கல்கத்தா வீதிவாழ் மனிதர்களுக்காக உழைத்த அன்னை தெரெசா……என்று இந்த பட்டியலில் பலர் இருக்க தான் செய்கிறார்கள்.

அதே பட்டியலில் இப்போது ஓவியர் எம் எஃப் உசைனும் சேருகிறார் என்பது அவருக்கு பெருமையே.

31 comments:

Unknown said...

சகோதரி, அந்த ஓவியர் என்ன சேவை செய்ய கட்டார் நாட்டு குடி உரிமை பெற்றுள்ளார்?கலை எனும் பெயரில் தான் செய்த ஈன செய்கைகளால் வந்த எதிர் வினைகளின் தாக்கங்களை சந்திக்க பயந்து ஓடி உள்ளார்.

bala said...

//டாக்டரம்மா, ஒரு சின்ன யோசனை. நீங்களும் ஏன் பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர்,தாலிபான் போன்ற மென்டல் ஜன்மங்களுக்கு சேவை செய்து,ஒரு transnational ஹீரோயின் ஆகி உலகப் பிரசித்தம் அடையக்கூடாது?இன்னும் ஒரு சின்ன ரெக்கமென்டேஷன்.போறதுன்னு முடிவெடுத்தீங்கன்னாக்க ஒரு பர்தா போட்டூக்கொண்டு போகவும் அல்லது குறைந்த பட்சம் மூஞ்சியில் தாடி ஒட்டிக்கொண்டாவது போகவும்.எல்லாம் உங்க நன்மைக்காகத் தான். பாலா

PARIMALA said...

Well said Dr. What is important is we should keep connected (this is possible with the advent of internet and other technologies. We call this world now a global village 'cos the distance is shrinking everyday), value each others space, freedom and see everyone as fellow human being.When there comes a crisis humanitarian consideration should take precedence over everything.

ராஜ நடராஜன் said...

எம்.எப்.ஹுசைன் கத்தார் குடிமகனானதற்கான பின்புலங்கள் என்ன என்பதை யோசித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.இடுகையாக எனது கருத்தை வெளியிடுகிறேன்.நன்றி.

விலெகா said...

nice!

ஸ்டாலின் குரு said...

உதாரணங்களில் ஒஷோவையும் சேர்த்திருக்கலாம்
என்று கருதுகிறேன் :)

Anonymous said...

Very Nice !
you introduction cover story and this topic...

Thanks...

Mujib - Kuwait

v.pitchumani said...

எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் உசேன் வரைந்த இந்து கடவுள் ஒவியங்களும் , இஸ்லாம் மக்கள் தூதர்களின் ஒவியங்களும் இருந்தன. அவற்றில் இந்து கடவுள்களின் ஒவியங்கள் எல்லாம் நிர்வாணமாகவும், இஸ்லாமிய ஒவியங்கள் ஆடைகளுடன் கண்ணியமாக வரையப்பட்டிருந்தது. உசேன் அவ்வாறு ஒரவஞ்சனை செய்தார் .வேண்டுமென்று செய்தாரா இல்லையா. ஆனால் ஏன் அப்படி.

Anonymous said...

கேட்ட கேள்விக்கும்,
சொன்ன பதிலுக்கும்-
ஏதாவது சம்பந்தமிருக்கா மேடம்.

Sri said...

Sorry I cannot agree with comparing and making M.F.Husain in the same league as Tagore or Subramaniya Bharathi. Because they never berated India or insulted any one else's religious feelings like MFH did.

Dr N Shalini said...

ஸ்டாலின் குரு, நீங்க சொல்வது சரி, ஓஷோவையும் இந்த பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். சாரி.

எம் எஃப் உசைனின் ஓவியத்தை குறை கூற எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஏதோ கொஞ்சம் டயகிராம் வரைய தெரியுமே தவிற, படம் போட எனக்கு தெரியாது.

உசைன், இந்து கடவுளை நிர்வாணமாய் வரைந்தது தான் அவர் குற்றம் என்றால், பிளீஸ் ரிமெம்பர்: ராஜா ரவி வர்மா மஹாலஷ்மிக்கு மேலாடை போட்டு வரையும் வரை, இந்திய பெண் தெய்வ உருவங்கள் எல்லாமே மேலாடை இல்லாமல் தான் இருந்தன....எந்த பழைய கோயிலில் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக்கொள்ளுங்கள்... அஜெந்தா, எல்லோராவில் ஆரம்பித்து, இலங்கையில் இருக்கும் அனுராதாபுரா வரை, எல்லா புராதான பெண்சாமி ஓவியங்களுமே ஆடைஇல்லாதவை தான். அதை எல்லாம் நம் பாரம்பரியம் என்று பெருமை பட்டுக்கொள்ள தெரிந்த நமக்கு உசேனின் ஓவியத்தை மட்டும் ரசிக்க தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? பிரச்சனை யாரிடம்?

Unknown said...

உங்கள் பதிவுகள் மிகவும் அருமை !
தொடரட்டும் உங்கள் எழுத்துக்கள்

யாசவி said...

dear shalini,

well said.

Anonymous said...

Artists are a different breed.
Unfortunately they are often incapable of respecting other's feelings. In Hussein's case he didn't dare to draw the figure of Prophet Muhammed. The subject he chose was a Godess revered by many.
Consideration for others feelings,
I think is very important in any society. I cannot help help but recall the controversy surrounding
another art installation in the West. The following is straight from Wikipedia.



//Piss Christ is a 1987 photograph by photographer Andres Serrano. It depicts a small plastic crucifix submerged in a glass of the artist's urine. The piece was a winner of the Southeastern Center for Contemporary Art's "Awards in the Visual Arts" competition,[1] which is sponsored in part by the National Endowment for the Arts, a United States Government agency that offers support and funding for artistic projects.


Controversy
The piece caused a scandal when it was exhibited in 1989, with detractors, including United States Senators Al D'Amato and Jesse Helms, outraged that Serrano received $15,000 for the work, part of it from the taxpayer-funded National Endowment for the Arts. Supporters argued the Piss Christ is an issue of artistic freedom and freedom of speech.

Others alleged that the government funding of Piss Christ violated separation of church and state.[2][3]

Sister Wendy Beckett, an art critic and Catholic nun, stated in a television interview with Bill Moyers that she regarded the work as not blasphemous but a statement on "what we have done to Christ" - that is, the way contemporary society has come to regard Christ and the values he represents.[4]

During a retrospective of Serrano's work at the National Gallery of Victoria in 1997, the then Catholic Archbishop of Melbourne, George Pell, sought an injunction from the Supreme Court of Victoria to restrain the National Gallery of Victoria from publicly displaying Piss Christ, which was not granted. Some days later, one patron attempted to remove the work from the gallery wall, and two teenagers later attacked it with a hammer.[5] The director of the NGV cancelled the show, allegedly out of concern for a Rembrandt exhibition that was also on display at the time.[2]

Piss Christ was included in "Down by Law," a "show within a show" on identity politics and disobedience that formed part of the 2006 Whitney Biennial. The BBC documentary Damned in the USA explored the controversy surrounding Piss Christ.//

Sabarinathan Arthanari said...

திரு ஷாலினி,

பெண் தெய்வங்களை வணங்குவதற்காக அழகுணர்ச்சியுடன் படைக்க பட்ட கலைவடிவங்களும், ஓர் கருத்தாக்கத்தை எதிர்ப்பதற்காகவே நிர்வாணமாக வரைப்படும் ஓவியமும் ஒன்றா ?!!!


[ஹூசைன் நிர்வாணம் அசிங்கமானது என்ற ரீதியில் வரைந்திருக்கிறார்]

http://sabaritamil.blogspot.com/2010/03/x-x.html

மதி said...

சே குவேரா, அன்னை தெரசா எல்லாம் மக்களுக்கு உழைத்தார்கள் என்று யார் சொன்னது..

சே குவேரா ஒரு தீவிரவாதி..
அன்னை தெரசா ஒரு மத போதகர்.
உண்மையில் இவர்கள் இருவரும் யார் என்றூ கொஞ்சம் படித்துப்பாருங்கள்

எம். எஃ. ஹூசைன் வரைந்தது பற்றி ஒன்றும் குறை சொல்ல முடியாது.. ஏனென்றால் கடவுள் என்ற ஒன்றே நம்ப முடியாதது..

Hai said...

உண்மையில் நல்லதொரு சிந்தனை எழுத்துரு கொடுத்திருக்கிறீர்கள்...

சரியான பாதையில் பயணம் செய்ய உதவுமொரு சிந்தனை.

மற்றபடி பின்னூட்டமிட்டவர்கள் அவர் ஒரு முசுலீம் என்று மட்டும் பார்த்து அவரை திட்ட வேண்டாம்.

என் மனதில் பட்டதை கீழே குறிப்பிடுகிறேன்.

சகோதரி, அந்த ஓவியர் என்ன சேவை செய்ய கட்டார் நாட்டு குடி உரிமை பெற்றுள்ளார்?கலை எனும் பெயரில் தான் செய்த ஈன செய்கைகளால் வந்த எதிர் வினைகளின் தாக்கங்களை சந்திக்க பயந்து ஓடி உள்ளார்

ஒரு சின்ன யோசனை. நீங்களும் ஏன் பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர்,தாலிபான் போன்ற மென்டல் ஜன்மங்களுக்கு சேவை செய்து,

இவர்களுக்காக

இங்கே இருக்க முடியாமல் நாடோடியாக அவர் அலைந்தார் என்பது தெரியுமா அதன் பின்னரே அவருக்கு மற்றொரு நாட்டின் குடியுரிமை தேவைப்பட அவருக்கு அங்கு குடியுரிமை தரப்பட்டது. அதற்கு அவர் முசுலீம் என்ற அடையாளம் உதவியது என்பதை மறுக்கவில்லை....


எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் உசேன் வரைந்த இந்து கடவுள் ஒவியங்களும் , இஸ்லாம் மக்கள் தூதர்களின் ஒவியங்களும் இருந்தன. அவற்றில் இந்து கடவுள்களின் ஒவியங்கள் எல்லாம் நிர்வாணமாகவும், இஸ்லாமிய ஒவியங்கள் ஆடைகளுடன் கண்ணியமாக வரையப்பட்டிருந்தது

ஐயா நம்ம கோவில்ல போய் பாருங்கையா வேணும்னா வாங்க. நான் பக்கத்துலதான் இருக்கேன். சொல்லுங்க கோனார்க் கூட்டிப் போய் காண்பிக்கிறேன்.....
அந்த நபர் அனுப்பியது தவிர வேறு எதுவுமே அவர் வரைந்ததை நீங்கள் பார்க்கவில்லையா..

முதலில் அவர் இங்கு குடியுரிமை இருந்தும் அவரை இங்கு முழு உரிமையோடு வாழ விடாதது நமது குற்றமே.. means நமது அமைப்பின் குற்றமே.

bala said...

//ஓஷோவையும் இந்த பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். சாரி.//

டாக்டரம்மா, தயவு செய்து மஞ்ச துண்டு,மரம் வெட்டி,இயக்குநர் சீமான்,வீரமணி,பங்க் குமார்,அதிர்வேட்டு ஆறுமுகம்,ஒசாமா பின்லேடன் போன்றவர்களையும் பெரிய தாடிக்காரர் இருக்கும் transnational hero க்கள் லிஸ்டுல சேர்த்துடுங்கம்மா.உங்களுக்கு புண்ணியமாய் போகும்.அப்புறம் ஒரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை லிஸ்ட் அப்டேட் செய்து வெளியிடுங்கம்மா.இந்த சேவையை நாடும், உலகமும் மறக்காதம்மா.

Unknown said...

மாற்று சமய மக்களை புண்படுத்தக்கூடாது என்பது நமது அமைப்பின் சட்டம். குற்றமல்ல.அந்த ஓவியர் நாடு கடத்தப்படவில்லை.ஓடிவிட்டார்.கடவுள்களை நிர்வாணமாக்கியதில் அவர் கண்ட சுகம் என்ன? ஏன் அவர் தலைவர்களை அப்படி வரையவில்லை? அவர் தான் இந்திய குடி உரிமை பெற்றுள்ளாரே?
கோவில் சிலை/ஓவியங்களை சுட்டிக் காட்டும் அன்பரே, ஏன் மஹாத்மா அரை நிர்வாணமாக இருந்தாரே ஹுசைனும் ? இருக்கலாமே அல்லது தன் உருவத்தையே நிர்வாணமாக எழுதலாமே!

Krishnan said...

Hi Shalini,

Greatly written article about the patriotism myth. I wish all people to consider every one in the World as their relatives and not to be divided on any basis, which would become a utopian World.

Hussain:
I dont know the intention behind MF's painting of Hindu Gods. I dont get hurt by any of his paintings. But he should have thought if he will be able portray the images of great persons from his religion.

தமிழ் உதயம் said...

ஏன் ஹுசைன் குறித்து ரெம்ப கவலைப்படுறிங்க. பாகிஸ்தான் சிறைச்சாலையில் தூக்கு தண்டனைய எதிர்பார்த்து காத்து இருக்கிற சர்தார்ஜிய நினைச்சு கவலை பட்டிங்களா...

karthikeyan B said...

DEAR DR Shalini, your writings are excellant.. pl. keep playing.. i mean writing.

Nellai nanban said...

Dr.Shalini உங்க கருத்து சரியாய் இருந்தா கூட basic ஆ ஹிந்து வை தாக்கி எதாவது செஞ்சாலே கேக்றதுக்கு ஆளு கிடையாது னு ஒரு எண்ணம் வந்திடுச்சு ,இதே இது வேறு ஒரு மத அடையாளத்தை சொல்லிருந்தார்ணா தெரியும் .

da vinci code க்கு ஒரு ஞாயம் ,நம்மளுக்கு ஒரு ஞாயம் .Because india is secular country .

Visit : http://porunaipayyan.blogspot.com/



Best regards,

Kumaraguru

Mahesh said...

mam, my humble opinion is , we cannot put both Artist Hussain and Mother Therasa in same basket, where former was forced to leave the country because of our intolerance, but what Mother Thersa did was due to her love for poor.

PS : since my PC didnt support tamil fonts , I am posting my comments in English

Mahesh said...

My comment continues....

I agree, some major problems like climatic change needs global co-operation and understanding, Still I feel patriotism is a necessary attribute esp with a kind of neighbors we have.....
Today so called developed countries are in this commanding position only because of their passion to make their nation shine in global arena rite??

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//உசைன், இந்து கடவுளை நிர்வாணமாய் வரைந்தது தான் அவர் குற்றம் என்றால், பிளீஸ் ரிமெம்பர்: ராஜா ரவி வர்மா மஹாலஷ்மிக்கு மேலாடை போட்டு வரையும் வரை, இந்திய பெண் தெய்வ உருவங்கள் எல்லாமே மேலாடை இல்லாமல் தான் இருந்தன....எந்த பழைய கோயிலில் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக்கொள்ளுங்கள்... அஜெந்தா, எல்லோராவில் ஆரம்பித்து, இலங்கையில் இருக்கும் அனுராதாபுரா வரை, எல்லா புராதான பெண்சாமி ஓவியங்களுமே ஆடைஇல்லாதவை தான். அதை எல்லாம் நம் பாரம்பரியம் என்று பெருமை பட்டுக்கொள்ள தெரிந்த நமக்கு உசேனின் ஓவியத்தை மட்டும் ரசிக்க தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? //

ஆதிகாலத்துல எல்லா மனுஷனும் துணியில்லாமத்தான் சுத்தியிருப்பாங்க... அதுக்காக இப்ப போட்டோ எடுத்தாலோ, அல்லது படம் வரைஞ்சாலோ எல்லாத்தயும் அம்மணமா படம் எடுக்கலாமா?
-- Raja

அது சரி(18185106603874041862) said...

//
ஆக நாடு என்பது வெறும் ஒரு நம்பிக்கை தான். மற்ற நம்பிக்கையை போல அதுவும் மாறக்கூடியது தான். சின்ன குழந்தை பிறந்த புதிதில், தன் தாயின் கரங்களையே தன் உலகமாக நினைக்கும். கொஞ்சம் வளர்ந்ததும், அந்த அறையை மட்டுமே தன் உலகமாக நினைக்கும். அதே குழந்தை வளர வளர, தன் வீட்டையும், தன் தெருவையும், தன் ஊரையும், தன் நாட்டையும், தன் உலகம் என்று கருதிக்கொள்ளும். சிலர் இந்த வளர்ச்சியோடே நின்று விடுகிறார்கள். ஆனால் இதை விட அதிக சிந்தனா சக்தியும், பரந்த மனமும் உள்ளவர்களுக்கு நாடு என்பது கூட ஒரு சின்ன வட்டம் தான். அதனால் அவர்கள் தன் கண்டத்தையும், அதையும் தாண்டி, இந்த மொத்த பூமியையும், அதற்கு அப்பாலும், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் தன் உலகமாகவே கருதுகிறார்கள். அவர்களை பொருத்தவரை இந்த அண்ட சராசரமே அவர்களுக்கு உலகம் தான்…..
//

இது ரொம்ப நல்ல கருத்து...சைக்கலாஜிக்கலா உண்மையும் அது தான்..அப்பா அம்மா ஆண்டிப்பட்டில பொறந்து வளர்ந்திருந்தாலும், அமெரிக்காவுல பொறந்து வளர்ந்த குழந்தை அமெரிக்கனா தான் வளரும்...ஆண்டிப்பட்டிக் காரனா வளராது...

ஆனா டாக்டர், ஹூசைன் இந்த எண்ணத்துல கட்டார் குடியுரிமை வாங்கலை...அதுவும் கூட உண்மை தானே?

அது சரி(18185106603874041862) said...

//
Dr N Shalini said...

உசைன், இந்து கடவுளை நிர்வாணமாய் வரைந்தது தான் அவர் குற்றம் என்றால், பிளீஸ் ரிமெம்பர்: ராஜா ரவி வர்மா மஹாலஷ்மிக்கு மேலாடை போட்டு வரையும் வரை, இந்திய பெண் தெய்வ உருவங்கள் எல்லாமே மேலாடை இல்லாமல் தான் இருந்தன....எந்த பழைய கோயிலில் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக்கொள்ளுங்கள்... அஜெந்தா, எல்லோராவில் ஆரம்பித்து, இலங்கையில் இருக்கும் அனுராதாபுரா வரை, எல்லா புராதான பெண்சாமி ஓவியங்களுமே ஆடைஇல்லாதவை தான். அதை எல்லாம் நம் பாரம்பரியம் என்று பெருமை பட்டுக்கொள்ள தெரிந்த நமக்கு உசேனின் ஓவியத்தை மட்டும் ரசிக்க தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? பிரச்சனை யாரிடம்?

//

இதையே எல்லாரும் சொல்றாங்க டாக்டர்...ஆனா, இந்துக் கோவில்ல மேலாடை இல்லாம இருக்கிற சிலைங்களோட கால கட்டம் என்ன?? அந்த காலகட்டத்துல இருந்த மாதிரி தான் நாமெல்லாம் இன்னைக்கும் ட்ரஸ் பண்றோமா? அந்தந்த காலத்துக்கு ஏத்த மாதிரி தான் சாமிக்கும் கூட ட்ரஸ் பண்றாங்க...

அஞ்சாம் நூற்றாண்டுல பல ஆண்கள் பெண்களே கூட மேல ட்ரஸ் போடாது இருந்திருக்கலாம்...அதுக்காக இன்னைக்கும் அவங்க மேல ட்ரஸ் போடக் கூடாதுன்னு சொல்வீங்களா?

(நீங்க சொல்வீங்கன்னு சொல்லவரலை...ஜஸ்ட் ஒரு ஆர்க்யுமென்ட்டுக்காக கேட்கிறேன்)

சிங்காரம் said...

மக்ளே! தவறான தகவலை தந்துள்ளாய்.
\\\ஒரு காலத்தில் கன்னியாகுமரி பகுதி என்பது திருவான்கூர் அரசரின் சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு தொகுதி மட்டுமே. 1947ழுக்கு முன் இந்த ஊர் காரர்கள் எல்லோரும் இந்தியர்கள் இல்லை, திருவான்கூர்காரர்கள் தான். ஆனால் 1947ழுக்கு பிறகு அவர்களின் அடையாளம் மாறி, இந்தியர்களாய் தங்களை நினைத்துக்கொள்ள அவர்கள் பழகிவிட்டார்கள்.///
இந்தியா சுதந்திரம் அடயும் முன்பு, சிறு சிறு ராஜ்யங்களாக மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.இன்றைய பாக்கிஸ்தான், வங்க தேசம் உட்பட அனைத்துமே இந்தியாதான். ஆனால் தனித்தனி பகுதிகளாக மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது.அதில் ஒன்றுதான் திருவிதாங்கூர் ராஜ்யம். திருவனந்த புரத்திலிருந்து தென்மலை, ஆரியங்காவு மற்றும் செங்கோட்டை வரையிலும், குமரி மாவட்டமும் சேர்ந்த்ததுதான். 1956ம் ஆண்டு ஏற்பட்ட மொழிவாரி மாநில அமைப்பின் படி, செங்கோட்டை தாலுகாவும், குமரி மாவட்டமும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கடவுளை நிர்வாணமாக வரைந்தவர் வேறு மதத்தவர் என்பதாலே இந்த பிரட்சனை வந்துவிட்டது. அதே மதத்தினை செய்திருந்தால் பிரட்சனை வந்திருக்காது. எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே!. உங்களுக்குத் தெரியததா.

சிறுவயதிலிருந்தே அம்மனை அம்மாவாக வணங்கி வந்தவர்களுக்கு, கொஞ்சம் கோபம் வரதானே செய்யும்.