Tuesday, March 24, 2009

சேலம் மாநகர சிறைகாவலர்களுக்கான பயிற்சி முகாம்




மனித உரிமையை பாதுகாக்கும் பரிணாம வளர்ச்சியை நம்மூர் சிறைசாலைகளும் அடைந்துவிட்டுள்ளன. சிறைவாசிகளை எப்படி உளநலரீதியில் கையாள்வது என்கிற ஒரு நாள் பயிலரங்கை 22/3/2009 அன்று முழுவதும் நடத்தினோம்.

PRISON MINISTRY OF INDIA, என்கிற சேவை நிறுவனமும், PSYCHIATRIC SERVICES AND RESEARCH FOUNDATION என்கிற எங்கள் அமைப்பும் சேர்ந்து நடத்திய பயிலரங்கு இது. இதனை சிறை கண்காளிப்பாளர் திரு பழனி அவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்குவித்து துவக்கி வைத்தார்.

சேலத்தில் உள்ள DON BOSCO அன்பகம் என்கிற சிறுவர் விடுதியின் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது.



இந்த விடுதியை நடத்தும் அருட்தந்தை ஃபாதர் சேவியர் ரொம்பவே ஸ்பெஷலான ஆசாமி. வண்டி ஓட்டுனர் அங்கு இல்லாத போது, குழந்தைகளை மீட்டு கொண்டுவதற்குண்டான ஆட்டோவை அவரே ஓட்டுகிறார். ரோமாபுரிக்கு போய் நேரடியாக போப்பிடம் ஆசி பெற்று வந்த பந்தா இதுவுமே இன்றி, மிகவும் எளிமையாக இருக்கிறார். சிறப்பாக இயங்குகிறார்.

பி.கு: இந்த விடுதியில் வசிக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட கிறுத்துவர் இல்லை. எல்லாமே ஹிந்து குழந்தைகள் தான். அவர்களை யாரும் மதம் மாற்றம் செய்ய முயலவில்லை, அதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை.

4 comments:

ஜோதி கார்த்திக் said...

very nice , A good Step towards a better society , prison should make the prisoners to thing about their past mistakes but not make them to plan a future evils , that can done by only a good prison police

யசோதா.பத்மநாதன் said...

உண்மையான இறை பணியைச் செய்கிறார் அந்த அருட் தந்தை.அவர் ஆசாமி அல்ல சாமி.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அன்புள்ள சகோதரி,

// இந்த விடுதியில் வசிக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட கிறுத்துவர் இல்லை. எல்லாமே ஹிந்து குழந்தைகள் தான். அவர்களை யாரும் மதம் மாற்றம் செய்ய முயலவில்லை, அதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை.//

இது மிகவும் ஆச்சிரியமான விசயம் தான்!

ஜகதீஸ்வரன்

அமர்ஹிதூர் said...

சிறை காவலர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தியதில் மிக்க மகிழ்ச்சி. அது போல் உலக தமிழர்கள் ஒவ்வொருவரின் உயிரை காத்துக்கொண்டிருக்கும் தமிழின தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கும், இந்திய மக்களாகிய எங்களை பெற்றெடுத்த அன்னை சோனியா அவர்களுக்கும், விலைவாசி உயர்வு என்பதை இந்தியாவில் இல்லாமல் செய்த உலக மகா பொருளாதார மேதை பிரதமர் மன் மோகன்சிங் அவர்களுக்கும் "மனிதநேயம் என்றால் என்ன ?" என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடத்தினால், மனிதநேயத்தின் பொருள் உணர்ந்து எனது இந்திய நாட்டில் வசிக்கும் இந்தியர்களாகிய தமிழக மீனவர்களுடைய உயிரின் மதிப்பு அவர்களுக்கு புரிந்தாலும் புரியும்.