Monday, September 29, 2008

பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

அன்பார்ந்த ஆண்களே,

இந்த வலை பதிவில் ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்ற தலைப்பில் வரும் சமாசாரம் எல்லாமே, முழுக்க முழுக்க பெண்களுக்காக எழுத படும் மேட்டர் மட்டுமே. அதை ஆண்கள் படிக்கவே கூடாது:)

கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....ஆனால் ஒரு நிபந்தனை, இதை படிக்கும் போது உங்களை முழுக்க முழுக்க ஒரு பெண்ணாய் தான் பாவித்துக்கொள்ள வேண்டும், ஆண் மனப்பான்மையை தற்காலீகமாய் ஆஃப் செய்துவிட வேண்டும். அப்படி ஆண்மையை ஆஃப் செய்துவிட்டு பெண் பாலாய் இதை படிக்க முடிந்தால் தாராளமாய் நீங்கள் இதை படிக்கலாம்.

அப்படி செய்ய முடியாதவரா நீங்கள்?

டோண்ட் ஒர்ரி, உங்களுக்காகவே பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்று ஒரு புத்தகத்தை ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன்....ஆளை அசத்தும் 60 கலைகள், நக்கீரன் பதிப்பகம்....அது முழுக்க முழுக்க ஆண்களுக்கான மேட்டர். நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!

10 comments:

ramachandranusha(உஷா) said...

சீக்கிரம் ஆரம்பிங்க டாக்டர் மேடம். ஏதாவது உபயோகப்படுதான்னு பார்க்கிறேன்
அன்புடன்,
ஓர் அபாக்கியவதி

Sanjai Gandhi said...

:))

ச.பிரேம்குமார் said...

வாங்கிருவோம் :)

Tech Shankar said...

நன்றி

குசும்பன் said...

//நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!//

அதில் முக்கியமாக ஏற்கனவே இருக்கும் ஆளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அசத்துவது எப்படின்னு சொல்லி இருந்தா மட்டுமே நான் வாங்க முடியும்:)

(சும்மா ஜாலிக்கு)

Balahi said...

குசும்பனின் கமெண்ட்டைப் பார்த்து வாய் விட்டு சிரித்தேன். உங்கள் தொடர் மிக நன்றாக இருக்கிறது. ஆண்களுக்கான அந்த புத்தகம் மின்னூலாக வாங்கலாமா?

sivanand said...

Hi Shalini madam,
After Leil Lowndes i love ur writing.i could sense the same realism in urs as well

Bala said...

//கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....//

Hello Doctor,

I have read the same in Sivavakkiar siddar padalgal.

உற்பத்தி நிலை
--------------
அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆண்களுக்காக இங்கேயும் எழுதுங்கள்.

அமர்ஹிதூர் said...

"ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?" இதற்கு இன்னொரு தலைப்பாக "ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்வதெப்படி ? " என்றும் நினைத்க்கொண்டு எந்த ஒரு ஆணும் "ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?" இடுகைகளை படிக்கலாம். ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய இடுகை. ஆண்கள் தங்கள் வடிவமைப்பு தெரியாமல் சபளிஸ்டுகலாக திரிந்து தன் சக்தியை வீனடிகின்றனர். எனக்கும் இந்த இடுகைகளை படித்தபின் தான் புரிந்தது.
இதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொண்டு தன் குழந்தைகளுக்கு ("பெண்ணை பார்த்து ஏமாந்து போகதே என்று ஆணுக்கும் / நல்ல ஆண்மகனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெண்ணுக்கும் ") சொல்லிக்கொடுக்கவேண்டும்.
Thanks a lot டாக்டர் !