அந்த பையனுக்கு 25 வயது தான், திடுதிப்பென்று ஒரு நாள் அம்மாவிடம் வந்தான், தான் தன் உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணை அதி தீவிரமாக காதலிப்பதாகவும், அவளும் தன்னை ரொம்பவே விரும்புவதாகவும் சொன்னான், “இப்பவே கிளம்பு, அவங்க வீட்டுல போய் பொண்ணு கேட்கணும்”, என்றான். முதலில் காதல் கல்யாணமா? என்று ஆட்சேபித்த அம்மா, பையன், ஆக்ரோஷமாக, “வந்து பொண்ணு கேக்குறியா, இல்லை இதை எல்லாம் போட்டு உடைக்கட்டா?” என்று மிரட்டியதும், வேண்டா வெறுப்பாக பெண் கேட்கப்போனார். போய் பார்த்தால், இவன் காதலித்ததாக சொன்ன அந்த பெண்ணுக்கு இவன் யார் என்று கூட தெரிந்திருக்கவில்லை! இருவரும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்தவர்கள், இவன் தான் அவளை தூரத்தில் இருந்து பார்த்து காதல் வயப்பட்டிருந்தான், ஆனால் அந்த பெண் இவனை பார்த்ததே இல்லை. இதை எல்லாம் விட விசித்திரம் அந்த பெண்ணுக்கு திருமணமாக அவளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் இருந்தது!
பையனின் அம்மாவுக்கு அதிர்ச்சி + அவமானம். பையனிடம், “இதென்னடா கொடுமை?” என்றாள். ஆனால் பையன் அப்போதும் அடித்து பேசினான், “இல்லை அவ என்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறா. புருஷன் குழந்தைன்னு சொல்லுறதெல்லாம் சுத்த பொய், எங்களை பிரிக்கிறத்துக்காக யாரோ அவளை மிரட்டி அப்படி சொல்ல சொல்லி இருக்காங்க” ஆனால் அம்மாவுக்கு பையன் ஏதோ அப்நார்மலாக இருக்கிறான் என்று புரிந்து விட்டது. காரணம் அவன் சில மாதங்களாகவே சரியாக குளிப்பதில்லை, சாப்பிடுவதில்லை, தன்னை தானே பராமறித்துக்கொள்வதுமில்லை. விடிய விடிய விழித்துக்கொண்டு ஏதோ கிறுக்கிக்கொண்டே இருந்தான். என்ன என்று எடுத்து பார்த்தால், ஏதேதோ சம்மந்தா சம்பந்தமில்லாத பெனாத்தால். அவ்வப்போது தனக்கு தானே முணுமுணுத்துக்கொள்வது, ஒரு தினிசாய் சிரித்துக்கொள்ளுதல்…..அக்கம் பக்கத்து வீட்டாரும் சொன்னார்கள், “தானா பேசிக்கிட்டே போறான், என்னன்னு கவனியுங்க”
அப்போதெல்லாம், “என் பையன் நல்லா தான் இருக்கான், அவனுக்கு அப்படி எல்லாம் எதுவுமே ஆகாது” என்று நம்பி இருந்த அம்மா, குழந்தையும் கையுமாய் நிற்பவளை காதலிப்பதாய் பையன் சொன்னதுமே, “சரி தான் பையனுக்கு மனநிலை சரியில்லை” என்று புரிந்துக்கொண்டார்.
அதற்குள் பையனின் அலுவலகத்தில் இருந்து புகார் வந்தது, அவன் ஆஃபீஸ் கோப்புகளிலும் கிறுக்கி வைத்தான், பெண் ஊழியர்கள் எல்லாம் அவன் தங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறான், பின் தொடர்கிறான் என்று புகார் கூறினார்கள்.
இப்படி சிலருக்கு ஏற்படும் இந்த காதல் பிரமையை தான் De Clerambault's syndrome என்றும் Erotomania என்றும் அழைக்கிறோம். இது ஒரு வகையான மனசிதைவு. இந்த பிரச்சனைக்கு உள்ளானவர் தன்னை ஒருவர் ரொம்பவே காதலிப்பதாகவும், அதனால் இவரும் அன்னாரை பதிலுக்கு ரொம்பவும் நேசிப்பதாகவும் கற்பனை செய்துக்கொள்கிறார்கள். ஆனால் இது வெறும் கற்பனை என்று அவர்களுக்கே தெரியாது. அதனால் தான் நேசிப்பதாய் நினைக்கும் மனிதரை பின் தொடர்வது, (Stalking) அவர்களுக்கு ரகசிய கடிதங்கள் எழுதுவது, ஃபோன் செய்து பேசாமல் இருப்பது, அவரை மையமாய் வைத்து பல காதல் கனவுகள், கவிதைகள், பாடல்கள் என்று பின்னுவது என்று இதிலேயே நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பக்த மீரா, ஆண்டாள், இவர்கள் இருவருமே தி கிலாரெம்பால்ட் சின்ரோமால் பாதிக்க பட்ட பெண்கள். இதே கிலாரெம்பால்ட் சின்ரோம் ஆண்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் இன்னும் தீவிரமாய் காதலை வெளிபடுத்துவதாய் நினைத்துக்கொண்டு, பெண்களை பின் தொடர்வது, அச்சுறுத்துவது, “என்னை மணந்துக்கொள்” என்று வர்புறுத்துவது மாதிரியான காரியங்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள். இது ஒரு வகை என்றால், இன்னும் சில வகை கைக்கிளை காதலர்கள் இருக்கிறார்கள்.
2. முதிர்ச்சி அடையாத சில மனிதர்கள், “நான் நினச்சதை அடஞ்சே தீருவேன். எனக்கு கிடக்கலன்னா, அது யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஏடாகூடமாக எதையாவது நினைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு பெண்ணுக்கு பெட்டிஷன் போட்டு, அவள் அதை புறக்கணித்து விட்டால், உடனே ஓவர் ரியாக்ட் செய்து விடுகிறார்கள். அந்த பெண்ணை மிரட்டி இணங்க வைக்க முயல்வது, அவள் அப்படியும் மசியா விட்டால் ஆசிட் அடிப்பது, பிளேடில் கீறிவிடுவது, ஏன் கொலை கூட செய்வது என்று இருக்கும் இது போன்ற ஆபத்தான ஆசாமிகளுக்கு ஆளுமை கோளாறுகளும், சமூக விரோத தன்மையும் இருக்கலாம்.
3. இன்னும் சிலருக்கு அத்திரத்தை அடக்கிக்கொள்ள முடியாத impulse control பிரச்சனை இருக்கலாம், இரண்டு நிமிடம் ஆறப்போட்டிருந்தால் செய்ய வேண்டாமே என்று தோன்ற கூடிய காரியங்களை சற்றும் யோசியாமல் அவசர அவசரமாய் செய்து முடித்து, அப்புறம் “சே இப்படி செய்து விட்டேனே” என்று வருந்துவார்கள்.
முதல் வகை ஆசாமிகளை பார்த்தாலே தெரியும்: யாரிடமும் சரியாக பேசாத சங்கோஜ பேர்வழிகளாய் இருப்பார்கள். “என்னமோ சரியில்லை” என்கிற எண்ணம் அவர்களை பார்த்த மாத்திரமே வந்துவிடும்.
இரண்டாம் வகை ஆசாமிகள், பந்தா பேர்வழிகளாக, சுய புகழ்ச்சிக்காரர்களாக, எதிலும் சகிப்புத்தன்மையே இல்லாதவர்களாக இருப்பார்கள். அடிக்கடி, ஈகோ பிரச்சனைகளாய் பிறருடன் பிரச்சனை பண்ணிக்கொள்வார்கள்.
மூன்றாம் ரகம் தொட்டதற்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும் முன்கோபியாக இருக்கும். தணிந்ததும், சாந்தமாகி விடும் சுபாவம் இருக்கும்.
யார் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒரு தலை காதல்களில் சிக்கி விடாமல் இருக்க பெண்கள் பொதுவாக தெரிந்துக்கொள்ள வேண்டிய யுத்திகள்:
1. முன் பின் தெரியாத ஆண்களாய் இருக்கட்டும், தினமும் சந்திக்கும் ஆண்களாகட்டும், எல்லோரிடமும் ஒரு டிஸ்டென்ஸ் மெயிண்டேன் செய்வது அவசியம். நட்புக்காக நீங்கள் ஓவராய் ஈஷிக்கொண்டால் அதுவே பிரச்சனைகளுக்கான காரணமாகி விடலாம்.
2. எந்த ஆண் வந்து காதல் சொன்னாலும், அவனை அவமானப்படுத்தி விடாதீர்கள். அவன் காதல் ஒரு காம்ப்லிமெண்ட் தானே, அதனால் ”தாங்கஸ், ஆனா நாட் இண்டரெஸ்டெட். ஆல் தி பெஸ்ட்” என்று பொலைட்டாக சொல்லி நழுவி விடுங்கள்.
3. “அவன் அப்படி சொன்னாண்டி” என்று உடனே பெண்கள் மாநாட்டில் எல்லோருக்கும் சொல்லி அவன் மானத்தை வாங்கி விடாதீர்கள். நீங்கள் அவனை எப்படி மதிப்பிட்டாலும், யாருடைய சுய மரியாதையையும் காயபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை. அப்படி செய்வது அநாகரீகமும் கூட
4. நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் தொடர்ந்து வழிகிறானா? ரக்ஷா பந்தன் இருக்கவே இருக்கு….அவன் கையில் ஒரு ராக்கியை கட்டி சகோதரனாக்கிக்கொள்ளுங்கள்!
5. அப்போதும் தொடர்ந்து வந்து வம்பு பண்ணுகிறானா? ஓ என்று அழுது, “இது எனக்கு கஷ்டமா இருக்கு. இப்படி செய்யாதே” என்று சிம்பத்தி சம்பாதியுங்கள். எக்காரணம் கொண்டும், “உன் கைய உடைப்பேன், உன் காலை உடைப்பேன்” என்று மிரட்டி விடாதீர்கள்.
6. இதையும் தாண்டி பின் தொடர்கிறானா? உங்கள் வீட்டில் சொல்லி உங்கள் பாதுகாப்பை அதிகரியுங்கள்.
7. பெண்களுக்குள் எவ்வளவு பாலிடிக்ஸ் இருந்தாலும், பாதுகாப்பு என்று வரும் போது, எல்லோரும் ஒத்துமையாய் இருந்தாலே problem characterகள் உங்களை அண்டமாட்டார்கள்.
8. உங்களை யாராவது பின் தொடர்ந்து வருவதாய், அல்லது தொலைபேசியில் தொந்தரவு தருவதாய் தோன்றினால், இதற்கு பெயர் ஸ்டாக்கிங் Stalking. இது சட்டப்படி குற்றம், இதற்கு தண்டனைகள் உண்டு. உடனே காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்
இவை எல்லாம் பெண்கள் தெரிந்துக்கொள்ள கூடிய விஷயங்கள், எடுத்து கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள்….ஆனாலும் நம் நாட்டு சட்டமும், காவலும் இன்னும் போன நூற்றாண்டு பாணியிலேயே செயல் பட்டுக்கொண்டிருப்பதால், இப்படி பட்ட போஸ்ட் மார்டன் யுவதிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும் அவை கொஞ்சம் முன் வந்தால் தான் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க முடியும்.
குமுதம் ஸ்நேகிதி-இல் இருந்து வெட்டி ஒட்டியது
14 comments:
namma ooru payanungalukku erotomania varraadhukku modha kaaranam cinema thaan ! Acquired clerambault syndrome :)
oodagangalukku role irukka?
.
//இதிலேயே நேரத்தை செலவழித்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு பக்த மீரா, ஆண்டாள், இவர்கள் இருவருமே தி கிலாரெம்பால்ட் சின்ரோமால் பாதிக்க பட்ட பெண்கள். /
:-))
இத பக்த கோடிகள் நம்புவாங்கன்றீங்க?
ஒரு ஆண், பெண்ணை உடல் கவர்ச்சியால் காதல் என்று சொல்லும்போது ,எப்படி பக்குவமாய் எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கிறீர்கள். தேவையான ஒன்று நம் சமூகத்திற்கு. ஆண்களுக்கு பெண்ணை பாலியல் கவர்ச்சி மற்றும் உடல் சார்ந்த அழகியல்கூறுகளைத் தாண்டி மனுசியாகப் பார்க்க ஏன் முடிவதில்லை. இயற்கையானதுதனா?
பதிவர்களுக்கான சந்திப்பில் ஒரு ஆண் ஒரு பெண்ணை வர்ணித்ததால் வந்த பிரச்சனைகள்
http://www.narsim.in/2010/04/blog-post.html
.
நல்ல பதிவு.தகவலுக்கு நன்றிங்க.
இம்மாதிரி நிறைய விசயங்கள் சொல்லி கொடுங்க டாக்டர்!
தலைப்பும், முதல் 4 paragraphs-ம் பயமுறுத்தினாலும், ஆண்டாள், மீரா பெயரையெல்லாம் பார்த்து நிம்மதியாச்சு!!!!!
ஒரு தலை காதலில் நிறைய advantages இருக்கு Dr . இரு தலை காதல் கல்யாணத்தில் முடிந்து, குழந்தை குட்டி என்று பத்தோடுபதின்ஒன்றாக போனால் இந்த ஒரு தலை காதல் காவியமாகும், வரலாறாகும். Later on நம் பாட புத்தகத்தில் syllabus ஆகும் .
மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
பெண்களுக்கான யுத்திகள் நன்று.
அந்தப் பையன் பிரச்சினையில் இருந்து விடுபட என்ன செய்யணும்?
cinema and TV mega serial spoiling the society.Government may restrict some mega serials..
Naanum oru paiyanai kadalithen. Nengal kuriya mudal vagai syndrome endru ninakiren. Avan en udan padikkum manavan. Avan ennai kadalippadupol naane karpanai seidu konden. Avanukkaga gifts, letters, greeting cardsnu vangi vaithen. Oru naal avanidam 'propose' panninen. Avan oppu kollavillai. avan enaai kadalikkamal iruppadai naan nambavillai. Naan unnai kadalikkren, neeyum ennai kadalikkirai endru text, call, emailnu anuppinen. Avanum othungi ponaan. Anaal avan mel paithiamai iruppadai vedikkaiagavum poludupokkagavum payan paduthikondan. Avan nanbargalidam ithai solli solli keli seidu kondirunthan. Sameebathil than therinthathu avan veru oru pennai kadalikkiran endrum antha pennum avanai kadalikkiral endru. Ithai ellam kettavudan athirchi adainthu vitten. Intha karpanai kadalinaal avamanamum kulappamum thaan kidaithathu. En thannambikkaiyum suya mariadaium ilanden. Neengal eludiathai paditha pinbu thaan en pirachnaigalai purindu konden.
Interesting to know the one side love. I think the one side love from women may not give any issues but it is dangerous if it happens to men!. give some tips how they can come out of this De Clerambault's syndrome
Anonymous, what u have gone through is a normal phenomenon which i have passed too in my teens and early twenties :)The difference is u had the guts to tell him.Anyway that guy proved in time that he was unworthy of you! Erotomania is when the person is a complete stranger.
Yes, Kayal, Thanks for the cheer. hope i will be careful in future:-)
ஆண்டாளையும், மீராவையும் சுட்டிக்காட்டியமை நன்று. இந்த நோய் ஆண்களுக்கு வந்ததில்லை என்று வரலாறு சொல்லுகிறதோ. அம்மனை காதல் செய்ததாக யாரும் இல்லையே. ஒருவேளை அம்மன் அடுத்தவன் மனைவி என்ற மனநிலை காரணமாக இருக்கலாம்.
Post a Comment