Thursday, June 26, 2014


லீனாவிற்கு பதிமூன்று வயது. அவளை சின்ன குழந்தை என்றே அவள் வீட்டு பெரியவர்கள் நினைத்தார்கள்.  அதனால் அவள் யாரோ ஒரு பையனோடு ஷாப்பிங் மால் போனதை பார்த்தாய் நம்பகமான தகவல் கிடைத்த போது அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. அவ குழந்தையாச்சே என்கிற அவநம்பிக்கை ஒரு பக்கம், நம்ம பொண்ணு நமக்கு தெரியாம் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாளே என்கிற ஆத்திரம் ம்று பக்கமாய் அதிர்ந்து போனார்கள் பெற்றோர். உடனே வீட்டில் அவளுக்கு ஆளாளுக்கு அட்வைஸ் மழை தான்.  அவள் தெனாவட்டாய், நான் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அடம் பிடித்த போது, அடி உதை தான்.  எதற்குமே அவள் மசியாமல் உண்ணவிரதம் கிடந்த போது, பெற்றோருக்கு பாசம் தாங்காமல் அவளை உடனே ஒரு பிரத்தியேக கவுன்ஸலிங்கிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்.  ஆலோசனைக்கு வர லீனாவிற்கு விருப்பம் இருந்தால் தானே. அவள் செம கடுப்புடன், “நீங்க என்ன புதுசா சொல்லீட போறீங்க, முளைச்சு முணு இலை விடலை, அதுக்குள்ள உனக்கு காதல் கேட்குதானு தானே, யார் என்ன சொன்னாலும் என் மனசை மாத்த முடியாது, நான் அவனை தான் கல்யாணம் பண்ணீப்பேன்.  எங்களுக்கு பிறக்க போற குழந்தைக்கு என்ன பேர் வெக்கணும்னு கூட யோசிச்சிட்டேன் தெரியுமா?  என்னை மாத்த யாராலையும் முடியாது

கடைசியில் அவள் மனம் மாறிபோனாள் என்பது வேறு கதை.  ஆனால் அவளுக்கும் அவள் பெற்றோருக்குமே தெரியாத புது விஷயம்:  பதிமூன்று வயது இன்றைய கால மனிதர்களை பொறுத்தவரை குழந்தை பருவமாக இருக்கலாம்.  ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவே இந்திய பெண்களை பொருத்த வரை ரொமப லேட்.  பெரியாரை திருமணம் செய்துக்கொண்ட போது நாகம்மையின் வயது பதிமூன்று.  பாரதியாரை திருமணம் செய்துக்கொண்ட போது செல்லமாவிற்கு அதை விட சின்ன வயது தான்.  அவ்வளவு ஏன், நாம் காதலுக்கு மிக பெரிய எடுத்துகாட்டுகளாய் இன்று வரை போற்றிக்கொண்டிருக்கும், லைலா மஜினு, ரோமியோ ஜுலியட், அம்பிகாபதி அமராவதி.....இவர்கள் எல்லோருமே டீன் ஏஜ்காரர்கள் தான்.

காரணம் இயற்கையை பொருத்த வரை பருவம் அடைந்த உடனே எதிர்பாலின ஈர்ர்பு ஏற்பட்டு ஆக வேண்டும்.  ரொமாண்டிக கனவுகள் உருவாக வேண்டும். எனக்கே எனக்கென்று ஒரு ஆள் வேண்டும் என்கிற வேட்கை தலை தூக்க வேண்டும். இது பொதுவாய் பெண்களுக்கு பன்னிரெண்டில் இருந்து பதினாறூக்குள்ளூம், ஆண்களுக்கு பதினான்கில் இருந்து பதினெட்டுக்குள்ளும் நடக்கும் ஒரு பருவ மாற்றம்.  இப்படி எதுவுமே நடக்கவில்லை என்றால், அந்த பதின்பருவத்தினருக்கு எதிர் பாலினர் மீது நாட்டமே வரவில்லை என்றால், அவர் உடலில் போதுமான ஹார்மோனே ஊரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

அந்த அளவிற்கு மிக இயல்பான, நடந்தே தீர வேண்டிய மனமாற்றம் இந்த துணை தேடும் படலம்.  ஆனால் பெண்ணின் திருமண வயது 18 தானே.  ஆணின் திருமண வயது 21 தானே.  அதற்குள் எப்படி காதல், கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம் என்றால்?
அதுவும் சரிதான். தாகூரும், பாரதியும், பெரியாரும் ரொம்பவே போராடி தான் பெண்ணின் திருமண வயதை உயர்த்தினார்கள். இல்லை என்றால் நம்மூர் மூடநம்பிக்கைவாதிகள் எல்லாம் மனு தர்மத்தில் சொல்லபட்ட முட்டாள் தன்ங்களில் ஒன்றான கன்னிகாதானத்தை தானே பின்பற்றினார்கள்.  கன்னிகாதானம் என்பது நம்முடைய கலாச்சாரத்தின் சிறப்பல்லவா? என்று உடனே வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வராதீர்கள். கன்னிகா என்றால் பூப்படையாத 8 வயதிற்கு கீழே இருக்க கூடய பெண், வயதிற்கு வந்துவிட்டால் பெண் கன்னியாகிவிடுவாள்.  அதற்கு முன்பே, அவள் பூப்பையாத கன்னிகையாக இருக்கும் போதே, அவளை அக்மார்க் கற்போடு ஒருவனுக்கு கட்டிக்கொடுத்துவிடுவது தான் ஒரு நல்ல தகப்பனுக்கு அழகு என்று நினைத்தார்கள் அக்கால இந்தியர்கள்.  அதற்கு பிறகு திருமணம் செய்துவைத்தால் தான் என்ன கெட்டுவிடுமாம்? என்றால், அந்த பெண்ணே கெட்டு போய்விடுவாளாம், அவள் வயதிற்கு வந்துவிட்ட பிறகு அவள் பூர்ண கற்போடு இருக்கிறாள் என்பதற்கு கேரண்டியே இல்லையாம். எதற்கு இந்த வம்பெல்லாம், வயதிற்கு வருவதற்கு முன்பே கட்டிக்கொடுத்துவிட்டால், அவள் கற்பை பற்றிய கேள்வியே வர்றாதே........இன்றைய கணிப்பின் படி பதினாறு வயதிற்கு கீழ் இருக்கும் பெண்ணொடு உடலுறவு கொண்டால் அது ரேப் என்றாகும், தண்டனை கிடைக்கும்.  ஆனால் 1947க்கு முன்னால், இந்த கன்னிகாதான முறையே இந்திய பாரம்பரியத்தின் உச்சகட்ட எடுத்துக்காடு, இந்திய பெண்ணின் கற்பொழுக்கத்திற்கா உச்சகட்ட சான்று என்று பால்கங்காதர் திகலர் மாதிரி பெருசுகள் கூட இந்த முறைக்கு வக்காலத்து வாங்கினார்கள் என்றால் பாருங்களேன்.

எது எப்படியோ, ஆனால் காலத்தோடு நம் கட்டமைப்புகளும், கண்ணோட்டங்களும் மாறுகின்றன.  அந்த கால பெண்ணுக்கு படிப்புரிமை கிடையாது.  அவள் வெறூம் ஒரு வேலை செய்கிற, குட்டி போட்டு வளர்க்கிற, ஆணுக்கு சேவகன் செய்கிற ஒரு ஓசி மிஷின் மட்டுமே, அதனால் சட்டு புட்டுனு ஒரு மிஷினை வாங்கி போட்டோமா, வேலைய பார்த்தோமா என்று அக்கால் மனிதர்கள் நினைத்தார்கள்.  இத்தனை சின்ன பெண், இன்னும் வளர்ச்சி முழுமை பெறாத உடம்போடு, மகபேற்றின் போது மாண்டு போனால்?  அது தான் மலிவாய் கிடைக்கும் மிஷின் ஆயிற்றே.  போனதை கழித்துக்கட்டிவிட்டு, மற்றொன்றை கட்டிக்கொண்டால் கூடவே நிறைய சீதனுமும் ஃபிரீயாய் கிடைக்குமே!  பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ரொம்பவே சவுகரியமாய் இருந்ததால், அதற்கு மேல் அது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை.

ஆனால் தாகூரும், பாரதியும், பெரியாரும், நேருவும், பெண்ணை இப்படி வெறும் ஒரு உற்பத்தி யந்திரமாக பார்க்கவிரும்பவில்லை.  பெண்கள் கல்வி, வளர்ச்சி, அறிவு மேம்பாடு மாதிரியான விஷ்யங்களும் பெற்று இன்னும் அதிக அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதில் மிக முனைப்பாய் செயல்பட்டார்கள் இந்த நான்கு ஆண்களும்.  காந்தி, திலகர் மாதிரியான பெண் முன்னேற்றமா அதெல்லாம் எதுக்கு? கலாச்சாரம் கெட்டுடும் என்கிற ஆசாமிகளை மீறி, இந்த நால்வரும், ரொம்பவே போராடி பெண்களுக்கென பல உரிமைகளை பெற்று தந்தார்கள்.

அதில் மிக முக்கியமானவை, வெறும் குட்டிபோடும் யந்திரமாய் இருக்காமல், பெண் சுயாறிவை பயன்படுத்தி தன் முடிவுகளை தானே எடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்.  இதனால் நாட்டுக்கு என்ன நன்மையாம்?  ஒரு அடிமை பெண் ஆயிரம் குட்டிகளை போட்டாலும், அவளுக்கு அறிவே இல்லை என்றால், ஆயிரம் குட்டிகளும் வெறூம் ஆடு மாடு மாதிரி தானே உடம்பால் மட்டும் வளரும்.  அவள் கெட்டிக்காரியாக இல்லை என்றால், ஆயிரம் குட்டிகளில் அநேகம் ஏதாவது நோய்வாய் பட்டு இறந்தும் போகலாம்.  ஆக எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த தரத்தில் இவள் குட்டிகள் தோற்றுதானே போவார்கள்.  இதற்கு போய் இந்த பெண் தன் வாலிப வயதின் பெரும் பகுதியை ஏதோ ஒரு ஆணுக்கு ஏவல் புரிவதிலும், அவன் குட்டிகளை ஈன்று புறம் தள்ளூவதிலும் செலவிட்டால், அதனால் அவளுக்கு கிடைக்கும் தனிப்பட்ட லாபமொ, திருப்தியோ, ஏதும் இல்லையே.  என்ன, சீதை மாதிரி, நளாயினி மாதிரி, கண்ணகி மாதிரி, நீ எப்பேற்பட்ட ஒரு நல்ல பொண்ணூ என்கிற வெற்று பாராட்டு கிடைக்கும்.  எதறகுமே பிரயோஜ்னம் இல்லாத இந்த பாராட்டை வைத்துக்கொண்டு, என்ன செய்வது?  இவ்வளவு பாராட்டை பெற்ற இந்த மூன்று பெண்களுமே ஏமார்ந்த கேஸுகள் தானே.  தனிப்பட்ட வாழ்வில் தோற்றூ போன பேக்குகள் தானே.  இதுவே இந்த மூன்று பெண்களுக்கும் கொஞ்சமாவது படிப்பறிவோ, பகுத்தறிவோ இருந்திருந்தால், கணவன் சரியில்லை என்றாலும், தன் வாழ்வையாவது தானே தீர்மாணீத்து, சந்தோஷமாய் காலத்தை கழித்திருப்பார்கள்.  குழந்தைகளை தாமே வெற்றிகரமாய் வளர்த்து ஆளாக்கி இருப்பார்கள். எதையுமே சாதிக்காமல், வெட்டியாய் அழுதுவிட்டு, செத்து போன இந்த பெண்கள் மாதிரி இன்றைய இந்திய பெண்கள் இருக்க கூடாதென்றால், அவர்களுக்கு முதலில் தேவை கொஞ்சம் பேஸீக் அறிவு.
இந்த அறீவோ கடையில் ரெடிமேடாக விற்க படுவதில்லை.  கல்வி சாலையில் போய் நம் மூளையை தீட்டி, கொஞ்சம் கொஞ்சமாய் வரவழைத்து க்கொளவது. இந்திய ஜனத்தொகை இருக்கும் இருப்பில் அந்த காலத்து பெண்கள் மாதிரி வயதிற்கு வந்த ஆண்டில் இருந்து ஆரம்பித்து, மெனோபாஸ் வரைக்கும் இடைவிடாமல் குட்டிபோட்டுக்கொண்டே இருக்க இனி முடியாது.  அதற்கு பதிலாய் வயதிற்கு வந்த கையோடு, உருவாகும் கூடுதல் மூளை சுருசுருபபை பயன்படுத்தி கொஞ்சம் அறிவை அகலமாக்கிக்கொண்டால், தகுந்த துணை கிடைக்கும் போது கூடி குட்டிகளை பெற்றூக்கொள்ளலாமே.  ஆனால் இவன் தகுந்த துணை தானா என்றூ கண்டுபிடிக்க கூட ஒரு பெண்ணுக்கு அறிவு இருந்தால் தானே முடியும்?

பதிமூன்றூ முதல் 23 வரை மனித பெண்ணீன் மூளை வளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் முதிர்ச்சி அடைந்துக்கொண்டே இருக்கும்.  23 தாண்டிய பிறகு தான் அது போதுமான பக்குவத்தை பெற முடியும். அதுவரை அவர் எத்தனை ஆண்களை பார்த்து, ரசித்து, காதலித்து, ரூட் விட்டாலும், அது எல்லாமே வெறும் வெள்ளோட்டம் தான்.  என்றோ ஒரு நாள் விம்பில்டன்னில் டென்னிஸ் விளையாட போகும் பெண், சின்னவயது முதலே தின்மும் ராக்க்டேட்டும் பந்துமாய் பிராக்டிஸ் செய்துக்கொண்டிருப்பது போல.......முன்ன பின்ன, ஆண்களை எடை போடும் பழக்கமே இல்லாமல், 23 வயதிற்கு பிறகு நீங்கள் திடீரென்றூ ஒரு நாள் மிக துல்லியமாய் கணித்து ஒரு சிறந்த துணையை தேர்வு செய்துவிடமுடியாது.  ஆனால் பதிமுன்று வயதில் இந்த்ே ஆண்களை பார்த்து, பேசி, பழகி, எடை போட்டு, இவன் தேருவானா மாட்டானா? என்றூ புரிந்து கொள்ள தெரிந்த பெண், 23 வயதிற்கு பிறகு இத்தனை ஆண்டுகளின் அனுவபத்தினால் மிக சரியாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு அதிகம்.

இவை எல்லாவற்றையும் விட, பதிமூன்றில் இருந்து இருவது வரை ஒரு பெண் காதல் வயப்பட்டால், அவள் விரும்பும் ஆணுக்கு வயது 16- 23 ஆக தான் இருக்க முடியும்.  இந்த வயது பையனால் எப்படி குடும்பம் நடத்த முடியும்?  அந்த காலம் மாதிரி ஆண்கள் தங்கள் அப்பாவின் கையை எதிர்பார்த்து வாழ்வதில்லையே.  காந்தி 16 வயதில் படிக்கும் போதே திருமணம் செய்துக்கொண்டார், காரணம் அவர் கூட்டு குடும்ப ஆசாமி.  கஸ்துர்பாவிற்கும் அவளுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் ஆன செலவுகளை காந்தியின் அண்ணனும், அம்மாவும், பாரத்துக்கொண்டார்கள்.  இன்றூ எந்த அண்ணன் தன் குட்டி தம்பியின் மனைவி குழந்தைகளுக்கு செலவு செய்வான்?  அப்படி அண்ணன் தோளில் ஓசி சவாரி செய்வன் எல்லாம் ஒரு நிஜ ஆணா?  அப்படி பட்ட டம்மி பீஸை ஒரு பெண் காதலிக்கிறாள், கல்யாணம் செய்துக்கொள்கிறாள் என்றால் அவள் எப்பேற்பட்ட முட்டளாக இருப்பாள்?

ஒரு கெட்டிக்கார பெண் தனக்கும் தன் குட்டிகளுக்கும் தடங்கல் இன்றி சம்பாதித்துவர தரக்கூடிய ஆணை தானே தேர்வு செய்வாள்?  அப்படி சம்பாதிக்க வேண்டும் என்றால், இன்றைய நிலவரப்படி அவன் படித்திருக்க வேண்டும்.  ஒரு குடும்பம் நடத்த போதுமான அளவிற்கான தொகையை ஈட்ட கூடிய வேலையில் அவன் இருக்க வேண்டும்.  இதை எல்லாம் செய்யவே அவனுக்கு வயது 25க்கு மேலாகிவிடுமே.  இந்த வயதையும், வசதியையும் அடையாதவனை காதலிப்பதோ, கலயாணம் செய்துக்கொள்வதோ, அபத்தமாகிவிடுமே.

இந்த பாழாப்போன இயற்கையோ, ஒரு பக்கம் 13 வயதில் உச்சகட்ட காதல் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.  தமிழ் சினிமாவோ, இந்த காதலை பெட்ரோல் ஊற்றி விஸ்வரூபம் எடுத்து வானம் வரைக்கு கொளுத்தி வைக்கிறது, ஆனால் நிஜ வாழ்விலோ, இவ்வளவு சீக்கிரம் கமிட் ஆகி கல்யாணம் என்று யோசித்தால் வசதி வாய்ப்பு பற்றாது........இந்த எல்லா பிரச்சனைக்கு நடுவில் இந்திய கலாச்சாரம் வேறு, “கற்புள்ள் பெண் ஒருவனையே காதலித்து, அவனையே கடைசி வரைக்கும் நினைத்து, அவனோடு மட்டுமே குடும்பம் நடத்துவாள்என்கிற கராறான கோட்பாடுகளை முன்வைகிறது.  நம்மூர் பெண்கள் எல்லாம் என்னவோ இந்திய கலாச்சாரத்தின் மானமே அவர்களின் கையில் தான் மடங்கி இருப்பது போல, அய்யோ, முதல் காதலனை விட்டு விட்டு இன்னொருவனை நினைத்தாலும் போச்சே, கற்புக்கரசி லிஸ்டுல என் பெயர் வராதே, நம்ம கலாசாரத்தை கெடுத்த துரோகி ஆகிவிடுவேனே நான்என்று தேவையே இல்லாமல் 13 14 வயதில் இருந்தே கவலை பட்டு, ஓவர் செண்டிமெண்டல் ஆகிறார்கள்.

ஆனால் இயற்கைக்கு சில்லி செண்டிமெண்ட்கள் எதுவுமே இல்லை.  அது மனித மனங்களில் ரொமான்ஸ் என்கிற தேவையை ஏற்படுத்தியது, இந்த ஆணும் இந்த பெண்ணும், போனாபோகுது கொஞ்சம் ஜாலியா இருக்கட்டுமே என்ற செல்ல மிகுதியில் அல்ல.  இயற்கை ரொனாஸை தேவையை உருவாக்கியதே வேறொரு மேட்டருக்காக... 

11 comments:

இரா. கண்ணன் said...

நீங்கள் நடுவராக வந்த நீயா நானா பகுதிகளை பார்த்து உங்கள் மீது மரியாதை எற்பட்டு தங்கள் தமிழ் இணையதளத்தை தேடிப்பிடித்து வாசித்து வருபவன் நான். தாங்கள் காந்தி பெண்களை அறிவு முடக்கிவைக்கவும்..முன்னேறவிடாமல்தடுத்து வைக்கவும் முயன்றார் என்று எழுதுவதற்கு முன்பு அவரின் உண்மையான பெண் விடுதலைப் பற்றி படித்திருக்கலாம். சமீபத்தில் திரு. ஜெயமோகன் காந்தி பெண் முன்னேற்றத்தை பற்றி எழுதிய கட்டுரையை வாசிக்கவும்..

http://www.jeyamohan.in/?p=33454

இந்த இரண்டு பதிவுகளையும் வாசிக்கும் வாய்ப்பு இல்லாத வாசகன் காந்தியைப் பற்றி தாங்கள் சொன்னதே உண்மை என்று நம்புவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் இணையத்தில் பதிவேற்றும் முன்பு தீர ஆராய்ந்து தகவல்கள் உண்மைதான என்று உறுதிசெய்த பின்பு ஏற்றினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். இது என் தாழ்மையான கருத்து.
நன்றி
இரா. கண்ணன்

PARIMALA said...

Welcome back Mam!!

Srinika said...

ungal katturaigal anaithum suvarasyamaga irundhahu!!!! Ananda vikatan thodarai meendum thodaralame?????????????????

PARIMALA said...

niraya yezhudhungal! padikka kaathirukirom!!

DR said...

நன்றி

DR said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு... தொடர்ந்து எழுத்துவதற்க்கு வாழ்த்துக்கள்... :)

மானிடன் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தை வாசித்தில் மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள் வலைப்பூவில்...

Anonymous said...

Welcome back

Anonymous said...

if gandhi had been alive today he would be arrested for pedophilia

Mathesh said...

Vegu naatgazhukkup piragu Inayathukku varugai thandhu Karutthukkalai pagirdhamaikku Nandri

ബൂപതി said...

மேடம்,உங்களின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால் காந்தியின் பெண்விடுதலை குறித்த உங்களின் கருத்து சரியானது அல்ல. அவர் தன்னை விரிவாக சோதனைக்குட்படுத்தி தன்னிடமிருந்த ஆணாதிக்கத்தை களைய முற்பட்டவர். சொல்லப்போனால் பாரதியின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களிலேயே பல குறைபாடுகளைக் காணமுடியும். அவன் கவிஞன். இரு தளங்களில் இயங்குபவன். ஆனால் காந்தி கண்டு கொண்டது எல்லா விசயங்களிலும் படிப்படியான வளர்ச்சி.