Monday, March 8, 2010

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 30

எந்த மாதிரி ஆணை தேர்ந்தெடுத்தால் ஓகே, எந்த மாதிரி ஆணாக இருந்தால் அவனை உடனே கழற்றிவிட வேண்டும் என்பது பற்றி எல்லாம் இத்தனை வாரங்களாக பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் வரிசையில் அடுத்து நாம் கவனிக்க வேண்டிய மஹா முக்கியமான ஒரு அம்சம் அந்த ஆணின் வாழ்வில் ஏற்கனவே வந்து போன பெண்கள்!

நாம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பேசிக்கொண்டோம், ஒரு ஆணின் மூளை வடிவமைப்பிற்கும் பெண்ணிம் மூளை வடிவமைப்பிற்கும் எக்கசெக்க வித்தியாசங்கள் உள்ளன. இதனாலேயே ஒரு ஆணால் பெண்ணை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியாது, காரணம் பெண் உலகை பார்க்கும் விதமும், விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் விதமும், ஒவ்வொன்ருக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும், ரியாக்ட் செய்யும் விதமும் ரொம்பவே வித்தியாசமானவை. இவ்வளவு வித்தியாசங்களையும் அவன் திடுதிப்பென்று பார்த்தால் ரொம்ப குழம்பிப்போய்விடுவான், எப்படி கையாள்வது என்று தெரியாமல் திண்டாடுவான், இதனால் உறவு ஊசலாட ஆரம்பித்துவிடும்.

இப்படி திடுதிப்பென்று ஒரு பெண்ணை அணுகி, அறியாமையினால் அவன் சொதப்பி காரியாத்தை கெடுத்து விட கூடாதென்றால், அவனுக்கு ஏற்கனவே சில பெண்களுடனாவது பரிச்சயம் இருந்து, ஓகோ பெண் என்றால் இப்படி இப்படி வித்தியாசமாய் தான் யோசிப்பாள், செயல் படுவாள். அவள் இப்படி இப்படி சொன்னால், செய்தால் அதற்கு இது இது தான் அர்த்ஹ்டம். அவளை நான் இப்படி இப்படி கையாண்டால், மேட்டர் ஓவர் என்று புரிந்த கொள்ள வாய்ப்பு இருந்தாக வேண்டுமே. அந்த வாய்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்த, அவன் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்தாக வேண்டும்.

இப்படி இருந்தே ஆக வேண்டிய அந்த அதிமுக்கிய பெண்கள் வரிசையில் முதலில் வருவது அவனுடைய அம்மா. ஆண் பெண் உறவில் இருக்கும் அந்நியோநியத்தை கொஞ்சம் சயிண்டிஃபிக்காக நீங்கள் உற்று நோக்கினால், உடனே புரியும் விஷயம், காதல் என்பது தாய் சேய் பாசவெளிபாடின் ஒரு தொடர்ச்சி! ஒரு தாய் எவ்வளவு ஆசையாக தன் குழந்தையின் உடலை தொட்டு ரசிக்கிறாள், கட்டிபிடித்து, முத்தமிட்டு, கொஞ்சி, தாலாட்டு, சீராட்டி, பராமறித்து, அவள் உறவாடும் இந்த விதம் தான் குழந்தையின் மூளையில் புதிய நரம்பு இணைப்புக்களை ஏற்படுத்துகின்றன. இப்படி தாயின் ஸ்பரிசம் மற்றும் கொஞ்சுதல் எல்லாம் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ரொம்பவே அதிகமாக தேவை படுகின்றன, காரணம் இப்படி தாயோடு ஒட்டி உறவாடும் போது, ஆண் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தில், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்ற தூண்டுதலை ஏற்படுகிறது. இது தான் இந்த ஆண் குழந்தையின் பிற்கால தாம்பத்திய வாழ்வின் தரத்தையும், இதனால் ஏற்படக்கூடிய வாரிசுகளின் எண்ணிக்கையையும் நிர்நயிக்கும்.

ஆக, ஒரு ஆண், பெண் என்றால் இப்படி தான் இருப்பாள் என்று அனுமானிப்பதே அவன் அம்மாவை வைத்து தான். அவனுக்கு அம்மாவே இல்லை என்றால்? குறைந்த பட்சம், அம்மா மாதிரி வேறு ஒரு செவிலி கேரெக்டர் இருந்து, இதே புரிதலை ஏற்படுத்தினாலும் போதும், அல்லது தன் நண்பர்களின் அம்மாக்களை பார்த்து பரிச்சயப்பட்டாலும் போதும்.

அம்மா இருக்கிறாள், ஆனால் அவள் கொஞ்சம் முசுடு, குழந்தையிடம் அன்பாக இருக்கவெல்லாம் அவளுக்கு தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன்…..இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா, என்று நீங்கள் ஆட்சரியப்படலாம், ஆனால் உண்மை என்ன தெரியுமா? தாய்மை உணர்வு என்பது மட்டும் தான் இயற்கையில் வருவது, அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற சமாசாரம் எல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விஷயமே.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த ஒரு மாமியார் கேரக்டரை எடுத்துக்கொள்வோமே, இந்த லேடி பிறந்த போது அவர்கள் வீட்டில் தரிதிரம் தலைவிரித்து ஆட, இவளை வளர்க்க முடியாமல் தன் அம்மாவிடம் கொடுத்து விட்டாள் தாய். ஆயா, ஆயா, என்று தன் பாட்டியோடே ஒட்டிக்கொண்டு வளர்ந்தாள் மகள். பாட்டி தனக்கிருந்த எத்தனையோ வேலைகளில் பிஸியாக இருந்ததால் குழந்தையை கொஞ்ச எல்லாம் அவருக்கு நேரமே இல்லை. எப்போதும் சாமி கும்பிடுவதும், காசு பணத்தை பற்றிய கவலையிலேயே இருப்பது, என்று பாட்டி காலம் கழிக்க, பேத்தியும் சின்ன வயதிலேயே சாமி கும்பிடுவது, பாட்டியின் காசை எண்ணித்தருவது, வீட்டை சுத்தம் செய்வது, என்றே பழகி விட்டாள். இந்த பெண் வளர்ந்து திருமணம் செய்துக்கொண்ட போது தான் இந்த வளர்ப்பு முறையின் சிக்கலே வெளிபட ஆரம்பித்தது.

இவள் கணவனோ எக்கசெக்க ஆசையோடு அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய, இவளோ, “சீச்சீ, எச்சில் பட்டு வட்டது” என்று அவனை தள்ளிவிட்டு ஒதுங்கி ஓட, கணவனுக்கு அவளோடு தாம்பத்தியம் கொள்வதே பெரிய போராட்டம் ஆனது. இவள் காமநீர்களை அசுத்தம் என்று நினைத்தால், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும் பெரிய ஸ்வாரசியமாக அவளுக்கு படவில்லை. அவன் ஆசையாக பேசினாலும், “எதற்கு வெட்டியாக பேசிக்கொண்டிருக்கிறாய், போய் சம்பாதிக்கிற வழியை பார்” என்பாள். தனது இஷட பொழுது போக்கான இறைவழிபாட்டில் மணிகணக்கில் மூழ்குவாள். இறைவழிப்பாட்டு நாட்களில் இனசேர்க்கைக்கு இணங்க மாட்டாள்.

மனைவி இப்படி எந்த செக்ஸ் உணர்ச்சியுமே இல்லாத ஜடமாய் இருப்பது போக போக கணவனை கஷ்டப்படுத்த, தன் காதல் தேவைகளை தீர்த்துக்கொள்ள, கணவன் தன் பல பெண் தோழிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். இந்த எல்லா தோழிகளுமே, அவன் காதல் திறமைகளில் திக்கு முக்காடி போவார்கள், ஆனால் அவன் மனைவி மட்டும், சீ கிட்ட வராதே என்றே ஒதுங்கி ஓடுவாள். இருந்தாலும் இவன் விடா பிடியாக மனைவியை உறவுக்கு உட்படுத்தியதில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை தன்னுடன் வைத்து வளர்க்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. குழந்தை உச்சா போனான், ஆய் போனான், உடம்பு சரியில்லாமல் அவள் மேலேயே வாந்தி எடுத்தான், இதை எல்லாம் அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பையனை, தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு தன் கணவனுடன் வேறு ஊருக்கு போய் அவன் சம்பாதியத்தை பாதுக்காப்பதையே தன் முக்கிய கடமையாகக்கொண்டாள். இதற்கிடையில் அவள் மீண்டும் கருவுற்று இன்னொரு ஆண் மகனை பெற்றெடுத்தாள். துரதுஷ்டவசமாக இந்த பையன் பிறந்ததும் அவள் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து விட, முதல் மகனை தன் அம்மாவிடமே விட்டு விட்டு, இளையவனை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு போய் விட்டாள்.

முதல் மகன் தன் பாட்டி, கொள்ளுபாட்டி, அத்தை, மாமி, அவர்களின் மகள்கள் என்றூ பல பெண்களின் அரவணைப்பில் வளர்ந்ததால் அவன் நார்மல் ஆண் ஆனான், திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியெல்லாம் பெற்று சௌக்கியமாய் இருந்தான். ஆனால் இளைய மகன் தன் தாயுடன் தனிமையிலேயே வளர்ந்தான். அவனை அம்மா கட்டிப்பிடித்ததில்லை, கொஞ்சியதில்லை, முத்தமிட்டதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடு மட்டும் போடுவாள், அதனால் வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமல், நன்றாக சாப்பிட மட்டும் அவனுக்கு தெரிந்திருந்தது. அவன் அம்மா அவனை வெளியிலேயே அனுப்பாமல் வீட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்ததால், அவனுக்கு மாற்று தாய்கள் கூட யாரும் அமையவில்லை. அவன் இயல்பிலேயே அன்பானவன், மென்மையானவன், எல்லோரிடமும் பிரியமாக இருக்க அவனுக்கு பிடிக்கும் தான்…..ஆனால் அதை எப்படி செய்வது என்று அவனுக்கு கடைசி வரை தெரியவே இல்லை. அதனால் கூச்ச சுபாவியாய், வெளி நபர்கள் யாரிடமும் அதிகம் பேசாமலேயே வளர்ந்து ஆளானான்.

அவன் அம்மாவை மட்டுமே பார்த்து வளர்ந்தான், அம்மாவோ, டோட்டல் அப்நார்மல், என்பதால் அவனுக்கு பெண்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற வித்தை கடைசி வரைக்கும் தெரியவே இல்லை. அதை பற்றி அவன் அப்பாவிற்கு ரொம்ப கவலை, தனக்கு பின் தன் மகன் தனிமைபட்டு போய்விடக்கூடாதே என்று அவர் அரும்பாடுபட்டு, அவனை புரிந்துநடந்துக்கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாய் பார்த்து தேர்ந்தெடுத்து அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். அவனுக்கும் அவன் மனைவி மீது கொள்ளை ஆசை தான் என்றாலும், ஒரு பெண்ணிடம் ஆசையை எப்படி வெளிபடுத்துவது என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

இதற்கிடையில் வழக்கமான மாமியார் மருமகள் பிரச்சனைகள் கிளம்பிவிட, அதையும் எப்படி கையாள்வது என்று தெரியாமல் பையன் தத்தளிக்க, எல்லா குழப்பங்களும் சேர்ந்து அந்த பையனின் திருமண வாழ்க்கை பெரிய தோல்வியில் முடிந்தது…..அவன் நல்லவன் தான், அவன் மனைவியும் அவன் மேல் உயிராகத்தான் இருந்தாள், ஆனால் திருமணம் ஏன் தோற்றுப்போனது என்று அனலைஸ் செய்து பார்த்தால், அவன் அம்மாவின் அப்நார்மல் தனம் தான் அதற்கு வேர் காரணம் என்பது புரியவந்தது. தாயின் அரவணைப்பே இல்லாமல் வளர்ந்த இந்த அம்மாவிற்கு தன் கணவனிடமும் காதலாய் வாழ தெரிந்திருக்கவில்லை, தன் மகனையும் அவள் கட்டித்தழுவி கொஞ்சாமல் விட்டதால், “இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” என்கிற இந்த லிங்க்கே அவள் மகனின் மூளையில் ஏற்பட்டிருக்கவில்லை. இதே தாய்க்கு பிறந்த மூத்த மகன் மட்டும், பல செவிலித்தாய்களின் உபயத்தால், சரியான நரபு இணைப்புக்களை பெற்றுவிட அவன் வாழ்க்கை தப்பி இருந்தது.

ஆக, ஸ்நேகிதிகாள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண், உத்தமனாக, நல்லவனாக, உயர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் அம்மா ஒரு உதவாக்கரையாக இருந்தால், அது உங்கள் உறவை பல விதங்களில் பாதிக்கும் என்பதால் வெறும் அந்த ஆணை மட்டும் வைத்து உறவை முடிவு செய்துவிட முடியாது. அவன் அம்மா நார்மலா, அப்நார்மலா என்று நிர்ணயிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்….இது பற்றி எல்லாம் மேலும் பல சமாசாரங்கள் அடுத்த ஸ்நேகிதியில்.

34 comments:

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் டாக்டர் :)

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

இன்னிக்கு மகளிர் தினமாம். ஒரு மகள் நட்சத்திரமானது மகிழ்ச்சியா இருக்கு.

Rajan said...

வாழ்த்துகள்!

Anonymous said...

I was totally taken aback with my views !
Good to read articles like this.
Infact this opens up a whole new dimension of viewing how men differs in society.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண்ணிருக்கிறாள் என்பதற்கு இதுதான் சரியான காரணம்!

Robin said...

நட்சத்திர பதிவரானதற்கு வாழ்த்துக்கள்!
உங்களை போன்ற நிபுணர்களின் படைப்புகள் தமிழ் இணையத்திற்கு மிகவும் அவசியம்.

எம்.எம்.அப்துல்லா said...

நட்சத்திரவார வாழ்த்துகள் டாக்டர்.

தேவன் மாயம் said...

அவளை நான் இப்படி இப்படி கையாண்டால், மேட்டர் ஓவர் என்று புரிந்த கொள்ள வாய்ப்பு இருந்தாக வேண்டுமே. அந்த வாய்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்த, அவன் வாழ்க்கையில் பல பெண்கள் இருந்தாக வேண்டும். ///

இதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்!!!

கோவி.கண்ணன் said...

தமிழ்மணம் நட்சத்திரமாக எழுதுவதற்கு நல்வாழ்த்துகள் மேடம்.

சென்னையில் நீங்கள் நடத்திய குட் டச் பேட் டச் நிகழ்ச்சியில் உங்கள் பேச்சைக் கேட்டு இருக்கிறேன்.

பெண்கள் தினத்தில் நீங்கள் நட்சத்திரமாக தமிழ்மணத்தில் எழுதுவது பெண் பதிவர்களுக்கு தனிச் சிறப்பு சேர்க்கிறது.

manjoorraja said...

நட்சத்திர வாழ்த்துகள்.

அமுதா கிருஷ்ணா said...

கடைசி பத்தி கொஞ்சம் புதிய கருத்தாக இருக்குது...

gulf-tamilan said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்!!!

Dr.Rudhran said...

வாழ்த்துகள் ஷாலினி

சைவகொத்துப்பரோட்டா said...

தாயின் அரவணைப்பு கிடைக்காவிட்டால் இந்த அளவு பாதிப்பு ஏற்படுமா!!
தெளிவான பதிவு, வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

அன்பு தங்கச்சி சாலினுக்கு நட்சத்திர வாழ்த்துகள்."என் மனைவி உங்களை ரொம்ப கேட்டதாக சொல்ல சொன்னாள்"

மாதேவி said...

வாரநட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரைகள் சில படித்துள்ளேன் பயனுள்ளவை.

Anonymous said...

Very good post! I never know you before this Star week! Keep up good work.

சின்னக்குட்டி said...

வணக்கம் எனது நட்சத்திர வாழ்த்துக்கள் முதற்க்கண். நீங்களும் வலை பதிவு எழுதுவது நீங்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாய் வந்ததும் மூலம் அறிந்து கொண்டேன் .நானும் சக வலை பதிவன் என்பதை உங்களுக்கு அறிமுக செய்து கொள்ளுகிறேன்...நீங்கள் குமுத்த்தில் உரையாற்றிய வீடியோவை எனது பதிவு ஒன்றில் முன்பு ஒருமுறை இணைத்து இருந்தேன் .அதை இத்தருணத்தில் கூறுவது பொருத்தமாய் இருக்குமென்று நம்புகிறேன் அதை பார்க்க இங்கே அழுத்தவும்

அமர பாரதி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் டாக்டர். பயனுள்ள பதிவுகளை தொடர்ச்சியாகத் தரும் உங்களும் மறுபடியும் வாழ்த்துக்கள்.

ரவி said...

கொஞ்சம் எழுத்துப்பிழைகளை ஹேண்டில் செய்யலாமே மேடம் ?

நல்ல பதிவில் எழுத்துப்பிழைகள் வருவது வருத்தம். ஒருமுறை படித்து பார்த்தபின் பப்ளிஷ் செய்யலாமே ?

தெய்வமகன் said...

டாக்டர்,

உங்களை TV Channels and Kumudam Web TV வாயிலாக அறிவேன். தாங்கள் "Good Touch, Bad Touch" என்கிற நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிந்தேன், பயனுள்ள கருத்துக்களை சமுதாயத்திற்கு எடுத்துசொல்வதற்கு பாராட்டுக்கள்!

-Govind

sumathi said...

I didn't know about this star. Congratulations!. I'd like to read your articles. Interesting to know that root cause of men problem come from their mom. Keep writing!. Can't wait to read next one!!

seethag said...

delighted to see your work shalini. I am a child and adolescent shrink currently working in australia.My interest in infant mental health.I am really impressed to see your post on this matter.One of my friends a publisher asked me to write in tamil .I do want to .But seeing your work ,i am thinking do i have to duplicate?I am interested to do soem work similar to your PSRF once go back to india.awareness seems very important ,not just about Psychiatry but even our family functioning which has its own difficulties as opposed to the western nuclear family system.

Very proud to see a young shring being honored on international womens day as natchathram.
good luck.

குலவுசனப்பிரியன் said...

//தாய்மை உணர்வு என்பது மட்டும் தான் இயற்கையில் வருவது, அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற சமாசாரம் எல்லாம் பார்த்து தெரிந்துக்கொள்ளும் விஷயமே.//
நுணுக்கமான பார்வை. சிலர் நன்றாக சமைத்துப் போடுவது மட்டுமே தாய்மை என்று நினைக்கிறார்கள். என் தம்பி எங்கள் அம்மாவை, தூரத்தில் உள்ளதால் அந்த நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க கூடாது என்று சாமியை வேண்டுகிறாயே, நீ எல்லாம் ஒரு அம்மாவா என்று கேட்டவன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் டாக்டர்

Gokul R said...

Dear Dr.Shalini,

I would like you to burrow on with the "Scientific" basis and philosophy behind the "Extension of parental affection between mother-son towards husband-wife love relationship". I request an article (preferably in English as it would comfort technical terms and scientific nuances,in your English blog, probably) from you on this in the near future.

சத்ரியன் said...

ஷாலினி அக்கா,

ஆம்பிள்ளைகளுக்கு பின்னாடி இத்தனைப் பெண்களின் பங்களிப்பு இருக்கா?


நல்ல தகவலா இருக்கே...!

வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி டாக்டர்.
நட்சத்திர வாழ்த்துகளும் :-)

மர்மயோகி said...

எழுத்துப் பிழைகளை கவனிக்கவும்..
//“இதோ, உன்னை தொட்டு, சொந்தம் கொண்டாடுகிறாளே, இவள் தான் பெண். இவளோடு இருக்கும் போது ஏற்படும் இந்த ஆனந்தம் தான் ரொம்ப முக்கியம், நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் இதே மாதிரி ஒருத்தியை கண்டு பிடித்து அவளோடு கூடிவிடு” //
அப்போ காதலின் மறுபெயர் "காமம்" தான் என்கிறீர்கள் ..மிகவும் சரி.

வருண் said...

This is my first time here. I find so many "authoritative statements" you make are debatable!

Can your psycho analysis explain, how a woman gets attracted to another woman? I am talking about gays, of course!

You are saying men and women are different and their brain works differently. Fine.

***இதனாலேயே ஒரு ஆணால் பெண்ணை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியாது, காரணம் பெண் உலகை பார்க்கும் விதமும், விஷயங்களை கிரகித்துக்கொள்ளும் விதமும், ஒவ்வொன்ருக்கும் கொடுக்கும் முக்கியத்துவமும், ரியாக்ட் செய்யும் விதமும் ரொம்பவே வித்தியாசமானவை. இவ்வளவு வித்தியாசங்களையும் அவன் திடுதிப்பென்று பார்த்தால் ரொம்ப குழம்பிப்போய்விடுவான், எப்படி கையாள்வது என்று தெரியாமல் திண்டாடுவான், இதனால் உறவு ஊசலாட ஆரம்பித்துவிடும்***

Well, அவன் எங்கே திடுதிப்புனு பெண்ணைப் பார்க்கிறான்? இந்த் உலகத்தில் அவன் பார்க்கும் முதல் ஜீவனே அவனுடைய தாய்தானே? தாயிடம் பால்குடித்து வளரும் அவன் அவள் (பெண்) உணர்வுகளை சிறுவயதிலேயே புரிந்து கொள்ளமாட்டானா?

-------------
Just wanted say a "hi" as you are star for this week. That is why the above response! Take it easy, Dr.S!

Deepa said...

நட்சத்திர வாழ்த்துகள் டாக்டர்!

v.pitchumani said...

பெண்குழந்தைகள் மட்டும் ஆண்களை எப்படி புரிந்து கொள்கிறார்கள. அந்த காலத்தில் தற்போது வரை குழந்தைகளை ஆண்கள் வளர்ப்பதில் பராமரிப்பதில் அவ்வளவாக கவனம் செலுத்துவது இல்லை. தாய் போல் தந்தை இருப்பதில்லை அணைப்பதில்லை அப்படி இருக்கும் பொழுது பெண் குழந்தைகள் எப்படி ஆண்களை புரிந்து கொள்கிறார்கள. ஆண்களை விரும்புகிறார்கள். லாஜிக் எங்கேயோ இடிக்கிறது

கயல் said...

வாழ்த்துக்கள்!

திவ்யாஹரி said...

அக்கா.. நீங்களும் பதிவு எழுதிகிட்டு இருக்கீங்களா? என்னால நம்பவே முடியல.. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. உங்க போட்டோ இருக்கேன்னு வந்து பார்த்தா அது நீங்களாவே இருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.. நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள் அக்கா..

KAVIN said...

எல்லா படைப்புகளும் அருமை. நட்சத்திர வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன வேண்டுகோள். எல்லா ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? பகுதிகளையும் ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? என்னும் TAG பண்ணினால் வசிக்க இலகுவாக இருக்கும்...
அதே போல் மற்றைய படைப்புகளையும் TAG பண்ணினால் நன்று.