Saturday, April 18, 2009

ஷிண்டோ!




இந்தோநேஷியாவில் இஸ்லாம் தான் மிக பிரபலமான மதம். இந்த இஸ்லாமிய பெண்களுக்கு மிக பிரபலமான பெயர் என்ன தெரியுமா? ஷிண்டோ, அல்லது ஷிந்தா.
”பெயர் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டால் அவர்கள் சொன்னது “இந்த பெயர் உங்கள் ஊர் பெயர் தான். ராமாயணத்தில் வரும் கதாநாயகி இருக்கிறாளே....” என்றார்கள்.
”ராமாயண கதாநாயகியா, சீதா!” என்றேன்.
“அதே தான், எங்கள் ஊரில் சீதாவை ஷிண்டோ என்று தான் சொல்வார்கள், சில ஏரியாக்களில் ஷிந்தா என்றும் சொல்வார்கள்” என்றார்கள்
”ஆனால், நீங்கள் இஸ்லாமியராயிற்றே, சீதாவின் பெயரை வைத்திருக்கிறீர்களே?” என்றால், விசித்திரமாக பார்க்கிறார்கள், “ஏன் அதனால் என்ன, வைக்கக்கூடாதா?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
இந்தோசேஷியாவில் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களுமே மிக பிரசித்தம். எல்லோருக்குமே இவை தெரிந்திருக்கின்றன. எல்லோருமே இஸ்லாமியர்களாக இருதாலும், இந்த கதைகளை, “எங்க ஊர் பாரம்பரியமாக்கும்” என்று மத வேறு பாடுகள் கருதாமல் ஆசையாக கேட்கிறார்கள், நிறைய சமஸ்கிருத சொற்களை சரளமாக உபயோகிக்கிறார்கள்
உதாரணத்திற்கு, அந்த ஊர் பாஷையில், மனைவியை ஸ்திரி என்றும் கணவனை ஸ்வாமி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

8 comments:

SK said...

புது செய்தி. பகிர்தலுக்கு நன்றி.

Nanpeenda said...

புதிய செய்தி !, நீங்கள் சொல்வது உண்மைதான் . நான் சிங்கப்பூரில் வசிக்கும் காரணத்தால், எனக்கு இந்தோனேசியா மாக்ளிடம் பழகும் வாய்புகள் அதிகம். அவர்கள் நமது இந்து கடவுள்களின் பெயர்களையும் தெரிந்து வைதுஇருக்கிறார்கள்.
ஆனால் நமது நாட்டு இஸ்லாமிய பெண்களைவிட சுதந்திரமாகவே உள்ளனர்.

உங்கள் செய்திக்கு நன்றி

எனது பக்கம்

Anonymous said...

Interesting!

ரிஷி (கடைசி பக்கம்) said...

நிறைய பேர் இந்தோனோசியாவில்தான் ராமாயாணம், மகாபாரதம் எல்லாம் அங்கேதான் நடைபெற்றதாகவும் கூறுவர்.

Joe said...

ஷிண்டோ என்பது ஜப்பானில் பின்பற்றப்பட்ட ஒரு மதம் என்பது தெரியுமா?

http://en.wikipedia.org/wiki/Shinto

பூமகள் said...

இரண்டாவது புகைப்படத்திலிருக்கும் இந்த சுவரில் மாட்டும் ஷிண்டோ எங்கள் வீட்டில் வைத்திருக்கிறோம். இந்தோனேசியாவிலிருந்து என் அண்ணன் கொண்டு வந்தார். இதுவரையிலும் அது அந்த ஊர் கடவுள் என்று நினைத்திருந்தேன். ஆனால், இன்று தான் புரிந்தது உண்மை.

தெளிவித்த பதிவு. என் பெற்றோருக்கு அவசியம் இதைப் பற்றி பகிருவேன்.

நன்றிகள் டாக்டர். ஷாலினி. :)

Rathna said...

இது ஒரு பிரச்சனையா இப்ப?

anand said...

we must proud