இந்த படத்தை உற்று பாருங்கள். அப்போலோ ஹாஸ்பிடலின் தபால் தலை இது. இதில் இருக்கும் மனிதர்களை கவனித்தீர்களா? பெண்கள் எல்லாம் நர்ஸுகள், ஆண்கள் எல்லாம் டாக்டர்கள்!!
நான் அரசு மருத்துவமனையில் பணி செய்த போது இதே ஜெண்டர் பயஸை அனுபவித்ததுண்டு.....அங்கு ஆராய்ச்சி அறையில் நான் மட்டும் தான் டாக்டர், என்னுடன் வேலை செய்த மற்ற எல்லோருமே ஆண்கள். சைக்காலஜிஸ்ட்கள், சோஷியல் ஒர்கர்ஸ், லேப் டெக்னீஷியன்கள், உதவியாளர்கள், இத்தியாதி, இத்தியாதி.
அதிலும் குறிப்பாக இந்த சோஷியல் ஒர்க் வேலை செய்த குமார், ஸ்டான்லீ ஆகிய இரண்டு பேரும் எனக்கு வலது கை, இடது கை மாதிரி இருப்பார்கள். துவார பாலகர்கள் மாதிரி இவர்கள் வளைய வர, முதல் முறை வரும் பேஷண்டுகள் நேரே, குமார்/ஸ்டான்லி இடம் போய், “டாக்டர் சார், ” என்று தான் ஆரம்பிப்பார்கள். ”என்கிட்ட சொல்லாதீங்க, நான் டாக்டரில்லை, இவங்க தான்” என்று கை காட்டினால், என்னிடம் திரும்புவார்கள், ”ஸிஸ்டர், எனக்கு நாலு நாளா....” என்று ஆரம்பிப்பார்கள்.
”அவங்க சிஸ்டர் இல்லை, டாக்டர்” என்று சோஷியல் ஒர்க்கர் தெளிவு படுத்துவார். உடனே பேஷண்ட், என்னிடம் திரும்பி, “டாக்டர் சார், நாலு நாளா....” என்று திருத்திக்கொண்டு ஆரம்பிப்பார். .....அந்த அளவிற்கு அவர்கள் மனதில் பதிந்து போய்விட்டிருந்தது: டாக்டர் = ஆண் பால், நர்ஸ் = பெண்பால். நான் பெண்பாலாக இருந்தும் டாக்டராக இருப்பதால், உடனே எனக்கு கவுரவ ஆண் அந்தஸ்து வழங்க பட்டு, நானும் ”டாக்டர் சார்” ஆகி போகும் இந்த போக்கு எங்களுக்கெல்லாம் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும்.
சரி, படிப்பறிவில்லாத பேஷண்டுகள் தான் அப்படி என்று பார்த்தால், நம் தபால் துறையும் அதே நிலை தானா? பெண்கள் என்றாலே நர்ஸுகள் தான் என்று stereotypedடாய் யோசிக்கும் இந்த போக்கு, சே சே, ஷேம் ஷேம்!
20 comments:
மிகவும் யோசிக்க வைக்கும் பதிவு.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
Much awaited discussion from you :) I had similar experiences and even after explanations some were adamant enough to call us sisters. It was annoying in the UG years, because I did not know how to react.Later, whenever a person miscalled me that way, I immediately asked in the most empathetic tone his/her education status and then clarify, that I was the doctor. This ensured that they don't repeat the mistake. And once there was this college guy who said he called me sister out of compassion and a brotherly attitude. I asked him if he called his Professor 'Grandpa, Grandma', Lecturer,'Uncle, Auntie, Sister'. This discrimination as you rightly pointed out is not an ignorance prevailing among the illiterates. It is larger than that. It is a corollary heritage that has been inserted into our genes since ancient times :)
Even today same status
:)
stimulate thinking
Cannot agree with you more on this. The world has changed but the mind in majority of us is yet to change.
மிகவும் வருத்தமாக இருக்கிறது உங்கள் பதிவை பார்த்து.. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நினைப்பார்கள் என்று நினைகாதீர்கள். இங்கே உள்ள தபால் தலையில் ஒரு பெண் மருத்துவரும் உள்ளார் . அது ஏன் உங்கள் கண்ணுக்கு படவில்லை .
புனிதமான அந்த வேலை அவர்களால் மட்டும் தான் செய்ய முடியும் . கூபிடுவதால் அது ஒன்றும் குறை இல்லை தப்பு இல்லை .
செவிலி தாய் பற்றி உங்கள் மனதில் ஏன் இந்த பாகு பாடு ..
U HAVE GOT THE CORRUPTED MIND AND THINKS AND TAKES EVERYTHING IN A NEGATIVE MANNER AND UR PESSIMISTIC dr. sHALINI.
With the advent of so many technologies, almost all professions today can be handled by both men and women.We no longer need the raw muscle power of men who go hunting for family's food and women no longer need to stay at home taking care of kids.We should rise above the stereotypical ideas, preconceived notions to become a developed nation.When will all these be a reality???How can we contribute to this?? By being the change we want to see!!! Take pride in the fact that YOU contribute to that change Dr.!! This blog post of yours reminds me of the book I read. Its by Kiren Bedi titled "empowering women, As I see..."
This could be a true photograph where they were able to bring in few nurses and male doctors for the snap..
see the other picture .. i believe 2 doctors (male and female ) attending a patient in the operation theater or ward i guess :)
I do not think that Postal Ministry has not done this with intention.
But I too observed that in medical industry the staff give to much importance to the designation, grade.
There will be disparity between Doctor, Nurse, warden boy, watchman. They dont treat each other as human beings.
Dear Mr.Sasikumar
I don't know anything abt ur educational qualification and profession. If you are working in some place in some grade, you will be naturally be happy to be addressed with that post name.A watchman's job is also sacred and tough, I accept. Not everyone can work like them in shifts (day and night shifts alternatively). But if some outsider (who is new to your office)calls you a "Goorka" inside office, can you accept that? At times you may be very tired and can't present yourself with good outlook and at that time if someone addresses you as "BEGGER", can you take it lightly 'cos beggers are also human beings? What Dr. means is also the samething.
Mr. Sasikumar, if Dr.'s mind is corrupted or pessimistic, she would not 've posted this blog:
http://justpsychobabble.blogspot.com/search/label/role%20model%20women
Hi Sasi kumar,
What Dr.Shalini says here is blatant truth. And this patriarchal attitude among people in higher cadres is an unhealthy situation boss. Just try to focus on what she says. You need not judge her.
And as Parimala said , everyone deserves to be addressed by the work they do. I bet u don't call ur boss as 'பெரியப்பா , மாமா, சித்தப்பா அத்தை, சித்தி '. Do you Sasi? :)
guys, pls note: the lady in green scrubs is a nurse too. Therefore all the women in the stamp are nurses and all the men are doctors. Clearly, this stamp should be a hundred years old now:(
பேஷண்ட் டாக்டரை எப்படி கூப்பிடுகிறார் என்பது அவ்வளவு முக்கியமல்ல. என்னுடைய பல கிளையண்ட்ஸ் என்னை பெயர் சொல்லி கூப்பிடுவது உண்டு. அதிலும் சின்ன சின்ன வாண்டுகளும் ஆசையாய் என்னை பெயர் சொல்லி அழைப்பது சகஜமே. அதை நானும் கேஷுவலாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். வெளிநாடுகளில் டாக்டரை விடுங்கள், ஆசிரியர், பேராசிரியர், பிரெசிடெண்ட் என்று எல்லோரையுமே எல்லோருமே பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள்....அதனால் மரியாதை குறைந்து போவதாய் யாரும் நினைத்துக்கொள்வதில்லை. என்னை சிஸ்டர் என்று கூப்பிடுவதால் நானும் ஒண்ணும் குறைந்து போய்விட போவதில்லை. ஆனால் மேட்டர் என்னவென்றால், நம் மக்களின் மனதில் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்கும் என்கிற பழம்பதிவு இன்னும் மாறவில்லை....அதை பற்றி தான் இந்த பதிவு. மெயின் மேட்டரை விட்டுவிட்டு சப்மேட்டரை பிடித்துக்கொண்டு எல்லோரும் தொங்குவதை நிறுத்தலாமே?!
டாக்டர், உங்களைப்பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் நீங்கள் யார், எவ்வளவு down to earth person என்று!!! Infosys Chairman-ஆக இருக்கும் போது நாராயணமூர்த்தி கூட canteen -இல் token வாங்கி, 'Q'-இல் நின்று தான் சாப்பிடுவாராம். அதனால் அவரை யாரும் குறைத்து மதிப்பிட போவதில்லை. அதுவல்ல problem. ஒரு male தான் இந்த வேலை செய்ய வேண்டும், ஒரு female இந்த வேலை தான் செய்வார் என்று society -இல் இருக்கும் ஒரு கண்ணோட்டம் தான் வருத்தமாக இருக்கிறது. அப்படியே ஒரு female இருந்தாலும் அவர் எல்லா விஷயங்களிலும் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறு தானே? இதே பதிவை ஒரு male Dr. எழுதி இருந்தால் சசிகுமார்-க்கு இவ்வளவு கோபம் வருமா?
Nicely written... Good one to think...!!
nalla paruinga patientum pennaga thaan kattirukoinga
//guys, pls note: the lady in green scrubs is a nurse too //
:-))))
ஷாலினி,
அதெப்படி பச்சை அங்கியில் இருக்கும் பெண் நர்ஸ் என்று திட்டவட்டமாகச் சொல்கிறீர்கள்?
பின்னால் நிற்பவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் (ஆண்கள்) சீருடை (பெண்கள்) அவர்களை டாக்டர் நர்ஸ் என்று வித்தியாசப்படுத்துகிறது.
அங்கே பெண்ணும் டாக்டராக ஆணும் நர்ஸாக காண்பிக்கப்படாதது குற்றமே.
ஆனால் , பச்சை அங்கியில் உள்ள ஆண் பெண் இருவருக்கும் எந்த பிரத்யோக அடையாளங்களும் ( ஸ்டெதெஸ்கோப் / சீருடை) இல்லாமல் ஒரே வண்ணைத்தில் ஒரே மாதிரியாய்தானே காட்டியுள்ளார்கள்?
It will change soon;I can see it in around the corner, may be in another 10 years. I remember in the movie Meet the Parents (Year 2000), Ben Stiller acts as a Nurse, whenever he introduces himself as Nurse people stare at him strangely for while. At Year 2000 America was like that, so India will take bit more time. If my guess becomes real, in these regards India will be faster than any other country.
காலம்காலமாக ஆண் மருத்தவர்களையே பார்த்துவந்தால் சிலருக்கு உடனே மாறமுடியவில்லை. இப்போதெல்லாம் டாக்டரம்மா என்றே மக்கள் அழைக்கத்தொடங்கிவிட்டனர். ஆனால் நர்ஸ் என்ற சொல் பெண்பாலை குறிப்பதாகவே உள்ளது. ஆண்களை கம்போண்டர் என்றே சொல்லுகிறார்கள் மக்கள். வெளிநாடுகளைப்போல ஆண்களும் அதிகளவு நர்ஸ் வேலைக்கு படித்தால் நிலை மாறிவிடும்.
உங்கள் கருத்து இங்கு மலுகடிக்க படுகிறது , ஆனால் நீங்கள் கூறியதில் உறுதியுடன் இருப்பீராக !!! நோயாளி கூட பெண்ணாக இருக்குது , ஏன் ஆணா இருக்க கூடாத !!!! பலகினமானவர்கள் பெண்கள்தான !!!
நான் கூட ஆண், பெண்கள் உரிமைய்கு குரல் கொடுக்கிறேன் கொடுப்பேன் ..... " அப்பாட இவங்கள திசை திருப்பியாச்சு , மாத்தியோசி" !!!! --
Transnational Hero hamdhan
Post a Comment