Monday, January 10, 2011

யார் தமிழர்?

தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?


”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.

அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.

அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?

அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?

இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”

தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.

சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.

அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!

கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?

எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!

அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?

ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?

28 comments:

ஜோதி கார்த்திக் said...

i thought you are going to support / oppose with seeman when i saw the title ,
Its good time we escaped from another politics :)

jayakumar said...

yes...the first living being is the mother and father of all living beings...no one is realize this...

jayakumar said...

dear dr you,yourself writing articles..or do you have assistants to maintain blogs...how many hours you are working in a day?...

gandhibabu said...

superb madam..(nandraga irundhadu)

gandhibabu said...

super madam...really superb

Sathish Murugan . said...

அன்பு அக்கா,
யார் தமிழர்?

இதிலென்ன அக்கா சந்தேகம். யார் ஒருவர் வெளிநாட்டுக்கு போனாலும் தாய் மொழி தவிர்த்து பிற மொழி பேசி மகிழும் மனிதன், தன இனமே அழிக்கப்படும் போதும் தனக்கென்ன எனும் மனோபாவம் கொண்ட மனிதன். எத்தனை பெரிய ஊழலாயிருந்தாலும் அதை மறந்து இலவசத்துக்கு மயங்கும் மனிதன், இன்னும் சற்று... அவர்களே தமிழர். சரியா?

உண்மையில் இந்த பதிவில் அறிவியல் சாட்டைகொண்டு விலாசிவிட்டீர்கள் கல்தோன்றி மண்தோன்றா வரலாற்றை !!!

முன்னது வம்புக்கு, பின்னது தங்களின் எழுத்துக்கு...

அன்புடன்,
சதீஷ் முருகன்

Rekha said...

Very Nice Article..From your article I am able to understand that all r one and we are global citizens..But most politicians are playing around with caste,religion,language and try to separate people which is riduclulous

Anonymous said...

Subject: பையன்களுக்கு உங்கள் மேல் மரியாதை இருக்கிறது. ஈர்ப்பு இல்லை.


Madam,

Until now I read 3 of your books. Day before yesterday I completed reading 'aalai asaththum arubathu kalaigal'. I have become your fan. My uncle son is getting married soon. He and his brother are too reading your books. I introduced your blog too to them. My uncle son too is a fan of you. He has great respect on you. But, he dont have attraction on you. He is afraid of marrying a girl like you!!! "டாக்டர் ஷாலினி போன்ற அறிவு அதிகம் உள்ள பெண்ணை கல்யாணம் செய்து கொள்வாயா?" என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன், "முடியாது.எந்த தப்பும் பண்ண முடியாது. Easyயா கண்டு பிடிச்சுடுவா. அறிவு அதிகம் உள்ள பெண்ணுக்கு என் மேல் பைத்தியக்காரத்தனமான ஈர்ப்பே ஏற்படாது" என்று சொன்னான். I'm too like him. I too dont like marrying a girl who is having more knowledge as like you. I think most of the boys r like us only...Boys have respect on you but they dont have 'ஈர்ப்பு' on a gal like you...

Any way you r honest in telling the truth about girls in 'aalai asaththum arubathu kalaigal'...People may mis-consider you as a 'tricky person' if you are so much honest in telling the truth as it is...Because truth seems to be a negative one for fools...people r fools...

Remember me......M.....

Anonymous said...

Subject: பையன்களுக்கு உங்கள் மேல் மரியாதை இருக்கிறது. ஈர்ப்பு இல்லை.


Madam,

Until now I read 3 of your books. Day before yesterday I completed reading 'aalai asaththum arubathu kalaigal'. I have become your fan. My uncle son is getting married soon. He and his brother are too reading your books. I introduced your blog too to them. My uncle son too is a fan of you. He has great respect on you. But, he dont have attraction on you. He is afraid of marrying a girl like you!!! "டாக்டர் ஷாலினி போன்ற அறிவு அதிகம் உள்ள பெண்ணை கல்யாணம் செய்து கொள்வாயா?" என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன், "முடியாது.எந்த தப்பும் பண்ண முடியாது. Easyயா கண்டு பிடிச்சுடுவா. அறிவு அதிகம் உள்ள பெண்ணுக்கு என் மேல் பைத்தியக்காரத்தனமான ஈர்ப்பே ஏற்படாது" என்று சொன்னான். I'm too like him. I too dont like marrying a girl who is having more knowledge as like you. I think most of the boys r like us only...Boys have respect on you but they dont have 'ஈர்ப்பு' on a gal like you...

Any way you r honest in telling the truth about girls in 'aalai asaththum arubathu kalaigal'...People may mis-consider you as a 'tricky person' if you are so much honest in telling the truth as it is...Because truth seems to be a negative one for fools...people r fools...

Remember me......M.....

Unknown said...

who else we r all monkeys

Unknown said...

சந்தேகம் இன்றி அனைவரும் குரங்குகள் தான்

M.Natarajan, Advocate, Kumbakonam, PIN-612001 said...

Just now I have come across your articles. They are very informative and educative

Anonymous said...

ரொம்ப நாளாக நானும் இப்படி ஒரு பதிவை எழுத எத்தனித்து இருந்தேன். நல்லதொரு பதிவு......... யார் தமிழர்கள் ? என்பதற்கு பதில் அகத்திலும், புறத்திலும் தமிழ் பேசி, தமிழராய் வாழ்பவர்கள் தமிழர்கள் ... வெளிநாட்டு, வெளிமாநிலத்தவராய் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழ் பேசி வீட்டிலும், வெளியிலும் வாழ்பவர்கள் தமிழர்கள். தமிழ் பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் தமிழ் தெரியாமல் வெளிநாட்டில் வாழ்பவர்கள் தமிழ் வம்சாவளியினர் அவ்வளவே ! தமிழ்நாட்டில் தமிழை இழுக்காக எண்ணி ஆங்கிலம் பாதி தமிழ் பாதி கலந்து குழைந்து வாழ்பவர்கள் குறைத்தமிழர்கள் .. ரெண்டும் கெட்டாங்கள்......... தங்கள் பதிவு www.tamilcharam.com யில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது... நானே பரிந்துரைத்தேன் ............ நன்றிகள்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

தமிழனாக பிறந்த அனைவரும் வள்லலார் எழுதிய திரு அருட்பாவை அவசியம் படிக்க வேண்டும்.அதில் உள்ள கருத்துக்கள் வேறு எந்த நூலிலும் இல்லை உலகின் ரகசியங்கள் உயிர்களின் ரகசியங்கள்,இறைவனின் உண்மைகள் அனைத்தும் ஒவ்வொரு மனித பிறவி எடுத்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டும்.மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டும் அறிய பொக்கிஷமாகும்.தமிழானக பிறந்த நாம் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.அன்புடன் -கதிர்வேலு.

ஊரான் said...

உங்களின் எளிமையான பல்வேறு பேட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளேன். இப்பொழுதுதான் உங்களின் வலைப் பூவை பார்க்கிறேன். படித்துவிட்டு கருத்திடுகிறேன். வாழ்த்துக்கள்!

Anonymous said...

"Began with a bang and ended in a whimper"

It aptly sums up your article.

"We all evolved from monkey and one human ancestor; and so, we must feel that we are all one" - maybe, science. but impracticable idealism.

We cant solve our human issues like racism, nationalism etc. using science.

Idealism? because humans will live on this earthe, identifying with the fellow members who live with them, or called their race, always. Even after migrating to USA, the land of melting pot of cultures, the Jews come together as a race and share their lives. In UK, in Russia, even in Mumbai.

So also, Tamil paarppnars. In Delhi, and in Mumbai, they live together, cultivating their own culture, apart from other Tamils. In USA, too, they r grouping.

So setting aside science and idealism, could you come up with another serious blog to answer the qn:

Who is a Tamilian ?

Dinesh said...

Very nice!
நல்ல பதிவு.

யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்பதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

So Madam,
What is your conclusion?
Who is tamilians in reality ?

Please give your concluding inference..

Anonymous said...

I like to clarify the 'kalthondri manthonraaa'. Kal does not means stone, kal = life in/out of a hill (big rock)
Mann is not referred to soil, mann= the practice of agriculture. Sothe phrase means tamils have evolved even b4 these two aspects of human evolution happened in other groups. If contradictory others could clarify.

jothi said...

//இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், //

மிக‌ சுவார‌ஸ்ய‌ம்.

Anonymous said...

//உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். //

இரண்டுமே தவறான தகவல்கள்.

Anonymous said...

யார் தமிழர்கள்???

திருக்குறள், பொங்கல் விழா,தமிழர் பெருமை, தமிழ் உணர்வு, செம்மொழி தமிழ்,
தமிழில் குழந்தைகளுக்கு பெயரிடுதல்,சாதனை புரிந்த பச்சை தமிழர் – இவைகளைப்பற்றி பேசினால் ஆர்வம் காண்பிக்காதது மட்டுமல்லாமல் கிண்டலடிக்கும் நம்மக்களும்/ வீட்டில் தமிழ் பேசாத அணைத்து தமிழ் பேசும் மக்களும்- தன் சாதி அடையாளமாக சமஸ்கிருதம் கலந்த தனி அடையாள பெயர் வைத்திருப்பவர்களும் தமிழர்கள் அல்லர்….
இந்த கூட்டம் இல்லாத மற்ற கனவிலும்/நனவிலும், வீட்டிலும், வெளியிலும்,
உணர்விலும் உள்ள – இளிச்ச வாயன்களும்/ ஏமாளிகளும்/ சொரனையற்றவர்களும்/ வெட்டுரவனை நம்புகிறவர்களும்,பகுத்தறிவை பயன்படுத்தாததும் ஆன அனைத்து மக்களும் – தமிழரே!!!!

Anonymous said...

பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?- Dr. V. Pandian….

நன்றாகச் சொன்னீர்கள். எத்தனை பேருக்கு புரியபோகிறது???

தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – எல்லாருக்கும் பேராசை- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே???

கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? DK/ DMK – கட்சிகளை TK/TMK என்று மாற்ற அடம் பிடித்தால்- இருக்கும் மற்றவர்களும் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு. தமிழா இன உணர்வு கொள்.

Anonymous said...

தில்லி தழிழ்ச் சங்கம் நடத்தும் இசைப் போட்டிகள்

புது தில்லி, டிச.24: தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் விழா போட்டிகளை நடத்தவுள்ளது. நாளை டிச.25 காலை 10 மணிக்கு 6,7,8ம் வகுப்புகளுக்கும், காலை 11 மணிக்கு 9,10 ஆம் வகுப்புகளும், பகல் 12 மணிக்கு 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் என்று இசைப்போட்டிகளை நடத்தவுள்ளதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலுக்கு… பி.ராகவன் நாயுடு : 9891816605, எம்.ஆறுமுகம்:9868530644, பி.ராமமூர்த்தி: 9968328116, ஏ.வெங்கடேசன்: 9313006908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
தமிழ்ச் சங்கமா? நாயுடுகள் சங்கமமா?? தமிழ் இசை எப்படி வளரும்??? ஹி….ஹி….ஹி…. அதனால் தாங்கோ செயற்கை முறையில் அண்டை மாநில மக்களின் உதவியுடன் தமிழ் இசையை உருவாக்கி கேட்டு/ரசித்து இன்புறுகிறோம்! – செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!.
Pl c link:
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0

Anonymous said...

தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்களை சீண்டிவிட்டது யார்? /சிந்திக்க வைத்தது
எது??? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

வாழ்க அறம் வளர்த்த தமிழகம்!
வாழ்க இன உணர்வு!

ஹி… ஹி…ஹி…
என் அருமை திராவிடத் தமிழா!!!
நாங்க உங்க வீட்டிற்கு வரும் போது எனக்கு என்ன கொடுப்பாய் என கேட்பதும் ;
நீ எங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்பதும் எப்போதும் திராவிடர்களாகிய நாங்கள் கடை பிடிப்பது தானே??? இப்பொழுது
ஏன் நீ சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்???

Anonymous said...

எவன் ஒருவன் இருதலைமுறைக்குமேல் வாழ்ந்திருந்தாலும் அவன் அந்த மண்ணிற்கு சொந்தக்காரன் அவன் அந்த இனத்தோட சொந்தக்காரன்.???

ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

Anonymous said...

பகுத்தறிவு தமிழர்களின் தலைவரே!
தெலுங்கருக்கு – நைனா, அம்மா;
மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி;
தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;
என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாத்தியதை சொல்லுகிறோம்.
கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இருக்கட்டும். கச்ச தீவை இழந்தது போதும். தமிழகத்தில் கையாலாகதவனாக தமிழர்களை ஆக்கியதற்கு மக்கள் தான் தண்டனை கொடுத்துவிட்டார்களே என்று சும்மா இருந்து விடாதீர்கள் ; பாவ மன்னிப்பு பெற உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்-அல்லது கடையை மூடுங்கள் ; தானே நல்ல வழி பிறக்கும் . தர்மம் வெல்லும். —பாமரத் தமிழன்

Anonymous said...

வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

“1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?”

இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம். …. தூ….????
தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!