Sunday, March 29, 2009

பால் கடவுள்

சாதாரணமாய் என் சொந்த அபிப்ராயங்களை பதிவு செய்யும் பழக்கமே எனக்கு இல்லை. என் அபிப்ராயம் பதிவு செய்யும் அளவிற்கு முக்கியமானதாய் எனக்கு தோன்றுவதே இல்லை....ஆனால் இன்று ஒரு முக்கியமான மேட்டர் என் கவனத்திற்கு வந்தது.

சைதாப்பேட்டை அரசு மாநகராட்சி மருத்துவனையில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில் என்ன பெரிய அதிசயம் என்கிறீர்களா? விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்த உடனே அந்த தாயுக்கு போஸ்ட் பார்டம் டிப்ரெஷன் என்கிற பிரசவத்திற்கு பிறகான மனசோர்வு ஏற்பட்டு விட்டதால், அவள் சற்றும் அசையாமல், பற்களை அப்படியே இறுக கட்டிக்கொண்டு, சாப்பிடாமல், நீர் அருந்தாமல் இருக்க, தாய் பால் சுரக்காமல் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டான்.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு தகுந்த மனநல சிகிச்சை அளிக்க முடியாமல் அந்த மருத்துவமனைகாரர்கள் கையை விரிக்க, அந்த பெண்ணையும் அவள் குழந்தையையும் மூட்டை கட்டிக்கொண்டு, அவள் கணவன் எமர்ஜென்ஸியாய் எங்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

ஞாயிற்றுகிழமை லீவு தான். ஆனால் அவசரம் என்று நான் ஓடிவந்தேன். அந்த பெண் அறுத்துப்போட்ட வாழைமரம் மாதிரி அப்படியே மயங்கி வீல் சேரில் சரிந்து கிடந்தாள். தொட்டால், தட்டினால், பெயர் சொன்னால், எதற்குமே விழிக்கவில்லை. சரி ஊசி போட்டு உசுப்பிக்கலாம், என்று குழந்தையை பார்த்தால், குழந்தை டீஹைட்ரேட் ஆகி, உடம்பில் நீர் சத்து வத்தி போய், உளர்ந்து இருந்தான். ”குழந்தைக்கு பால் குடுக்கலையா?” என்றேன்

“பிழுஞ்சி பார்த்தோம். பாலே வரலை,சர்க்கரை தண்ணீ கொடுத்தேன்”
“அதெல்லாம் கொடுக்ககூடாதே!. ஏன் அந்த ஆஸ்பிட்டல்ல குழந்தை பெத்த வேற யாராவது அம்மாகிட்ட கொடுத்து பால் குடுக்க சொல்லி இருக்கலாமே?”

“கேட்டோம். அவங்க தர மாட்டேனுட்டாங்க...” என்றார் கண்வர் ஒரு மாதிரியான குரலில்

“ஏன்?”

“நாங்க வேற சாமி கும்பிடுறோமாம், அவங்க வேற சாமி கும்பிடுறாங்களாம், அதனால் தர முடியாதுனுட்டாங்க”

“வாட் நான்சென்ஸ்” என்று நான் சொல்லும் போதே அந்த ஆசாமி நெளிந்து, “ஜாதி பிரச்சனை மேடம்” என்றார்.

பசிக்கு அழும் ஒரு குழந்தையின் உயரை காப்பாற்ற மனசில்லை, ஜாதி பற்றி பேச மட்டும் தெரிகிறது என்று எரிச்சல் சரக் என உரைத்தது....எத்தனை பேருக்கு ரத்தம் தந்து காப்பாற்றுகிறோம், எத்தனை பேருக்கு கிட்னி, ஈரல், கண் என்று உருப்பு தானம் செய்கிறோம்...இதற்கெல்லாம் ஜாதியா பார்க்கிறோம்? அந்த எல்லா விதமான தானத்திலுமாவது இழப்பு, வலி என்று ஏதாவது சில அசவுகரியங்கள் இருக்கலாம்....ஆனால் இலவசமாய் தாராளமாக சுரக்கும் பால், எந்த வித அசவுகரியமுமே இல்லாமல், சுலபமாய் கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றலாம்...அதை செய்ய ஒரு பெண் தயங்கினாள், அதுவும் சாமியின் பெயரால் என்றால், மனிஷியா அவள் என்று தானே கேட்கத்தோன்றுகிறது!

அதற்கு மேல் இது பற்றி பேசிக்கொண்டிருக்க நேரமில்லை, குழந்தைக்கு எப்படியாவது உடனடியாக பால் தேவையே என்று, குழந்தையை சரியாக போர்தி, மூடி, அள்ளி எடுத்துக்கொண்டு, நானும், நர்சும், எங்கள் மருத்துவமனையில் பிரசவமாகி இருந்த ஒரு பெண்ணின் அறைக்கு போனோம். “இந்த குழந்தையின் அம்மாவுக்கு பாலில்லை, ரெண்டு நாளா ஆகாரமே இல்லாம குழந்தை டீஹைட்ரேட் ஆகீட்டான், நீங்க கொஞ்சம் பால் தந்தா பிழைச்சிப்பான்” என்று குழந்தையும் கையுமாய் சிக்னலில் பிச்சை எடுப்பவரை போல, நானும் சிஸ்டரும், அம்மா தாயே போட, அந்த பெண், “அய்யோ, எனக்கு பாலில்லையே டாக்டர், லாக்டஜன் தான் தர்றேன், “ என்று உடனே திரும்பி, லாக்டஜன் டப்பாவை எடுத்து எங்களிடம் கொடுத்தாள். ”எவ்வளவு வேண்ணா எடுத்துக்கோங்க”

அவள் மனிஷியே இல்லை. அந்த கணத்தில் அந்த குழந்தைக்கு அவள் தான் தெய்வம்! தெய்வம் ஆவது இவ்வளவு சுலபமாக இருக்கும் போது, சிலர் ஏன் மனிஷியாக கூட இருப்பதில்லை?

16 comments:

kayal said...

i understand how jeopardizing the ignorance of casteism believers, could be.
Highly lethal in such non violent ways.
The gandhian way to kill!

PAAL KADAVUL THALAIPU NETHIYADI YAAGA IRUKKU...

ச.பிரேம்குமார் said...

மனிதத்தை விட மதத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் உள்ளவரை இது போன்ற கொடுமைகள் இருக்கத்தான் செய்யும் :(

Anonymous said...

As you are a doctor, how you didn't know that Lactogen can feed to baby, and it will save the child... If you know already, how come you go and beg a mother, rather than, you can simply buy a Tin, or even you can advise the father to buy Lactogen.
---
Raja

Dr N Shalini said...

Lactogen costs Rs 180 per tin, the couple could not afford that:(
In any case it was a sunday and the shops were closed
Also the infant was so dehydrated that we had to find a quick solution. The best substitute for mother's milk is another mother's milk. Not artificial feed.

வேடிக்கை மனிதன் said...

ஏன் அந்த ஆஸ்பிட்டல்ல குழந்தை பெத்த வேற யாராவது அம்மாகிட்ட கொடுத்து பால் குடுக்க சொல்லி இருக்கலாமே?”

“கேட்டோம். அவங்க தர மாட்டேனுட்டாங்க...” என்றார் கண்வர் ஒரு மாதிரியான குரலில்

“ஏன்?”

“நாங்க வேற சாமி கும்பிடுறோமாம், அவங்க வேற சாமி கும்பிடுறாங்களாம், அதனால் தர முடியாதுனுட்டாங்க”

“வாட் நான்சென்ஸ்” என்று நான் சொல்லும் போதே அந்த ஆசாமி நெளிந்து, “ஜாதி பிரச்சனை மேடம்” என்றார்.

சிவவாக்கியார்,பாரதி,பெரியார் இன்னும் எத்தனை பேர் வந்தாலும்
சாதி என்னும் சாக்கடையில் ஊரிக்கிடக்கும் மனிதப்பன்றிகளுக்கு
மனிதத்துவும் புரியப்போவது இல்லை.

நெஞ்சு பொருக்குதில்லை இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்னும் பாரதியின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.......

வேடிக்கை மனிதன் said...

ஏன் அந்த ஆஸ்பிட்டல்ல குழந்தை பெத்த வேற யாராவது அம்மாகிட்ட கொடுத்து பால் குடுக்க சொல்லி இருக்கலாமே?”

“கேட்டோம். அவங்க தர மாட்டேனுட்டாங்க...” என்றார் கண்வர் ஒரு மாதிரியான குரலில்

“ஏன்?”

“நாங்க வேற சாமி கும்பிடுறோமாம், அவங்க வேற சாமி கும்பிடுறாங்களாம், அதனால் தர முடியாதுனுட்டாங்க”

சிவவாகியார், பாரதி, பெரியார் இன்னும் எத்தனை பேர் வந்தாலும்
சாதி என்னும் சாக்கடையில் ஊரிக்கிடக்கும் மனிதப்பன்றிகளுக்கு
மனிதத்துவம் புரியப்போவது இல்லை

டாக்டரிடம் ஒரு கேள்வி

குழந்தை பிறந்து கிடந்த மருத்துவமனையின் மருத்துவருக்கு ஏன் லாக்டோஜன் குடுக்கலாம் என்ற யோசனை தோன்றாமல் போனது?

SUBBU said...

வலிக்கிது :( :(

Anonymous said...

Thanks Doctor.
Ofcourse, there won't be any substitute can be alternate for Mother's Milk. But for worst case, if can use alternate for survival, should be ok.
I can't believe, those who can't afford even Rs.180 for a life of child. Also you mention that, Sunday the shops are closed... Can anyone believe? All shops were closed on sunday? Usually Milk Powder will be available in all medical shops, right? Do you mean, cannot find a medical shop during sunday....? Which city you are living?
Anyhow, I feel that your answer to my question or your action on that critical situation (if it is true) is very irresponsible.
Sorry, if i am mistaken or hurt to you.
If you like only support comments, please take out 'Anonymous' option.
Because I am not blogger, i do not have any profile to specify.

Thanks!
Raja

butterfly Surya said...

இந்த அவசர வேக உலகத்தில் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மனித நேயமே சிறிது சிறிதாய் மறைந்து கொண்டு வருவது மிகவும் வருத்தபடவைக்கிறது.

But thanx to that lady..
==============================

Dr. I read many books of you. But First time I am visiting your blog.

So happy to know you write in blogs too.

Plz visit my blog on International movies. Hope you like it.

Anonymous said...

//During a UNICEF goodwill trip to Sierra Leone in 2009, Mexican actress Salma Hayek decided to breast-feed a local infant in front of the accompanying film crew. The sick one-week-old baby had been born the same day but a year later than her daughter, who had not yet been weaned. Hayek later discussed on camera an anecdote of her Mexican great-grandmother spontaneously breast-feeding a hungry baby in a village//(Wiki)

Wet nursing is something not popular in our culture due to caste
prejudices. This is something to be
adressed in the media. Thank you for writing about this.

Another sad note. For selfish reasons many opt for formula feeding. This practice has to change. "La Leche League International" is an organisation that promotes breast feeding. Maybe our people will listen when they here about the benefits of
brestfeeding from westerners!

Dr N Shalini said...

wetnursing என்கிற பிறர் பிள்ளைகளுக்கு ஒரு செலிவி தாய் பால் தரும் மரபு தமிழ்நாட்டிலும் பிரசித்தம் தான். டாக்டர் மாத்ருபூதத்தை உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் குழந்தையாக இருந்த போது, அவர் அம்மாவுக்கு பால் போதாமல் இருக்க, எதிர் வீட்டில் வசித்து வந்த வேறு ஒரு பெண் அவருக்கு பால் கொடுத்து வளர்த்தாராம். இப்படி பால் கொடுத்த அந்த செவிலி பிராமண பெண் இல்லையாம். இருந்தாலும், ஜாதி பாராமல், ஒரு பிராமண பிள்ளைக்கு அவர் பால் கொடுத்து காப்பாற்ற முன் வந்த கதையை மாத்ருபூதம் சார் அடிக்கடி சொல்லி, பெருமீதப்பட்டுக்கொள்வார்.

நான் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றிய கோஷா ஹாஸ்பிடல், எக்மோர் பிரசவ ஹாஸ்பிடல், அதன் பின் மனநல மேற்படிப்பு படித்த மதுரை அரசு மருத்துவமனை ஆகிய அனைத்து இடங்களிலும் ஒரு தாய்க்கு பால் வரவில்லை என்றால், இன்னொருத்தாயிடம் இருந்து தான் குழந்தைக்கு பாலை வாங்கி கொடுப்போம். எப்படியும் உபரியாக சுரக்கும் பால், கட்டிக்கொண்டு விடும், பிறகு அதை பிழிந்து எடுத்து வீணாக வெளியே தானே கொட்ட நேரிடும். மேற்சொன்ன எந்த மருத்துவமனையிலும் எனக்கு தெரிந்து எந்த தாயுமே வேறொருத்தியின் குழந்தைக்கு பால் தர மறுத்ததே இல்லை. மறுக்க நாங்கள் விட்டதும் இல்லை, எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி, பால் தரவைத்துவிடுவோம்.

என் சர்விஸில் ஜாதியின் பெயரால் பால் தரமறுத்த பெண்ணை பற்றி நான் கேள்வி படுவது இதுவே முதல் முறை.

sarathy said...

டாக்டர்ஸ் சொல்றத கூட நம்பாத அந்த "யாரோ" வை பற்றி என்வென்று சொல்வது....

just ignore those comments, even they don't have the guts to feed their name..

BALAA said...

இங்கு சாதி என்பது ஒவ்வொர்வனினும் ரத்தத்தில் ஊறி உள்ளது. அதை மாற்ற அடிப்படை கல்வியை மாற்றவேண்டும்.

கல்வி புரட்சி நடைபெறாமல் இதை எதையும் மாற்றமுடியாது. ஒவ்வொருவனையும் அறிவுல்ல்வனவகவும் மனிதனாகவும் மாற்ற முயட்சிக்கலாம் அனால் அந்த முயற்சி அவனுடைய அறிவால் உணரவேண்டும் அப்பொழுதுதான் அது முடியும் இல்லை என்றால் அது சத்திய மில்லை.

அனால் இன்றிய கல்வி குடங்கள் விவேகனத விதியலாயங்கலவகவும் , josephs மெட்ரிக் பள்ளிகளாகவும் உயர்த்து நிட்கிட்றன.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மாத்ருபூதம் அவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளைப் பற்றி நானும் படித்திருக்கிறேன். அவர் மட்டும் வெளிப்படையாக வந்து போராடி மக்களுக்கு செக்ஸ் பற்றி சொல்லவில்லையென்றால். எனக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது.

நல்ல மருத்துவர். அதைவிட நல்ல மனிதர்.

அவரைப்பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட கண்களில் இருக்கும் எரிச்சலை குணப்படுத்த வீட்டிற்கு அருகில் இருக்கும் பெண்மணிதான் தாய்ப்பால் கொடுத்து உதவினாராம்,. இதுபோல பல தாய்கள் இருக்கும் பூமியில் மதம், சாதி என்று சொல்லிக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

karges said...

Dr shalini.. kindly see my mail which is been sent to u and guide me.. blogs r really helpful