முதலில் பெரியார் பற்றி எழுதுவதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்துகொள்கிறேன். தங்கள் பதிவில் என்னுடைய முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். அதனால்தான்.
//போதாத குறைக்கு அவன் பிறவியிலேயே புரட்சி குணம் படைத்தவன் வேறு//
இதுபோன்ற அதிசயப்பிறவி, அபூர்வ பிறப்பு என்ற அர்த்தங்களை பெரியாருக்கு பூசுவதைத் தயவு செய்து தவிருங்களேன். வாழையடி வாழையாக(!) தமிழ் எழுத்தாளர்கள் இதுபோன்ற சித்தரிப்புகளை எல்லா பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போதும் செய்துவிடுகிறார்கள்.
பெரியார் ஒன்றும் பிறவியிலேயே கடவுள் எதிர்ப்போடு தோன்றியவர் கிடையாது. மேலும், அவருடைய கடவுள் எதிர்ப்பு என்பது கொள்கையாக வடிவெடுத்தது பலகாலத்திற்கு பின்புதான் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
சின்ன வயசில் செய்ததெல்லாம், கேள்விகேட்கும் எண்ண்ணத்துடனேயே இருந்திருக்கும். ஆனால் மேற்கூறியது போன்ற தொடர்களை பயன்படுத்துவது, பெரியாரின் மேல் அபூர்வ, அதிசய சாயங்களைப் பூசுவது போலாகும்.
பிறவியிலேயே புரட்சி குணம் கொண்ட பையனை, வேறு என்னவென்று சொல்லுவது? இப்படி பிறவிலேயே புரட்சிதனம் கொண்ட உலகின் ஒரே ஒரு ஆதர்ச ஆண்மகன் இவன் ஒருவன் தான் என்று சொல்லி இருந்தாலும் நீங்கள் ஆட்சேபிக்கலாம். இந்த பிறவி புரட்சிதன்மை என்பது ஈ வே ரா வுக்கு மட்டுமே சொந்தமான விஷயமும் இல்லை. சார்ல்ஸ் டார்வின், மார்டின் லூதர் கிங், லிங்கன், கார்ல் மார்க்ஸ், விளாதிமீர் லெனின் மாதிரியான உலகின் பல தலைவர்களும் பிறவியிலேயே புரட்சிகுணம் கொண்டவர்கள் தான். உள்ளதை உள்ளபடி சொல்ல விடுங்களப்பா:)
நான் சிக்மண்ட் ஃபிராய்டு பற்றி ஏதோ கொஞ்சம் படித்துள்ளேன். அவர், மனிதனின் உளவியல் கட்டுமானங்கள் என்பவை அவனது வாழ்க்கைச் சூழல், சிறுவயதில் ஏற்படும் தாக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதனாலேயே மேற்கூறிய பின்னூட்டத்தை இட்டேன்.
'பிறவியிலேயே போராட்ட குணத்தோடு பிறந்தான்' என்று கூறுவதையெல்லாம் என்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது டாக்டர்.
6 comments:
பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
நன்றி.
நேற்று மாலை ஜீ தமிழ் தொலைகாட்சியில் நீங்களும், நடிகர் ராஜேசும் கலந்து கொண்ட உரையாடல் நிகழ்ச்சி கண்டேன்!
கலாச்சார கவலர்களுடன் உரையாட ஏகப்பட்ட பாயிண்டுகள் கிடைத்தன நன்றி!
word verification-ஐ எடுப்பது மிக எளிது!
dash borad -> settings -> Comments -> Show word verification for comments? இந்த இடத்தில் no கொடுங்கள்!
பின்னூட்டமிட வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்!
நன்றி!
முதலில் பெரியார் பற்றி எழுதுவதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய்துகொள்கிறேன். தங்கள் பதிவில் என்னுடைய முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன். அதனால்தான்.
//போதாத குறைக்கு அவன் பிறவியிலேயே புரட்சி குணம் படைத்தவன் வேறு//
இதுபோன்ற அதிசயப்பிறவி, அபூர்வ பிறப்பு என்ற அர்த்தங்களை பெரியாருக்கு பூசுவதைத் தயவு செய்து தவிருங்களேன். வாழையடி வாழையாக(!) தமிழ் எழுத்தாளர்கள் இதுபோன்ற சித்தரிப்புகளை எல்லா பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போதும் செய்துவிடுகிறார்கள்.
பெரியார் ஒன்றும் பிறவியிலேயே கடவுள் எதிர்ப்போடு தோன்றியவர் கிடையாது. மேலும், அவருடைய கடவுள் எதிர்ப்பு என்பது கொள்கையாக வடிவெடுத்தது பலகாலத்திற்கு பின்புதான் என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
சின்ன வயசில் செய்ததெல்லாம், கேள்விகேட்கும் எண்ண்ணத்துடனேயே இருந்திருக்கும். ஆனால் மேற்கூறியது போன்ற தொடர்களை பயன்படுத்துவது, பெரியாரின் மேல் அபூர்வ, அதிசய சாயங்களைப் பூசுவது போலாகும்.
தயவுசெய்து உங்கள் பார்வையை பகிர்ந்துகொள்ளவும்.
பிறவியிலேயே புரட்சி குணம் கொண்ட பையனை, வேறு என்னவென்று சொல்லுவது? இப்படி பிறவிலேயே புரட்சிதனம் கொண்ட உலகின் ஒரே ஒரு ஆதர்ச ஆண்மகன் இவன் ஒருவன் தான் என்று சொல்லி இருந்தாலும் நீங்கள் ஆட்சேபிக்கலாம்.
இந்த பிறவி புரட்சிதன்மை என்பது ஈ வே ரா வுக்கு மட்டுமே சொந்தமான விஷயமும் இல்லை. சார்ல்ஸ் டார்வின், மார்டின் லூதர் கிங், லிங்கன், கார்ல் மார்க்ஸ், விளாதிமீர் லெனின் மாதிரியான உலகின் பல தலைவர்களும் பிறவியிலேயே புரட்சிகுணம் கொண்டவர்கள் தான். உள்ளதை உள்ளபடி சொல்ல விடுங்களப்பா:)
நான் சிக்மண்ட் ஃபிராய்டு பற்றி ஏதோ கொஞ்சம் படித்துள்ளேன். அவர், மனிதனின் உளவியல் கட்டுமானங்கள் என்பவை அவனது வாழ்க்கைச் சூழல், சிறுவயதில் ஏற்படும் தாக்கங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதனாலேயே மேற்கூறிய பின்னூட்டத்தை இட்டேன்.
'பிறவியிலேயே போராட்ட குணத்தோடு பிறந்தான்' என்று கூறுவதையெல்லாம் என்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது டாக்டர்.
பெரியார் மீது மக்களுக்கு இருக்கும் பசம் அறிந்தது தானே ஊர்சுற்றி!
டாக்டர் ஷாலினியாக இருக்க கண்டு பரவாயில்லை, பதில் கொஞ்சம் பதமாக வந்தது!
இதே தமிழ் ஓவியாவா இருந்தா
பத்து பத்திக்கு காப்பி,பேஸ்ட் பண்ணி படியுங்கள் தெளியுங்கள்னு, நாம என்னவோ மப்புல இருக்குற மாதிரி உளரிட்டு போவார்!
Post a Comment