Friday, May 7, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி? 33

உருப்படியான ஆணை தேர்ந்து எடுப்பது எப்படி என்பதை பற்றி இத்தனை வாரங்களாக பார்த்தோம். இப்படி எல்லாம் ஜலித்து புடைத்து, ஆய்ந்து பரிசோதித்து தான் ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா? சும்மா அப்பா அம்மா சொல்லுகிற ஏதோ ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டினால் ஆகாதா? என்று நீங்கள் கூட யோசிக்கலாம்.

இதில் ஒரு பெரிய சூட்சமமே இருக்கிறது. உலக ஜீவராசிகள் அனைத்திலுமே பெண் தான் தனக்கு வேண்டிய ஆணாய் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளூம். எந்த ஜீவராசியிலும் ஆண் பெண்ணை தேர்ந்தெடுப்பதே கிடையாது. இதை தான் டார்வின் செக்ஷுவல் செலக்ஷன் என்றார். அதாகப்பட்டது, பெண் இனம் ஆண்களை தர பரிசோதனை செய்து, “தி பெஸ்ட்” ஆணை மட்டுமே கலவிக்கு தேர்வு செய்யும். இப்படி நடக்கும் கலவியல் தேர்வில் ஜெயிக்கவே ஆண் மிருகங்கள் அழகழகான் கவர்ச்சி உருப்புக்களை வளர்த்து பெண் இனத்தை ஈர்க்க பார்க்கின்றன. ஆண் சிங்கத்தின் அழகான பிடரி, ஆண் மயிலின் அழகான தோகை, ஆண் சேவலின் அழகான கொண்டை, ஆண் யானையின் நீளமான தந்தம்…..அவ்வளவு என்ன ஆர்ஜண்டீனாவின் நீல அலகு வாத்தின ஆணுக்கு தான் உலகிலேயே மிக நீளமான ஆணுருப்பு, முழுதாய் அரை மீட்டர் நீளம்…..எல்லாம் எதற்காக? பெண்களை கவர்ந்து பாலியல் தேர்வில் வெற்றி பெறுவதற்காக!

இப்படி பெண் பாலியல் தேர்வை நடத்துவதும், ஆண் அதில் பங்கெடுத்து வெற்றி தோல்வியை சந்திப்பதும் தான் ஆரம்ப கால மனிதர்களுக்குமே நடைமுறையாக இருந்தது. உதாரணத்திற்கு இராமாயண சீதாயை எடுத்துக்கொள்வோமே….மஹா விஷ்ணுவின் அவதாரமாகவே ஸ்ரீ ராமன் வந்தாலும், அன்னலும் நோக்கி, அவளும் நோக்கியிருந்தாலும், அவள் சும்மா ஒன்றும் அவனை தேர்ந்தெடுக்கவில்லையே. ”மஹா விஷ்ணு அவதாரமாவது மண்ணாங்கட்டியாவது, முதல்ல சிவ தனுசை ஒடச்சி காட்டு, அப்புறம் நீ பாஸா ஃபெயிலானு நான் முடிவு பண்ணுறேன்”, என்று கறாராகத்தானே பாலியல் தேர்வை நடத்தினாள்.

அந்த கால இந்திய பெண்கள் எல்லாம் தற்தம் காதலனை/கணவனை இப்படி நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தேர்வு செய்ததினால் தான், முந்தைய கால இந்திய ஆண்களுக்கு வீரம் அதிகமாக இருந்தது. அதனால் தான் வெளிநாட்டு ஆசாமிகளிடம் நாம் தோற்காமல் இருந்தோம். ஆனால் போக போக, இந்திய பெண்கள் இந்த பாலியல் தேர்வு முறையை கைவிட்டு, பெட்டி பாம்பாய் அடங்கி போய், தராதரமே பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் கண்டவனுக்கும் கழுத்தை நீட்ட ஆரம்பித்தார்கள்…..அப்போதிலிருந்து இந்திய ஆண்களிம் வீரியம் குறைந்து போனது, வெளிதேசத்து ஆண்களுக்கு ஒட்டு மொத்த தேசமே அடிமை ஆகி போனது!

ஆக பெண்கள் இயற்கையின் பிரதிநிதிகள். இயற்கை தன் “சர்வைவல் ஆஃப் தி ஃபிட்ட்டெஸ்ட்” நிபந்தனையை பெண்களை கொண்டே அமல் படுத்துகிறது. அதனால் தான் உலகின் எல்லா ஜீவராசியிலும் பெண்ணே பாலியல் தேர்வுகளை முடிவு செய்கிறது. ஐந்தறிவு இருக்கும் ஜீவன்களே இவ்வளவு உஷாராக இன தேர்வு செய்யும் போது, ஆறு அறிவு இருப்பதாக நினைத்துக்கொள்ளூம் மனித பெண், இன்னும் எவ்வளவு உஷாராக தன் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஆக, இது வரை சொன்ன அத்தனை துணை தேர்வு குறிப்புக்களையும் வைத்து, மிக எச்சரிக்கையாய், ஆணை அலசி சிறந்தவனாய் ஒருவனை பார்த்து choose செய்து விட்டீர்களா? வெரி குட்! இனி இவனை எப்படி கை ஆள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆனால் அதற்கு முன்னால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான அறிவியல் ரகசியம் ஒன்று! ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்? இதென்ன பிரமாதம், சின்ன குழந்தை கூட சொல்லுமே, இருவருக்கும் பிறப்புருப்பு வெவ்வேறாக இருக்கிறது, அது தானே என்கிறீர்களா? அது சரி, இந்த பிறப்புறுப்புக்கள் ஏன் வித்தியாசமாக இருக்கின்றன? அந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று யோசித்தீர்களா? இதற்கு காரணம் ஆண் உடம்பில் ஊறும் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஒரு ஹார்மோன்.

நாம் இந்த தொடரில் ஏற்கனவே பேசிய சமாசாரம் தான், இருந்தாலும், உங்களுக்காக ஒரு சின்ன கதை சுருக்கம்: ஜனிக்கும் போது எல்லா மனித குழந்தைகளுமே பெண் பாலாய் தான் ஜனிக்கின்றன. அந்த குழந்தையின் மரபணுக்களில், ஒரு Y குரோமோசோம் இருந்தால், அந்த கருக்கு 6 வாரங்கள் ஆகும் போது இந்த Y குரோமோசொம், அந்த பொடியனின் உடம்பில் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த டெஸ்டோஸ்டீரோன், அந்த குட்டி உடம்பு முழுக்க பறவி, ஏற்கனவே பெண் வடிவமாய் இருக்கும் அவன் உடம்பையும் மூளையையும் ரீவையரிங் செய்து ஆண்மை படுத்தி விடும். இது என்ன புது கதையா இருக்கே, ஆதாரமில்லாம நான் நம்ப மாட்டேன் என்று அடம் பிடிக்க தோன்றுகிறதா?

ஆதாரம் 1: ஆண்களுக்கு இருக்கும் முலைகள். எப்படியும் இவன் தான் பாலே கொடுக்க போவதில்லையே, அப்புறம் எதற்காக அவனுக்கு முலைகள்? ஏன் என்றால், அவன் தோல் உருவான ஆரம்ப நாட்களிலே அவன் உடம்பு பெண் வடிவாய் இருந்ததால், முலைகளும் அமைந்து விட்டிருந்தன. அதற்கு அப்புறம் தானே அவன் ஆணாய் மாறினான்? அதனால் முலைகள் அப்படியே தங்கிவிட்டன!

ஆதாரம் 2: சில குழந்தைகளுக்கு இந்த ஆண்மை படுத்தும் படலம் முழுமை பெறாமல், பாதியிலேயே நின்று விடுவதுண்டு…..அப்போது பிறப்புருப்பிலோ, மூளையிலோ, பாலினமாற்றம் முழுமை பெறாமல் அரை குறையாக இருப்பதினால், பிறந்து வளர்ந்த பிறகும் இந்த பாலியல் அடையாள கோளாறூகள் தொடர்வது உண்டு.

ஆக தகுந்த அறிவியல் ஆதாரங்களை வைத்து நமக்கு இப்போது தெரியும் பாலியல் உண்மை: இந்த ஆண் என்பவன் தன் தாயின் கருவில் இருந்த அந்த ஆரம்ப 6 வாரங்களுக்கு பெண் பாலாய் தான் இருந்தான். அதற்கு பிறகே ஆணாய் மாறினான். இப்படி பாலின மாற்றம் ஏற்பட்ட போது, அவன் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது போலவே அவன் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் முதல் மாற்றம்: அவன் மூளையின் மொழி மையம் சின்னதாகி போனது. முகத்தை பார்த்து ‘என்ன மூடில் இருக்கிறாள் இவள்?” என்று கண்டு பிடிக்கும் மூளையின் பாகமும் அவனுக்கு சிறுத்துவிட்டது. இதை போலவே குரலை வைத்து ஒருவரின் மனநிலையை யூகிக்கும் தன்மையும், ஒரே சமயத்தில் பல தகவலகளை ஒரிங்கிணைத்து யோசிக்கும் தன்மையும் அவனுக்கு இல்லாமல் போனது.

இவை எல்லாம் பெண் உருவாய் இருந்த போது அவன் மூளையில் இருந்த மையங்கள் தான். ஆனால் அவன் மூளையினுள் டெஸ்டோஸ்டீரோன் பாய்ந்த பிறகு இந்த மையங்கள் மறைந்து அதற்கு பதிலாக, பொருட்களை லாவகமாக கையாளும் தன்மையும், துள்ளியமாய் குறி பார்க்கும் தன்மையும், திசைகளையும், தூரங்களையும் யூகிக்கும் தன்மைகளும் அவனுக்கு புதிதாய் ஏற்பட்டன…..

இந்த தன்மைகள் எல்லாம் ஆண்களுக்கு மட்டும் ஏன் இருக்கின்றன? பெண்களுக்கு ஏன் அவ்வளவாக இல்லை? என்கிறீர்களா?

சபாஷ்! சரியான கேள்வி. அதற்கு பதிலும் ரொம்ப ஸ்வாரசியமானதே. மனித புணர்ச்சியில் பெண்ணுக்கு பெரிய வேலை இருப்பதில்லை. அவள் சும்மா இருந்தாலே போதும். ஆனால் ஆணூக்கோ, உடல் பாகங்களை ஒருங்கிணைத்து செயல் பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அவனுக்கு இந்த co-ordination சரியாக வரவில்லை என்றால், அவன் இன பெருக்கத்திற்கே லாயக்கி அற்றவனாய் போய் விடுவானே. அதனால் தான் மனித ஆணுக்கு மட்டும், இந்த கண், கை, உருவ ஒருங்கினைப்பு ரொம்பவே அவசியமான ஒரு தேவை. இந்த தேவையை அனுசரித்து தான் இயற்கை அவனுக்கு இதற்குண்டான மூளை இனைப்புக்களை புதிதாக உருவாக்கி தருகிறது. இப்படி கலவியல் தேர்வில் வெற்றி பெற இயற்க்கை இவனுக்கு கொடுத்த, இந்த பொருத்தி ஆளும் தன்மையை தான் மனித ஆண் ஆயுதம் செய்யவும், வேட்டை ஆடவும் பயன் படுத்திக்கொண்டான். இந்த மூளை மாற்றங்கள் எல்லாம் அவனை ஒரு நல்ல வேட்டுவனாக்க உதவின.

இந்த வேட்டுவ மூளை அவனை திறமையாக வேட்டையாடி வம்சம் வளர்க்க வைத்தாலும், ஒரு பெண்ணிடம் நைசாக பேசி, அவள் முக ஜாடையை புரிந்துக்கொண்டு நடக்கும் பக்குவமெல்லாம் இல்லாதவனாய் அவனை இது மாற்றிவிட, பாவம் ஆண்கள்……அப்போதிலிருந்தே பெண்களிடம் பேச்சில் தோற்று போக ஆரம்பித்தார்கள்.

இந்த பாழாய் போன இயற்கை ஏன் இப்படி ஆண்களின் பேச்சு மையத்தை சின்னதாக்கி தொலச்சிதோ, என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது…..என்ன செய்வது மனித பெண்ணின் இடுப்பு எலும்பின் இடுக்கு வழியே பிரசவிக்க வேண்டுமானால் குழந்தையின் தலை ஒரு குறிப்பிட்ட சைஸ்ஸில் இருந்தால் தான் முடியும். மனிதர்களோ குரங்கு இனத்தை சேர்ந்தவர்கள்….சிங்கம், புலி, மாதிரி மாமிச பட்சினிகளாய் இருந்தால், பரம்பரை பரம்பரையாக வேட்டையாடிய பழக்கத்தில் மூளையும் ரெடிமேடாய் வேட்டைக்கென்றே வடிவமைக்கபட்டதாய் இருந்திருக்கும். மனிதனோ பழம் தின்னி குரங்கு வகையை சேர்ந்தவன்…..ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மின் ஏற்பட்ட ஒரு கொடும்பனி காலத்தின் போது, பஞ்சம் பிழைக்க அவன் உணவு முறையை மாற்றினான்……திடீரென்றூ மாமிச பட்சினியாய் மாறினான்…..இதை அனுசரித்து, அவன் மூளையினுள் சில புதிய வேட்டுவ மையங்களை உருவாக்க வேண்டிய அவசர கட்டாயம் இயற்கைக்கு. இந்த புதிய மையங்களை மூளையில் நிருவினால், அப்போது தலை சுற்றளவு பெரியதாகிவிடுமே? அதிலும் ஒரு பிரச்சனை, பிரசவத்தின் போது இடுப்பு எலும்பில் அகலத்திற்கு உட்பட்டே சுசுவின் தலை இருந்தாக வேண்டும். அதனால் தான் வேட்டையின் போது அதிகம் தேவை படாத, மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் ஏரியாக்கள் எல்லாம் அவுட். அதற்கு பதிலாக வேட்டுவ ஏரியாக்கள் இன்!

ஆணின் மூளை மாற்றங்களை புரிந்துக்கொள்ளாத பெண்கள், “இவன் ஏன் என்னை போல சரளமாக பேச மாட்டேன் என்கிறான்? என் முகத்தின் பாவத்தை இந்த முட்டாள் புரிந்துக்கொள்ளவே மாட்டானா?” என்றெல்லாம் கவலை படுகிறார்கள்.

அவனுக்கு நிறைய பெண் சவகாசம் இருந்திருந்தால், “ஓகோ, பெண்கள் எல்லோரும் இப்படி தானா?” என்று அவன் அந்த அனுபவத்திலாவது புரிந்துக்கொண்டிருப்பான். பெண்களோடு அதிகம் பழகாத உத்தம புத்திரனாக அவன் இருந்தால் போச்சு, பெண்களின் இந்த வாய் மொழியும், உடல் மொழியுமே போதும் அவனை திக்கு முக்காக்கிவிட!

ஆகையால், ஸ்நேகிதிகாள், உங்கள் ஆணை ஹாண்டில் செய்ய, நீங்கள் முதலில் அவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்…..அவன் டெஸ்டோஸ்டீரோனால் மாற்றியமைக்க பட்ட ஒரு புது பிறவி. அவன் உங்களை மாதிரி இல்லை. உங்களை போலவே அவனும் பேசணும், புரிஞ்சிக்கணும், அன்பை வெளிபடுத்தணும் என்றெல்லாம் அவனிடம் ஓவராய் எதிர்ப்பார்க்காதீர்கள். இதை எல்லாம் அவனால் செய்ய முடியாது, காரணம் இதற்கு உண்டான மூளை மையங்களே அவனுக்கு அவ்வளவாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச மொழி மையத்தை வைத்து கொண்டு, ஏதோ அவனால் முடிந்தது, கொஞ்சம் சொதப்பலாக பேசினாலும், “பரவாயில்லை, இத்துனூண்டு மொழி மையத்தை வெச்சிக்கிட்டு, எனக்காக சிரமப்பட்டு இவ்வளவு பேசுகிறானே” என்று அவன் முயற்சிக்கு மதிப்பெண் கொடுங்கள். அவனை அவனாகவே இருக்க அனுமதியுங்கள். வித்தியாசங்களை மதித்து, அவனை ஏற்றுக்கொள்ள உங்களை தயார் படுத்திக்கொள்ளூங்கள்….

Understand his biology. இயற்கையாகவே அவனுக்கு இருக்கும், இந்த இயலாமைகளை புரிந்துக்கொண்டு, அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்…..அப்புறம் பாருங்கள், அவனை ஹாண்டில் செய்வது எவ்வளவு ஈஸியாகிவிடும் என்று!

26 comments:

வால்பையன் said...

”இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம்” என்ற பதிவிற்கு இந்த பதிவில் இருந்து சில வரிகள் தேவைப்படுகிறது!

எடுத்து கொள்ள உங்கள் அனுமதி தேவை!

ராஜன் said...

ஐய்யோ இந்த பதிவ என் காதலி பாத்தான்னா கிழிஞ்சுரும் ! அவ்வ்வ்வ் காளை அடக்கு கல்லத் தூக்குன்னு ஆரம்பிச்சுடுவா மேடம் ! உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி !

ராஜன் said...

//இனி இவனை எப்படி கை ஆள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
//


ஏது ! விட்டா இனி பிரிட்ஜ் வாசிங் மிசின் மாதிரி யூசர் மேனுவல் கழுத்துல தொங்க விட்டுடுவீங்க போலயே!

Babu Kumar said...

Dr,
Instead of removing the language parts in a male brain, why didnt the nature made the pelvic bones of a female a bit bigger so that it can accomodate a bigger head of a baby while delivering.

மோனி said...

..//அவனை அவனாகவே இருக்க அனுமதியுங்கள் - அவனை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுங்கள்//..

That's all. The Matter is Finished

இராஜ ப்ரியன் said...

எல்லாமே புதிய அறியசெய்திகளாக உள்ளது. அருமையான எழுத்து.நன்றி.......

மோனி said...

..//காரணம் இதற்கு உண்டான மூளை மையங்களே அவனுக்கு அவ்வளவாக இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச மொழி மையத்தை வைத்து கொண்டு, ஏதோ அவனால் முடிந்தது, கொஞ்சம் சொதப்பலாக பேசினாலும், “பரவாயில்லை, இத்துனூண்டு மொழி மையத்தை வெச்சிக்கிட்டு, எனக்காக சிரமப்பட்டு இவ்வளவு பேசுகிறானே” என்று அவன் முயற்சிக்கு மதிப்பெண் கொடுங்கள்//..

மூளை மையங்கள் அவனுக்கு அவ்வளவாக இல்லை-ன்னு ஏன் சுத்தி வளைக்கணும்..?
பெண்கள் விஷயத்தில் அவனுக்கு சுத்தமாக மூளை இல்லை-ன்னு டைரக்டா சொல்லிடுங்க. நாங்க கோவிச்சுக்க மாட்டோம். (உண்மையத்தானே சொல்றீங்க..)

..

அப்புறம் ஒரு சினன விஷயம்...
முளை-க்கும், மூளை-க்கும் ஒரே “ள” இல்ல-மா...

msanthosh2004 said...

The best blog I've ever read. Absolutely thought provoking. Thanks a lot for sharing Shalini.

வால்பையன் said...

//ஏது ! விட்டா இனி பிரிட்ஜ் வாசிங் மிசின் மாதிரி யூசர் மேனுவல் கழுத்துல தொங்க விட்டுடுவீங்க போலயே!//

பங்காளி இந்த பாயிண்டை நான் யோசிக்கவேயில்ல! இருந்தாலும் உளவியல் ரீதியா ஒரு ஆணை அணுக இன்று ஒரு பெண்ணுக்கு சில விசயங்களில் விழிப்புணர்ச்சி தேவை, இல்லைனா உன்னைய மாதிரி ஆளுங்க தலையில மொளகாய் அரைச்சிருவிங்களே!

Dr N Shalini said...

வால்பையன் சார், permission granted, இந்த பதிவிலிருந்து வரிகளை நீங்கள் உருவிக்கொள்ளலாம்.

Dr N Shalini said...

Babu, அருமையான கேள்வி. பெரிதாகிக்கொண்டே போகும் மனித குழந்தையின் தலைக்கு இடம் தரத்தான் ஏற்கனவே மனித பெண்களின் இடுப்பு அகன்று இருக்கிறது. உதாரணத்திற்கு உங்கள் கண்ணில் படும் எந்த விலங்கையும் உற்று கவனியுங்களேன்....ஆண் பெண் இரண்டுக்குமே இடுப்பு சுற்றளவு கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் மனித பெண்ணுக்கும் ஆணுக்கும் இடுப்பு சுற்றளவில் எக்கசெக்க வித்தியாசம் உண்டு. அதனால் தான் மனித பெண்ணுக்கு இடுப்பு அகலமாய் இருக்கிறது. இன்னும் கூட அகலமாக்கினால் தான் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.....பட் வாட் டு டூ, இடுப்பு எலும்போடு தானே தொடை எலும்பு சேர்கிறது. இடுப்பு ரொம்ப அகன்றால் தொடை எலும்பு புரண்டு போகும், அப்புறம் பெண்களால் நடக்கவே முடியாதே. ஏற்கனவே இப்போது இருக்கும் அகன்ற இடுப்பினாலேயே பெண்களின் நடை சற்றே கோணலாகத்தான் இருக்கிறது....இன்னும் அகன்றால் கட்டுப்படியாகாதே.
“பெண்ணின் மறுபக்கம்” படித்து பாருங்கள்....இதை பற்றின எல்லா தகவலும் அதில் விளாவரியாக இருக்கும்.

Kathir said...

மேடம் இந்த வரிகள்
"ஏதோ ஒரு கழுதைக்கு கழுத்தை நீட்டினால்"..
மிகைபடுத்த பட்டு உள்ளது.

Srikanth said...

very very nicely written better my wife would have read this and i will get my wife back....

Srikanth On the Web said...

டாக்டர்..உங்களின் இந்த பதிவை என் மனைவி மட்டும் படித்தாள் என்றால்...ம்ம்...அது மட்டும் நிச்சயம் நடக்கப்போவதில்லை....ஆனால் படித்தால் அவள் தான் தாய்க்குப்பின் தாரம்.....

ரோகிணிசிவா said...

dear dr,
in full stretch i read your blog,esp this one , awesome ,good points to ponder ,thanks for sharing .keep blogging .

Anonymous said...

// டெஸ்டோஸ்டீரோன், அந்த குட்டி உடம்பு முழுக்க பறவி, ஏற்கனவே பெண் வடிவமாய் இருக்கும் அவன் உடம்பையும் மூளையையும் ரீவையரிங் செய்து ஆண்மை படுத்தி விடும். //

Dr, ஒரு சின்ன சந்தேகம். ஒரு சில பெண்கள், ஆண்களை போலவே குணங்களை உடையவர்களாகவே இருக்கிறார்களே. ஆங்கிலத்தில் கூட tomboy என்று கூறக் கேட்டிருப்பீர்கள். பெண்ணில் இருந்து ஆண் தோன்றினால், பெண்ணுக்கு எங்கிருந்து ஆணுக்குரிய குணங்கள் வந்திருக்கும் ?

உங்கள் கட்டுரை மிக அருமை. I'm actually waiting for you to write on another topic [which I dont want to discuss here]. So, I'll wait.

Regards,
Raj

PARIMALA said...

ஆம்பிளை மாதிரி இருக்கா/திரியறா/வேலை செய்யறா என்று சொல்லப்படும் (என் போன்ற) பெண்களுக்காக நீங்கள் ஒரு புக் எழுத வேண்டும் Dr.

Sumathi said...

Very well written with lot of information. It really helps women to understand men!!

kayal said...

செமத்தியா இருக்கு :) I thought this dose might create furore amongst men. But alas you proved time and again ,that our analytical brain parts are not gender biased .
டெரரா டேக் ஆப் பண்ணி ஸ்மூத்தா லேன்ட் பண்ணிடீங்க மச்சி :)

flower said...

Dr.shalini is the fallower of PERIYAR.But she has written about RAMA,SITA, SHIVA, VISHNU.

simariba said...

ஷாலினி மேடம் ஆண்களின் மேனுஃபாச்சரிங்க் டிஃபெக்ட்ஸ் எல்லாம் அழகா சொல்லிட்டிங்க!! இது புரியாம நிறைய டைம் யோசிச்சு வேஸ்ட் பன்னியிருக்கேன். தாங்க்ஸ்!! இனி ஹஸ்பண்டை ஹாண்டில் பன்னுறது ஈஸின்னு தோணுது.

Sankarlal's Thoughts said...

அதிலும் ஒரு பிரச்சனை, பிரசவத்தின் போது இடுப்பு எலும்பில் அகலத்திற்கு உட்பட்டே சுசுவின் தலை இருந்தாக வேண்டும். அதனால் தான் வேட்டையின் போது அதிகம் தேவை படாத, மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் ஏரியாக்கள் எல்லாம் அவுட். அதற்கு பதிலாக வேட்டுவ ஏரியாக்கள் இன்!
-- இதை என்னால் ஏற்றுகொள்ள இயலாது. தலை பெரிதா இருந்தால் குழந்தை பிறப்பு கடினம் என்பது சரியே. மொழி, முகம் பாவம், குரல் ஸ்ருதி உணரும் எரியாகளை மூளையியல் வைக்க பெரிய தலை தேவை இல்லை.

விலங்கினத்தில் பெண் விலங்கு ஆணை தேர்ந்தெடுக்க காரணம் பெண் விலங்குகள் குறைவாக இருப்பதால் அவைகளின் தேவை அதிகம். மனித இனத்தில் ஆண்கள் are in demand. அதனால் ஆண்கள் பெண்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அனால் காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. விரைவில் பெண்கள் ஆண்களைதேர்ந்தெடுப்பார்கள்.

மதி said...

ஆண்கள் எப்படி இருக்கனும்/வளரனும்னு சொல்ற நீங்க... இப்படி இல்லாத/வளராத ஆண்களுக்கு என்ன வழின்னு சொன்னா நல்லா இருக்கும்...

Anonymous said...

ஏன் டாக்டர் நீங்க ஆண்களால ரொம்ப பாதிக்க பட்டிருக்கிரீங்களா ?
எல்லாத்துக்கும் , விஞ்ஞான விளக்கம் சொல்லுற நீங்க , இயற்கை எண்டு சொல்லுற நீங்க , அந்த இயற்கை, உலகம் ,உயிரினம் எப்படி உருவாச்சு ? முதல்ல பதில் சொல்ல முடியுமா ?

சும்மா பெண் உடம்பு , ஆண் உடம்பு எண்டு மட்டும் எழுதிற நீங்க முடிஞ்சா மனச பத்தி எழுதுங்க . அது உங்களால முடியாதுன்னு நினைக்கிறன்,ஏன்னா நீங்க உடம்ப மட்டும் படிச்சவங்க .

PARIMALA said...

//Anonymous said...
ஏன் டாக்டர் நீங்க ஆண்களால ரொம்ப பாதிக்க பட்டிருக்கிரீங்களா ?
எல்லாத்துக்கும் , விஞ்ஞான விளக்கம் சொல்லுற நீங்க , இயற்கை எண்டு சொல்லுற நீங்க , அந்த இயற்கை, உலகம் ,உயிரினம் எப்படி உருவாச்சு ? முதல்ல பதில் சொல்ல முடியுமா ?//

Dear Anonymous, Please read Dr.'s Pennin Marupakkam.You will find all the answers in it!!!!

kayal said...

ஹாய் அனானிமஸ் , மரு. ஷாலினி , நீங்கள் கேட்ட கேள்வி பற்றி எப்போவோ எழுதி விட்டார். நேரம் இருந்தால் அவருடைய் ' பெண்ணின் மறுபக்கம் ' வாசித்து மகிழுங்கள் !