என்ன ஸ்நேகிதிகாள், ஆண் மூளையின் வடிவமைப்பில் இருக்கும் வித்தியாசங்களை தெரிந்துக்கொண்டாயிற்றே. இனிமேல், “அவன் ஏன் என்னை மாதிரி நிறைய பேச மாட்டேன்றான், அவன் கவலையா இருந்தா நான் உடனே கவனிச்சு, என்ன ஏதுனு விசாரிக்கிறேனே, நான் அப்செட்டா இருந்தா மட்டும் ஏன் அவன் கண்டுக்கவே மாட்டேன்றான்? ..ஏதாவது வாக்குவாதம்னா உட்கார்ந்து பேசாம ஏன் ஓடி போயிடுறான்….” என்பது மாதிரியான உங்கள் கேள்விக்கு தெளிவு பிறக்கட்டும்.
ஒன்று. உங்களை மாதிரி வள வள என்று வார்த்தை சுத்தமாய் அவனால் பேச முடியாது, காரணம் அவன் ஆண் என்பதால், அவன் மூளையில் பாயும் டெஸ்டோஸ்டீரோன் அவன் மொழி மையத்தை சின்னதாக்கிவிடும்.
இரண்டு: உங்களை போல முகபாவம் உணர்ந்து, மூடை புரிந்துக்கொள்ளும் தன்மை அவனுக்கு இல்லை. இப்படி ஒரு தன்மை அவனுக்கு இருந்தால், அவன் சிறந்த வேட்டுவனாக இருந்திருக்க முடியாது. அதனால் இயற்கை இந்த மையத்தை மைனஸ் செய்து விட்டிருக்கிறது அவம் மூளையில்
மூன்று: நீங்கள் ஸ்ருதி உயர்த்தி, கீச், கீச் என்று கத்தி பேசி, உங்கள் தரப்பு ஞாயத்தை என்னதான் தெளிவாக எடுத்து சொன்னாலும், அதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் விட்டால் போதும் என்று “எஸ்கேப்” ஆகிவிடுகிறானே ஆண், அது ஏன் தெரியுமா? அவன் வேட்டுவ மூளையை பொறுத்தவரை, “கீச் கூச்சல் = ஆபத்தான் மிருகம் அட்டாக் பண்ணப்போகுது, அதனால் மகனே எஸ்கேப்!” அதனால் தான் நீங்கள் என்ன மெனக்கெட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும், தலைவர் பாட்டுக்கு அபவுட் டர்ன் அடித்து போயே போய் விடுகிறார்.
இப்படி இருக்கும் இவனை எப்படி கையாள்வதாம்?
முதலில், அவனிடம் ரொம்ப தொண தொண என்று பெண்களிடம் பேசுவதை போல பாரகிராஃப் பாரகிராஃபாய் பேசாதீர்கள். இந்த மாதிரி விளாவரியான பேச்சு, பெண்களுக்கு ஸ்வாரசியமாய் இருக்கும், ஆனால் பாவம், ஆணின் குட்டி சைஸ் மொழி வழ மையத்தை திக்கு முக்காடவைத்து விடும். உதாரணத்திற்கு பெண்கள் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும், ஆண்கள் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். பெண்கள் ஒரே அழுமூஞ்சி சீரியலை தினம் தினம் பார்த்துக்கொண்டிப்பார்கள். எல்லாம் நீட்டி முழக்கி பேசும் முழம் முழமான டையலாக்குகள். சம்மந்தமே இல்லாத பின்ணணி இசை வேறு, ஏடாகூடமான அங்கிளில் எல்லாம் கேமிரா சுற்றி, வெற்று ஷாட்டுகளில் நேரத்தை வீணடித்திருந்தாலும், கொஞ்சமும் சலைக்காமல் பெண்கள் இந்த பிதற்றலை பார்க்கிறார்களே, ஏன்? பிகாஸ் அவர்களுக்கு மொழி வள மையம் பெரிசு, அதற்கு தீனி போடுவது போல, எச்சசெச்சமாய் பேசினாலும், பேசுவதை கேட்டாலே, பெண்களுக்கு பிடித்துவிடுகிறது.
இதுவே ஆண்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளை கவனியுங்கள். அதிகம் பேசாத விளையாட்டு, அல்லது அளந்து பேசுகிற செய்தி தொகுப்புக்கள், அல்லது சத்தமே இல்லாத செக்ஸ் சேனல் என்று தான் ஆண்கள் பார்ப்பார்கள். அதெல்லாம் இல்லையே, எங்க வீட்டு தாத்தா கூடத்தான் பெண்கள் பார்க்கும் நெடுந்தொடர்கள் பார்க்கிறார்…அதுவும் ரொம்ப ஆர்வமாய் என்கிறீர்களா? பின்னே, தாத்தாவுக்கு வயதாகிவிட்டதால் டெஸ்டோஸ்டீரான் குறைந்து போயிருக்கும்….அதனால் தான் அவர் பெண்கள் பார்க்கும் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்.
இளைமை துடிப்புள்ள, டெஸ்டோஸ்டீரான் ததும்பும், எந்த நிஜ ஆண்மகனுக்கு நெடுந்தொடர் பார்க்க பிடிக்காது. வசனம் குறைவான, விறுவிறுப்பாய் நகருகிற, ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிற காச் மூச் படங்களை தான் அவர்கள் மனம் நாடும். All because of the high testosterone!
தொலைகாட்சி நிகழ்ச்சிக்கே இது தான் நிபந்தனை என்றால், அவரை ஸ்மார்டாக கையாள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? சிம்பிள்….நிமிடத்திற்கு நூறு கிலோ வார்த்தை என்றெல்லாம் கொட்டி பேசாமல், அவனிடம் அளந்து பேசுங்கள். பாயிண்டு பாயிண்டாய் சுருக்கமாய் சொல்லுங்கள். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லி மொக்கை போடாதீர்கள். ஒரு தடவை சொன்னாலும் ஒழுங்காக சொன்னீர்கள் என்றால் தலைவருக்கு புரியும். ஆனால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்னீர்கள் என்றால் நிச்சயம் கோட்டை விடுவார்கள். அதனால், லைட்டாய், நச்சென்று பஞ்ச் டயலாக் மாதிரி பேசி விட்டு போங்கள். மிக துல்லியமாய் ஆண்களின் மனதில் பதிந்து விடும்.
அடுத்து: முக பாவம். பெண்களிம் மூளை பிள்ளை வளர்ப்பிற்கென்றே பிரத்தியேக அம்சங்களை கொண்டது. பல குழந்தைகளை ஒரு சேர வளர்க்கும் தாய்க்கு, குழந்தை பேசாவிட்டாலும், அதன் முக பாவத்தை வைத்து, அதன் மனதை புரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் ஆணூம் இதே போல முகபாவத்தை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவனாய் இருந்தால், அவன் வேட்டையின் போது கவனம் சிதறிபோகக்கூடும். அயோ பாவம் குட்டி மான், என்ன பாவமா பாக்குது, இதை போய் கொல்லுவதா? என்று இவன் முகம் பார்த்து ரியாக்ர்ட் செய்துவிட்டால் இவனை நம்பி இருக்கும் இவன் பிள்ளைகளின் கதி அதோகதியாகி விடுமே. அதனால் தான் அவம் மூளையில் முக பாவத்தை உணரும் மையம் அளவில் சிறியதாகிவிட்டிருந்தது. இந்த சின்ன ஜாடைகிரகிப்பு மையத்தை வைத்து க்கொண்டு அவன் எப்படி உங்கள் மூடை மிக துல்லியமாக புரிந்துக்கொள்வான்? அதனால் அவனே புரிந்துக்கொண்டு வந்து, “ஆசை கிளியே கோபமா?” என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பான் என்று எதிர்ப்பார்த்து ஏமாறாதீர்கள். அவனுக்கு முக ஜாடையின் நுனுக்கங்கள் தெரியாது. ஏதோ ”ஒரு மாதிரி இருக்கா ” என்ற அளவில் தான் புரியும். ஒரு மாதிரி என்றால் எக்சாக்ட்டாய் எந்த மாதிரி என்பதை எல்லாம் நீங்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாய் புரியவைக்க வேண்டும். அவன் புரிந்துக்கொள்கிறானோ இல்லையோ, கோபமாய் இருந்தாலும் கொஞ்சம் நேரம் பிகு செய்து விட்டு, “நான் கோபமா இருக்கேனே, ஏன்னு கேட்க கூடாதா?” என்று நீங்களே டியூஷன் வேறு எடுத்தாக வேண்டும். இப்படி நீங்கள் பயிற்றுவித்தால் போக போக அவனுக்கே லைட்டாய் புரிய ஆரம்பிக்கும், இவள்
இந்த கோணத்தில் முகத்தை வைத்துக்கொண்டு இப்படி விழிகளை திருப்பினால் அதற்கு இது தான் அர்த்தம் என்று!
மூன்றாவது: குரலின் ஸ்ருதி. அவன் வேட்டுவ மூளைக்கு தெரிந்ததெல்லாம், கீச் ஸ்ருதி என்றால் பெரும் ஆபத்து என்பது மட்டும் தான். அதனால் அவனிடம் பேசும் போது உச்ச ஸ்தாயிக்கு குரலை உயர்த்தாமல், கீழ் ஸ்தாயிலேயே பேசி முடிங்கள். நீங்கள் குரலை உயர்த்தினால் அவன் அட்டாக் செய்ய பார்ப்பான், அல்லது எஸ்கேப் ஆக பார்ப்பான். அப்புறம், “நான் பாட்டுக்கு இங்க லோ லோனு கத்துறேன், ஏன்னு கேட்காம அடிக்க வர்றான் பார்/அப்படியே போறான் பாரு, என் மேல் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல்” என்றெல்லாம் புலம்பி பிரயோஜனம் இல்லை. நீங்கள் லோ டோனில் பேனினால் பயன், லோ லோ என்று பேசினால், நோ யூஸ்.
ஆக, கூட்டி கழித்து பார்த்தால், ஆண்களிடம் பேசும் போது, பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நாகரீகங்கள் இவை தான்: கொஞ்சமாய், டூ தி பாயிண்டாய், மலர்ந்த முகமாய், கலகலப்பான ஸ்தாயியில் பேசுதல் வேண்டும்.
அதெப்படி எப்பயுமே இப்படியே பேச முடியுமா? சீரியஸா ஏதாவது பேசும் போது, இதை எல்லாம் நியாபகமா வெச்சிக்க முடியும்? என்கிறீர்களா….நியாயம் தான்….ஆனால் என்ன செய்வது ஆணின் மூளை மாதிரி வேறு மாதிரி ஆயிற்றே. பெண்ணிடம் பேசும் போது இத்தனை நெளிவு சுளிவுகள் பார்க்க வேண்டியதில்லை. ஆணிடம் பேசும் போதோ, அவனுக்கு தகுந்த படி பேசினால் மட்டுமே அவன் மனதில் பதியும். அதிலும் அவன் நல்ல மூடில் இருக்கும் போது, நீங்கள் எந்த விதிகளை கைபிடிக்காவிட்டாலும், கொஞ்சமாவது அவன் காதில் விழும். அவன் மோசமான மனநிலையில் இருக்கும் போது தான் நீங்கள் மறக்காமல் டெக்னிக்கை பயன் படுத்தி அவனிடம் பேச வேண்டும்.
திடுதிடுதிப்பென்று ஒரு நாள், அதுவும் அவன் மோசமான மூடில் இருக்கும் போது இப்படி டெக்னிக்காய் பேச வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? அதனால் தான் பொதுவாகவே இதே ரீதியில் பேசுவதையே உங்கள் நிரந்தர பழக்கமாக்கிக்கொண்டீர்கள் என்றால், தீவிர சந்தர்பங்களிலும் தங்கு தடையின்றி மிக சரியாக உங்கள் பேச்சு அவன் மனதில் பதியும்.
உங்களுக்கான, இந்த வார ஓம் ஒர்கே இது தான். உங்களுக்கு தெரிந்த ஆண்களிடம், காச் மூச் என்று உச்ச ஸ்ருதியில் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசி பாருங்கள். அவர்களின் ரியாக்ஷன் என்ன, நீங்கள் சொல்வதை புரிந்துக்கொள்கிறார்களா? ஏற்றுக்கொள்கிறார்களா? அந்த இடத்திலேயே இருந்து உங்களளை பேச விடுகிறார்களா? என்று கவனியுங்கள்.
அடுத்து, மேல் சொன்ன டெக்னிக்கின் படி, பாயிண்டு பாயிண்டாக, மத்யஸ்தாயிலில், கேஷுவலாக பேசிப்பாருங்கள். ஒரே விஷயத்தை ரிபீட் செய்யாமல், மொக்கை போடாமல், விளையாட்டாய் பேசிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணி நேரம் பேசினாலும், அட்டென்ஷனில் இருக்கிறார்களா இல்லையா? நீங்கள் சொன்னதை ஏற்றூக்கொள்கிறார்களா? நீங்கள் சொன்னதெல்லாம் அவர்கள் மனதில் பதிகிறதா என்று கவனியுங்கள்.
இப்படி இரண்டு விதத்தையும் நீங்களே பரிசோதித்து பார்த்துவிட்டு, நிஜத்தை புரிந்துக்கொள்ளுங்கள்……அப்போது தன் உங்களுக்கு ஊர்ஜிதமாகும், ஆண்களிடம் பேசுவதற்கென்றே ஒரு பிரத்தியேக டெக்னிக் இருக்கிறது. அந்த டெக்னிக்கை பயன் படுத்தினால் தான் ஆடவர் குலத்தில் உங்கள் பாச்சா பளிக்கும். இப்படி எல்லாம் செயற்கையாய் டெக்னிக்குகள் பயன் படுத்த எனக்கு பிடிக்காது, நான் இயல்பாய் பேசுவது போலத்தான் பேசுசேன் போங்க, என்று ஆட்சேபிக்கிறீர்களா? நோ பிராப்ளம். இந்த போஸ்ட் மார்டன் யுகத்தின் அதி நவீன யுத்திகள் வேண்டாம், நான் கற்கால மனிதனின் மொட்டை முனை ஆயுதங்களை வைத்தே சமாளித்துக்கொள்கிறேன் என்றால், you are welcome to use your own devices.
கூரான ஆயுதங்கள் இருந்தால் சீக்கிரம் சாதிக்கலாம் என்று யோசிக்கும் முற்போக்கு பெண்ணா நீங்கள்? இந்த டெக்னிக்கை உங்கள் வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஆண்களிம் மீதும் பிரயோகித்து பாருங்கள். மேலும் மேலும் பயின்றூ அதில் எக்ஸ்பர்ட் ஆக முயலுங்கள். இதுவே உங்கள் இயல்பான உரையாடல் நுனுக்கமாகிவிட்டால் ஆண்களை ஹாண்டில் செய்வது உங்களுக்கு மிக சுலபமாகிவிடும்.
இந்த உரையாடல் யுத்தியை முதலில் கற்று தேர்ந்து விட்டீர்கள் என்று இனி அடுத்து வருவது…….என்னவாக இருக்கும், உங்களால் யூகிக்க முடிகிறதா?
12 comments:
Wokay. But do you think its possible for a women to speak as such as u suggest? Wouldn't be unnatural?
You are right. Very useful info, esp @ workplace. I guess the next would be on 'handling male colleagues and bosses'.
superb madam.I am going to follow your technic . thanking you.
செம சூப்பர் தொடர் ஷாலினி... தொடர்ந்து படிக்கிறேன். தோழியரிடமும் படிக்க சொல்கிறேன்.
ஒரு சந்தேகம்.
ஆண்களின் மொழி வள மையம் சிறிதாகி விட்டது என்கிறீர்கள். ஆனால் கவிதை, இலக்கியம், இசை அரசியல் பேச்சு, அலுவலக மேலாண்மை பேச்சு என்று இது தொடர்பான இடங்களனைத்திலும் ஆண்கள் பெண்களை விட சில (பல ?!?!) படிகள் முன்னே இருக்கின்றனரே...அதெப்படி?
Your statement is 100% correct.You are really great.Ladies must go through your lesson.
Hi shalini,Your blog is very good and also interesting .I am always eagerly waiting for your next story.you have been writing ஆண்களை அசத்துவது எப்படி? continue story is good.பெண்களை அசத்துவது எப்படி? If you upload those topics,It will be useful for all men.Because I do not know what they(women) think and like?
All the best for your upcoming story.
“கீச் கூச்சல் = ஆபத்தான் மிருகம் அட்டாக் பண்ணப்போகுது, அதனால் மகனே எஸ்கேப்!”
அருமை ....
அடுத்த உத்தியை கற்க ஆவலுடன் உள்ளோம்
டாக்டர் , இந்த தொடர் முடிந்து புத்தகமாக வெளிவந்தவுடன் எனக்கு பிடித்த அத்தனை பெண்களுக்கும் வாங்கி தர தீர்மானித்து உள்ளேன்.
அருமையா எழுதுறீங்க ஷாலினி, ஆமா சிவ என்ற நண்பர் கேட்ட கேள்விக்கு என்ன பதில்.
ஒரு சந்தேகம். ரொம்ப நாளாய். என்ன காரணத்தினால் ஆண்கள் சபரி மலைக்கு செல்ல இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர். சபரி மலை பயணம் ஏன் ஆண்களை இவ்வளவு அதிகம் ஈர்க்கிறது? எனக்கு பதில் சொல்லவும்.
Wow...Its too good mam! Experienced this... And thnks too!
Post a Comment