Monday, September 12, 2011

வேட்டுவ மூளை!

இவன் வேட்டைக்கு உகந்தவனா, இவன் மரபணுக்கள் வேட்டுவ வீரியம் கொண்டவனவா என்று தரம் பிரிந்து பெண்கள் ஆண்களை தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு வேட்டையின் தங்கள் திறமையை நிரூபவித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் எழுந்தது.


ஆனால் இதில் ஒரு பெரிய பிரச்சனையே இருந்தது. புலி, சிங்கம், ஓநாய் மாதிரி மனிதன் பரம்பரை வேட்டுவன் அல்லவே. இவன் குரங்கு வம்சாவழியிலிருந்து வந்தவனாயிற்றே. குரங்குகள் பெரிதாய் வேட்டையாடாதே. அப்படியே பார்த்தாலும், இயல்பில் எல்லா ஜீவராசிகளிலுமே ஆணை விட பெண் தானே அதிக திறமையாய் வேட்டையாடும். இவனோ ஆண், ஆனால் வேட்டையில் சிறந்து விளங்கினாலே ஒழிய பெண் இவனோடு கூடமாட்டாள் என்கிற நிலைமை….ஆனால் இவனுடைய மரபணுக்கள் லேசுபட்டவை இல்லையே…..எந்த சூழ்நிலையிலும் தன்னை மீட்டுருவாக்கம் செய்து ஜெயித்துக்கொண்டே இருக்க முயல்வது தானே இவற்றின் ஸ்பெஷாலிட்டி……அதனால் மீண்டும் தம்மை புதுபித்துக்கொண்டன ஆணின் மரபணுக்கள். எப்படி என்று தானே கேட்குறீர்கள்:

இயற்கையின் பொது விதி: ஆண் பால் தான் பெண்ணை தேடி கண்டு பிடித்து கூட வேண்டும். அதனால் இயல்பிலேயே ஆண்களுக்கு தொலை தூரம் துணை தேடி போகும் தன்மை உண்டு. இன்றும் கூட இளவட்ட ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டாலே, ஏதாவது வண்டி பிடித்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கு போய் அங்கிருக்கும் பெண்களை எல்லாம் தரிசித்துவிட்டு வருவதையே ஒரு ஸ்வாரசியமான பொழுது போக்காய் வைத்திருக்கிறார்களே….அது தான் இயல்பான ஆடவர் குணம். இதற்காகவே ஆண்பால் மூளையில் தூரம், திசை, ஆகியவற்றை எடைபோட வல்ல பிரத்தியேக மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெண்பால் மூளையில் அவ்வளவு வலிமையாக இருப்பதில்லை. அதனால் தான் இன்றும் கூட பெண்களால் திறந்த வெளிகளில் திக்கு திசை அனுமானிக்க முடிவதில்லை. ஏதாவது நில குறிகள் (landmarks) இருந்தால் அவற்றைவைத்து இடங்களை அடையாளம் கண்டு கொள்ள முயல்கிறார்கள் பெண்கள். இப்படி இயற்கை துணை தேடலுக்காக ஆண்களுக்கு இயல்பாக அருளிய இந்த மூளை மையத்தை தான் ஆண்கள் மிக சாமார்த்தியமாக இரை தேடவும் பயன் படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். போக போக இதில் செம்மை தேர்ச்சி பெற்றவர்களாகவும் மாறி போனார்கள்

இயற்கையின் அடுத்த அமைப்பு: ஆண்களின் மூளை இருக்கும் “உருவம் அறிந்து பொருத்தும் தன்மை” இதை stereognosis என்போம். கலவியின் போது பெண்பால் பெரிதாய் மூளையை பயன்படுத்த வேண்டி இருப்பதில்லை. சும்மா வெறுமனே அசையாமல் இருந்தாலே போதும். ஆனால் ஆணின் பணியோ ரொம்பவே நுனுக்கமானது. உடல் பாகங்களை மிக சரியாக ஒரிங்கிணைத்து, பொருத்தினாலே ஒழிய இனவிருத்தி ஏற்படாது. ஆக ஒரு ஜீவராசி தழைப்பதும், சுவடே இல்லாமல் மறிப்பதும் ஆணின் ஸ்டீரியோகுனோஸிஸ் என்கிற இந்த திறமையை பொருத்து தான். அதனால் இயற்க்கை ஆணின் மூளைக்கு மட்டும் இப்படி உருவங்களை உணரும் பிரத்தியேக மையத்தை அமைத்திருக்கிறது. குரங்காய் இருந்த போது இந்த மையத்தை வெறுமனே துணை சேர்க்கைக்காக பயன்படுத்தியவன், மனிதனாய் மாறி மாமிச வேட்டைக்கு போகும் போது, இதே மையத்தை ஆயுதம் தயாரிக்க பயன்படுத்த ஆரம்பித்தான். இதனால் மனித குலமே கூடுதல் பிழைக்கும் திறனை பெற்றது

இப்படி இயறக்கையில் ஏற்கனவே இருந்த அமைப்புக்களை வைத்து ஆண் வேட்டைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டாலும், அடிப்படையில் இவன் வேட்டுவ வம்சாவழி இல்லை…..அதனால் வேட்டைக்குண்டான குறி பார்த்தால், வேகம் உணர்தல், திட்ட மிட்டு கூடி வேட்டையாடுதல், சமிஞ்சையின் மூலமாய் இரைக்கு தெரியாமல் உரையாடிக் கொள்ளுதல், என்பது மாதிரியான மற்ற மையங்கள் அவன் மூளையின் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த மையங்கள் இல்லாமல் வேட்டையாட முடியாதே! இதற்க்காக புது புது மையங்களை மூளையில் உருவாக்கினாலோ, மூளையின் சுற்றளவு பெரிதாகிவிடும். மூளையின் சுற்றளவு ரொம்பவும் பெரிதாகிவிட்டால் மனித பெண்ணின் இடுப்பு வழியாக இந்த பெரிய தலையை பிரசவிப்பது என்பது பெரும் பாடாகிவிடும். இதுவே பெரிய இக்கட்டாகி போனது. மூளையில் புது மையங்களும் வேண்டும், ஆனால் மூளையின் மொத்த சுற்றளவும் பெரிதாகாமல் பிரசவத்திற்கு தோதான சைஸிலேயே இருக்க வேண்டும் என்றால்………..அதற்கும் ஒரு வழியை கண்டு பிடித்தன ஆணின் மரபணுக்கள்: பேச்சுக்கு உண்டான மையத்தை ஒரு வேட்டுவன் ரொம்பவும் பயன் படுத்த முடியாதே…….அவன் பலநாட்கள் அமைதியாய் பதுங்கி இருந்து தானே வேட்டையாடவே செய்வான், ஆக எப்படியும் பேச்சு அவனுக்கு உதவ போவதில்லை. அடுத்து முகத்தை பார்த்து உணர்வை புரிந்துக்கொள்ளும் மையமும் வேட்டையின் போது ரொம்பவும் தேவை படாது………அப்புறம் இவன் பாட்டிற்கு “அய்யோ பாவம் இந்த குட்டி மான்.” என்று முகம் பார்த்து உருக ஆரம்பித்துவிட்டான் என்றால் வேட்டையை கொட்டை விட்டு விடுவான், அப்புறம் இவன் குட்டிகள் பட்டினி கிடக்க நேரிடலாம். அதனால் இந்த முகத்தை பார்த்து ஃபீல் செய்யும் மையமும் அவனுக்கு அவ்வளவாக தேவை படவில்லை. ஒரே சமயத்தில் பல விஷயங்களை போட்டு மனதில் உலப்பிக்கொண்டே இருந்தாலும் அவனால் வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. அதனால் multi tasking மையமும் ஒரு வேட்டுவனுக்கு தேவை இல்லை. பல நாட்களுக்கு ஏக மனதாய் ஒரே குறியாய் கவனம் சிதறாமல் காத்திருந்தால் தான் அவன் வேட்டையில் வெற்றி பெறவே முடியும்……..ஆக கூட்டி கழித்து பார்த்தால், மொழி மையம், முகபாவத்தை கிரகிக்கும் மையம், பலவிஷயங்களை ஒரே சமயத்தில் ஒரிங்கிணைத்து யோசிக்கும் மையம் ஆகியவை எல்லாம் வேட்டைக்கு தேவைபடவில்லை. அதனால் இந்த மையங்களுக்காக அதுவரை ஒதுக்கிய இடத்தை பெரும்பாலும் காலி செய்துவிட்டு, வேட்டைக்கு வேண்டிய புதிய தேர்ச்சிகளை வெற்றிடங்களில் நிரப்பின ஆண்களின் மரபணுக்கள்.

இந்த மாற்றங்களினால் மனித ஆண் கை தேர்ந்த வேட்டுவன் ஆனான். ஆனால் அதற்கு மேல் பெண்களின் மனதையோ, முக பாவத்தையோ புரிந்துக்கொண்டு இனிமையாய் பேசும் தன்மையை அவன் இழந்து விட்டான். இரை கிடக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கை துரத்திக்கொண்டு போய், தவமாய் தவம் கிடந்து அதில் பெரிய ஸ்வாரசியம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். அதனால் ஆண் பெண் என்கிற இந்த இரண்டு பாலினத்திற்கும் பெரிய மன இடைவெளி உருவாக ஆரம்பித்தது. அதற்கு மேல் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்ளுவது கடினமாகிவிட்டது. அனால் புரிந்துக்கொள்வதை விட, பிழைத்துக்கொள்ளுதல் அந்த காலத்தில் முக்கியமாக பட்டதால் ஆணின் மூளை மாற்றங்களை பெண்கள் சட்டை செய்துக்கொள்ளவில்லை…………உணவு கொண்டு வரும் வரை எல்லாமே ஷேமம் தான் என்று இருந்து விட்டார்கள். ஆனால் போக போக ஆணின் மூளை மாற்றத்தினால் பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்தன………அவற்றைபற்றி எல்லாம்………..

32 comments:

karges said...

i've been folowing ur "evolutionary post" thanks to google reader.

ur posts have guided me a lot.. thanks for that.

ny way after private prperty concept came in to picture things have changed a lot.

even i tried to write some blogs. as i am very serios person not able to narrate like u. if possible pls read and comment something on my blog :)

சுபத்ரா said...

Interesting mam..

Anonymous said...

unmayile padika vendiya ondru nandri nanbare

Samantha said...

ரொம்ப எளிமையா புரியும்படி சொல்லிருகிங்க...வெரி நைஸ்

Anonymous said...

Dear Mam,

Great.. informative

வேட்டையை கொட்டை விட்டு விடுவான்

Spelling mistake...

யவனொ ஒருவன் said...

எப்படிகா உங்களால இப்படியெலலாம்
யோசிக்க முடியுது.

yavano oruvan said...

உங்கள பாராட்டி ஒரு comment கொடுத்தா நீங்க அத பொடலனு எனக்கு வருத்தமா இருக்கு. உங்களோட விசிறி இந்த தம்பியை இப்படி வருத்தப்பட வெக்கறது நல்லா இல்லை அக்கா.

DharaniPunithan said...

நன்றி டாக்டர். மீண்டும் பதிவதற்கு.

murali said...

பெண்ணின் மனதையோ முக பாவத்தையோ வைத்து யாராலும் எதுவும் சொல்லிவிட முடியாது.ஏனெனில் இயற்கையாகவே பெண்கள் மனதில் ஒன்றும் வெளியில் வேறு ஒன்றுமாக பேசக் கூடியவர்கள்.சூழ் நிலைக்கேற்ப பேசக்கூடியவர்கள்.அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் யோசிக்க மாட்டார்கள்.அதுதான் இயற்க்கை.அதனால் தான் ஒருவனை நிஜமாக காதலித்தாலும் வீடு மற்றும் உறவுக்காரர்களின் நிலை வேறு மாதிரி இருக்குமானால் தனது நிலையையும் மாற்றிக் கொண்டு காதலையும் ,மறந்து விட்டு வேறு வாழ்க்கைக்கு தயாராகி விடுவார்கள்.ஆதலால் தான் பெண்களின் மனதை புரிந்துகொள்ள முடியாமல் அல்லாடுகிறார்கள்!
A.S.Murali,
srirangam

Anonymous said...

Doctor,
why you have stopped posting...Please post regulary..anticipating for your wonderful posts

Muthu said...

///இரை கிடக்கிறதோ இல்லையோ, ஒரே இலக்கை துரத்திக்கொண்டு போய், தவமாய் தவம் கிடந்து அதில் பெரிய ஸ்வாரசியம் உணரும் விசித்திரமான குணத்தையும் பெற்றான். ///

Excellent!!!

Muthu said...

Hello Doctor,

You wrote excellent books for Teen ages and adults. It would be great if you write book for Parent like me to grow a wonder ful child. Ofcourse, we were Master in Every thing 600 years back, but not today. I believe that the indian(or Tamil) society need a book to understand child psychology from the great author like you.

Thanks,
Muthuselvam

Anonymous said...

I've been following your writings for a couple of years and they are really good,am to a regular reader it should make a difference. I've for a long time longed for a writer/scientist who can popularize science and make science writing like Richard Dawkins,Matt Ridley,Desmond Morris etc in the west, popular and familiar to the common people. Thaks Dr.Shalini

Nirmal

Anonymous said...

Your views relating sexuality & make-up on the TV was kinda very self defensive. Are you trying to mean since you dont put on any make-up you are trying 'not to show' what you meant other ladies try to mean by it? well, so be it if a way of advertation to you, i would atleast accept if you had said thaali, meeti & kumkum on forehead also means the same. It was a big mistake you dint talk about it 'coz when men say & think it is holy & protective to wear all that when in reality it shows nothing other than being sexually active!! when our society accepts or had accepted that as 'holy' & 'compulsory' a day would come when make-up too would be considered the same!.. its all about the time!!

Unknown said...

மிகவும் சுவார்சியமாக உள்ளது ... :)

SathyaPriyan said...

Dear Dr. Shalini,

I watched your speech on Neeya Naana talk show telecasted in Vijay TV on the Pongal day 15th Jan 2012. It was an impeccable one. I think it came out of your incessantly flowing seamless thoughts coupled with invigorating knowledge. Listening to that was indeed refreshing.

I am looking forward to read more of your writings.

My hearty congratulations.

Regards,
Sathyapriyan

Unknown said...

நல்ல சுவாரசியமான பதிவு டாக்டர்

Anonymous said...

very good lesson

Flavour Studio Team said...

அன்பு டாக்டர் ஷாலினி அவர்களுக்கு..
பெண்கள் உடை கட்டுபாடு பற்றிய தங்களின் நிகழ்ச்சியை சமீபத்தில்.. காண நேர்ந்தது... இது நாள் வரை நான் தங்கள் மேல் வைத்து இருந்த மதிப்பும் மரியாதையும் உடைந்து தூள் தூளான தருணம் அது..!!!!
இந்த கமென்ட் நீங்கள் வெளியிடுவிர்களோ என்று எனக்கு தெரியாது.. அது எனக்கு அவசியமும் இல்லை.. ஆனால் அனேகம் பேர் உங்களை உங்கள் கருத்துகளை வெறுத்து இருக்க கூடும்,,,!!!! இதை உங்களுக்கு தெரியபடுத்தவே இந்த கடிதம்... இதை பிரசுரிப்பதும்... மறைப்பதும் உங்கள் விருப்பம்...!!பெண்களின் ஆடைகள் ஆண்களை ஈர்க்கிறது என்ற கருத்தை ஆணித்தரமாக மறுக்கும் நீங்கள்... இதே நீனால் முன்னொரு நிகழ்ச்சியில்... பெண் அடர்த்தியான மேக்அப் அணிவது.. ஆண்களுக்கு im available என்று பெண் கொடுக்கும் சிக்னல் என்று சொன்னிர்கள்..!! உங்களது அந்த கருத்தை நான் மனபூர்வமாக ஆதரித்தேன்
அப்படி சொன்ன நீங்கள் இப்பொழுது பெண் அணியும் உடைக்கும் ஆணுக்கு ஏற்படும் ஈர்புகும் சம்மந்தமில்ல என்பது போல பேசினீர்கள்?? ஏன் உங்கள் கருத்தை மாற்றி கொண்டீர்கள்?? பெண்களிடையே உங்களுக்கு எழுந்த எதிர்ப்பை அடக்குவதற்காக நீங்கள் செய்து கொண்ட சமரச முயற்சியா இது??
இப்பொழுது நீங்கள் சொன்ன கருத்துகளில் இருந்து நான் முற்றிலும் வேறுபடுகிறேன்...!!!
தங்களிடம் இருந்து நியாயமான பதிலை,விளக்கத்தை எதிர்பார்கிறேன் சகோதரி.....
அன்புடன் (கொஞ்சம் மனது வருத்தத்துடன் உங்கள் மீது அக்கறை கொண்ட )உங்கள் சகோதரி
ஷர்மிளாஹமீத்

Flavour Studio Team said...

தங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி ஒரு வலை தளத்தில் நடந்த விவாதத்தை உங்கள் முன் வைக்கிறேன்... தங்கள் நேரத்தை சற்று ஒதுக்கி படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. இது உங்கள் மீது அவதூறு பரப்பும் முயற்சி அல்ல சகோதரி.. !! புரிந்து கொள்விர்கள் என நினைக்கிறன்.. நான் பார்த்து வியந்த. ரசித்த பெண்களுள் நீங்கள் முதல் இடம் பெற்றவர்.. அப்படிப்பட்ட உங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து விமர்சித்து கொண்டிருக்கிறது... இதை தங்கள் நினைவில் கொள்ளுங்கள்....
http://timeforsomelove.blogspot.com/2012/05/blog-post.html
இந்த விவாதத்தை பார்க்கவும்.... நன்றி...

flower said...

welcome in aval vikatan.

Unknown said...

nice msg.!!

Anonymous said...

you have good imagination and by the by could you tell who created first human?
Raa

Katz said...

Please keep writing

Unknown said...

Doctor, why you have stopped posting...Please post regulary..anticipating for your wonderful posts

Anonymous said...

Doctor, why you have stopped posting...Please post regulary..anticipating for your wonderful posts

Bathmanathan said...

பயனுள்ள எழுத்துக்கள்.

Anonymous said...

உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. ஏன் பதிவை நிறுத்திவிட்டீர்கள்... ப்ளீஸ், தொடருங்கள்...

sivaramakrishnan said...

சான்ஸே இல்ல.ஏன்னா இவ்வளவு அழகான தமிழ்ல பல உன்மைகளை போட்டு உடைத்தார் போல் உள்ளது...
மேன்மேலும் எதிர்பார்புடன்.

இப்படிக்கு ஒரு
"வேட்டுவ மூளை" :)..

Unknown said...

மிகவும் சுவார்சியமாக உள்ளது ..

Anonymous said...

Thanks for information .,wish you all the best ..at more details http://wintvindia.com

Unknown said...

அறிந்து கொள்ளவேண்டிய பதிவு