Tuesday, April 7, 2009

ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 14

ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ளும் ஸ்நேகிதிகாள், பெண் சும்மா இருந்தாலும், அவளை வேட்டை ஆடி வெல்ல முயல்வது தான் ஆணின் இயல்பு, என்கிற பேஸிக் சைக்காலஜியை புரிந்துக்கொண்டீர்களா?

ஆணின் ஆட்டவிதி இது தான் என்றால் பெண் எப்படி இயங்கினால் அவளுக்கு நல்லது?

ஒரு வேளை அந்த பெண்ணுக்கு அந்த ஆணை பிடித்திருக்கிறது என்றால், இவள் அவனை ஊக்குவித்தாக வேண்டும், இல்லை என்றால் உறவே ஏற்படாமல் போகக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் பெண் ஆணை ஆதரிக்கும், “எனக்கு ஓக்கே” என்கிற சிக்னலை வெளிபடுத்தி ஆக வேண்டும்.

இதற்கு நேர்மாறாய் அந்த ஆணை அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்று வையுங்களேன். இவள் தப்பித்தவறி, தன்னை அறியாமல் லேசாய் கொஞ்சம் ஓகே என்பது போல ஜாடை செய்தாலும் போச்சு, தலைவர் செம ஸ்பீடில் முற்றிகை இட வந்து, கடைசியில், “ஆரம்பத்துலேர்ந்தே எனக்கு விருப்பமில்லை” என்று, இந்த பெண் என்ன சமாளிக்க முயன்றாலும், வெறுப்பு, விரோதம், மனஸ்தாபம் என்று தேவை இல்லாத வம்புகள் பலதும் வந்து சேரும்.

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் பெண்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இந்த ”சிக்னல் சிஸ்டம்”.

எல்லா உயிரினத்திற்குமே, தன் இனத்தோடு உறவாடுவதற்கென்றே சில பிரத்தியேக சிக்னல்கள் உண்டு. உதாரணத்திற்கு நாய், தனக்கு யாரையாவது பிடித்திருந்தால், தன் வாலை ஆட்டிக்கொள்ளும், பூனைக்கு யாரையாவது பிடித்திருந்தால், பக்கத்தில் வந்து உராயும், குரங்கிற்கு யாரையாவது பிடித்திருந்தால், பேன் பார்த்து விடும்….இப்படியாக அந்தந்த இனத்திற்கு என்று பிரத்தியேகமாய் சில “ஓகே,” சிக்னல்கள் உண்டு.

மனிதர்களிலும் இப்படி சில சிக்னல்கள் உண்டு. ஒரு ஆண் தன்னை நெருங்கி வரும் போது, பெண் அவனை பார்த்து தலை குனிந்து நாணி, கோணி, சிரித்து, ஓரப்பார்வை பார்த்து, இடுப்பை மிகையாக அசைத்து, தன் ஆடைகளை தேவை இல்லாமல் சரி செய்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அட அவளுக்கு சிரிப்பு வந்தது சிரிச்சா,
நேரா பார்க்க கூச்சம் அதனால் ஓரக்கண்ணால பார்த்தா,
டிரெஸ் விலகி இருக்கும் அதனால அதை ஒழுங்கு செய்திருப்பா,
அவ இடுப்பை அவ அசைச்சா தப்பா?
என்று எல்லாம் நாம் ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும், நம் அனைவருக்குமே தெரியும், ஒரு பெண், ஆணின் எதிரில் இப்படி எல்லாம் செய்தால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான், “எனக்கு ஓகே, I am available”

இந்த வகையான ”நான் ரெடி” சிக்னலை இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து, அந்த பெண், அவள் உடலை மிக கவர்ச்சியாக வளைத்து, ஆட்டி, பெண்ணின அடையாள உருப்புக்களான, மார்பகம், இடுப்பு, ஆகியவற்றை ஓவராய் வெளி படுத்தினால் அது இன்னும் கொஞ்சம் உரக்கவே “நான் ரெடி” எனறு சொல்வதாகிறது.

உதாரணத்திற்கு சினிமாவில் வருகிற கவர்ச்சிப்பெண் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோமே. அவள் எப்படி உடை உடுத்துகிறாள், எப்படி தன் உடலை, உதட்டை அசைக்கிறாள், எப்படி பேசுகிறாள் என்று மிக கூர்மையாக கவனித்து பாருங்களேன். உடம்பை கவர்ச்சியாக வெளிபடுத்தும் இருக்கமான உடை, தன் இடுப்பை அதிகமாக ஆட்டி ஒரு நடை, ஓவராய் உதட்டை குவித்து, கொஞ்சி கொஞ்சி பேசும் விதம், எல்லாமே, மேலும் மேலும், “ரெடி, ரெடி, “ என்று சொல்லும் இன்விடேஷன் டிஸ்ப்லே INVITATION DISPLAYக்கள்.

இந்த மாதிரியான இன்விடேஷன் டிஸ்பிளேவை பார்த்தால், பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓஹோ, இவள் ஒரு மாதிரி போல என்று நீங்கள் உடனே, உங்களை அறியாமலேயே ஒரு முடிவிற்கு வந்து விடுவீர்கள். அந்த பெண்ணை அவ்வளவாக மதிக்க உங்களுக்கு தோன்றாது. தன் உடலால் காரியங்களை சாதித்து கொள்வாளோ என்று நீங்களே கூட அவளை சந்தேகப்படுவீர்கள்.

பெண்களே இப்படி வெறும் வெளி தோற்றத்தை வைத்து, அந்த பெண்ணின் கலவியல் ஒழுக்கத்தை இவ்வளவு நுனுக்கமாய் ஆராயும் போது, இப்படிப்பட்ட பெண்ணை ஒரு ஆண் பார்த்தால், அவன் என்ன முடிவிற்கு வருவான்?

ரொம்ப மெனக்கெட்டு தன்னை கூடுதல் கவர்ச்சியாய் காட்டிக்கொண்டி, இப்படி வேண்டி, வேண்டி, இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுக்கிறாள் எனறால் என்ன அர்த்தம்? என்னை பார்த்தால் அவளுக்கு ஆசை, என்னுடன் இருக்க அவளுக்கு சம்மதம், அப்படியானால் என் திருப்பணியை நான் துவக்கி விடலாம் போல, என்று துணிந்து தைரியமாய் அந்த பெண்ணை நெருங்கி தொட்டு, உறவு கொண்டாட முயல்வான் ஆண்.

இதுவே, ஏதாவது தேசத்தின் தலைமை பதவியை வகிக்கும் பெண்ணை உதாரணமாய் எடுத்துக்கொள்ளுங்களேன். அல்லது தலைமை பதவி வகிப்பவனின் மனைவியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோமே. லேட்டஸ்ட் ஹிட் மிஷேல் ஒபாமாவை எடுத்துக்கொள்ளுங்கள். மிஷேல் எப்படி உடை அணிகிறார்? எப்படி, உடலை அசைக்கிறார்? எப்படி பார்க்கிறார்? எப்படி நிற்கிறார்? எப்படி நடக்கிறார்? தன் உதட்டை எப்படி அசைக்கிறார், எப்படி பேசுகிறார்?

கவனமாய் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இப்படி தலைமை நிலையில் இருக்கும் பெண்கள், நாணி கோணி, ஓரப்பார்வை பார்த்து கள்ள சிரிப்பை எல்லாம் சிரிப்பதே இல்லை. நாணாமல், கோணாமல், இடுப்பையோ, உதட்டையோ அஷட கோணத்தில் ஆட்டாமல், அப்படியே ஸ்திரமாய் நின்று, நேருக்கு நேர் பார்த்து, தெளிவான குரலில் கணீர் என்று பேசுகிறார்கள். தங்கள் மார்பையோ, வேறு எந்த பெண்ணின் அடையாள குறி பாகத்தையோ, மிகைபடுத்துவதோ, வெளிபடுத்துவதோ இல்லை. ஆக கூட்டி கழித்து பார்த்தால், இந்த வகை உயர் அந்தஸ்து பெண்கள் யாரும் மானவாரியாய், எல்லோருக்கும் எதிரில் இன்விடேஷன் டிஸ்ப்ளே கொடுப்பதே இல்லை. இந்த மாதிரி பெண்களை பார்த்தால் பெண்ணான உங்களுக்கு என்ன தோன்றூகிறது? ஏஞ்சலா மார்கெல், எலிசபெத் ராணி, மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், போன்ற வெளிநாட்டு பெண்களாகட்டும், சோனியா காந்தி, கிரண் பேடி, பர்க்கா தத், மாதிரியான நம்மூர் பெண்களாகட்டும், இந்த வகை பெண்களை பார்க்கும் போது, பெண்களான உங்களுக்கே, “சே சே, ரொம்ப பெரியவங்க, அவங்க கிட்டயே போக முடியாது” என்று தோன்றிவிடும். உங்களுக்கே இப்படி தோன்றீனால், இவர்களை பார்க்கும் ஆண்களுக்கு என்ன தோன்றூம்?

“இது ரொம்ப ஹை கிளாஸ் பொம்பளை, நம்ம எல்லாம் எம்மாத்திரம், நம்ம ரேஞ்ன்சுக்கு ஒத்து வராது,” என்று அந்த பெண்ணை மரியாதை கலந்த பயத்துடன் மட்டும் தான் பார்க்க முடியுமே தவிற, அவள் மேல் காதலோ, ஆசையோ, இச்சையோ கொள்ள முடியாது.

அது ஏன் அப்படி? மிஷேல் ஒபாமாவும் கவர்ச்சியான பெண் தானே, இல்லாமலா பராக் ஒபாமா ஓடி ஓடி காதலித்து கைபிடித்தார்! அப்படி இருந்தும், மிஷேலை பார்த்தால், மற்ற ஆண்களுக்கு ஆசை வரவில்லையே? இதுவே, யாரோ ரோட்டில் போகிற கவர்ச்சியான பெண் என்றால் ஆசை பட்டு அசடு வழிகிறார்களே ஏன்?

ஏன் என்றால் மிஷேல் இன்விடேஷன் டிஸ்ப்ளே எதையுமே வெளிபடுத்துவதில்லை. காரணம் யாரையும் இனி கவர வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

ஆனால் சாமானிய பெண்கள் அறிந்தோ, அறியாமலோ, இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்துவிடுகிறார்கள். அது உடனே ஆண்களை கவர்ந்து விடுகிறது. அதனால் ”நீ அழைப்பு விடுத்தாய், அதனால் நான் ஆஜரானேன்” என்ற ரீதியில் ஆண்கள் அந்த பெண்ணை அணுக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆண்களிம் இயல்பு இப்படி இருக்கும் போது, அவன் எதிரில் போய் இப்படி இன்விடேஷன் டிஸ்ப்ளே செய்வது அறிவாகுமா என்று யோசிக்க தோன்றினாலும், இதில் ஒரு பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? பெண்கள் சும்மா இருந்தாலும், அவர்களை சுற்றியுள்ள கலாச்சரம், பெண்ணை இப்படிப்பட்ட இ, டி யை கொடுக்கவே வற்புறுத்துகிறது. உதாரணத்திற்கு நம்மூரையே எடுத்துக்கொள்வோமே. நம்மூர் பெண்கள் இன்னமும் அச்சம், நாணம், மடம், பயிற்பையே பெண்ணின் உயரிய குணங்களாக கட்டி காப்பாற்ற முயல்வதே, கலாச்சர பாரம்பரியம் என்ற மூட நம்பிக்கையில் தானே. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இந்த அச்சம், நாணம், மடம், பயிற்பு ஆகிய நான்குமே, இன்விடேஷன் டிஸ்ப்ளேக்கள் தான்! இந்த நான்கு குணங்களை ஒரு பெண் வெளிபடுத்தினாலே, அவளது கவர்ச்சிவிகிதம் கூடி விடுகிறது!

ஆக இந்த இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து, ஆணின் ரியாக்ஷனும் மாறிவிடுகிறது. நிறைய இ.வி இருந்தால், ஈஷிக்கொள்வதும், இ, வி யே இல்லை என்றால், ஒதுங்கி விடுவதும் தான் ஆணின் இயல்பு.

அதனால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகளே, உங்கள் இ, வி களை கவனியுங்கள். உங்களுக்கு பிடித்த, நீங்கள் ஊக்குவிக்க முயலும் ஆண்களிடம் இந்த இ, விக்களை வெளிபடுத்தினால், உங்கள் உறவு சூடு பிடுக்கும். நீங்கள் தப்பித்தவறி, கண்டவர் எதிரில் உங்கள் இ.விக்களை வெளிபடுத்தினாலும் போச்சு, பத்தி எறிய ஆரம்பித்துவிடும். அதனால் இந்த சிக்னல் சிஸ்டத்தை மிக ஜாக்கிரதையாக கையாளப்பழகுங்கள். இது தான் உங்களுக்கான இந்த வார ஓம் வர்க்!

9 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நீங்கள் ஊக்குவிக்க முயலும் ஆண்களிடம் இந்த இ, விக்களை வெளிபடுத்தினால், உங்கள் உறவு சூடு பிடுக்கும். //


????

Anonymous said...

naanal, konal yellam innuma irukku... well said Dr. every action has a reaction waiting... take a look at my blog please...

http://athulii.blogspot.com

ஜகதீஸ்வரன். said...

அன்பு சகோதரி,
நீண்ட நாட்களுக்குப் பின் ஆண்களை ஷாண்டில் செய்வது எப்படி தொடர்ந்தற்கு நன்றி.
உங்களுக்கு அதிக வேலை பழு இருப்பது நன்றாக தெரிகின்றது.எனினும் இது போல தொடர வேண்டும் என்று அன்பு கோரிக்கை வைக்கிறேன்.

அன்புடன்
ஜகதீஸ்வரன்.
http://jagadeesktp.blogspot.com/

nagai said...

நானும் உளவியல் பழைய மானவன்....பரவாயில்லை நன்றாகவே இருக்கிறது .....உங்கள் பின்னுட்டத்தில் வேர்ட் fஐண்டரை எடுத்தால் கும்மியடிக்க செளரியமாக இருக்கும்........

kayaljram said...

Whatever u said were known, but only as an ill defined 'instinct'. But now that u have pirichified the nuances, everything falls into place perfectly. Looking forward for the next episode !

குரங்கிற்கு யாரையாவது பிடித்திருந்தால், பேன் பார்த்து விடும்….
idhu varaikum intha vishayam theriyaathu..nallarukku :)

Subash said...

தொடர் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

//ஆக இந்த இன்விடேஷன் டிஸ்ப்ளேக்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பதை பொருத்து, ஆணின் ரியாக்ஷனும் மாறிவிடுகிறது.//

பதிவின் பொருளிற்கு சம்பந்தமல்லாத கேள்வி.
இதேபோல தெழில் நிமித்தமாக வாடிக்கையாளருடன் கலந்துரையாடும்போது கடைப்பிடிக்கவேண்டிய சிக்லன் முறைகள் பற்றி எப்படி தெரிந்து கொள்ளலாம் ?
( இது உங்கள் துறை இல்லாவிடினும் இது பற்றிய தகவல்கள் பெறக்கூடிய புத்தகங்கள் வெப் லிங் தர முடியுமா? )

முக்கிய சிக்கல் என் வயதுதான். இந்த வயதில் பெரிய ஆடர்களிற்கு இவர்களை ஒத்துக்கொள்ள வைப்பது பெரிய பிரச்சனையாகவிருக்கிறது.

பெரியவர்களுடன் தொழில் நிமித்தமாக சீரியசாக கதைக்கும்போதுதான் இந்த சிக்கல். இதற்கு வேறு யாரையும் வைக்க முடியாது. அவர்கள் சீரியசாக நான் சொல்வதை கேட்க வேண்டுமானால் என் body language எப்படி இருக்க வேண்டும் ? ஏதாவது உதவி please

யசோதா.பத்மநாதன் said...

மிக அருமை.வழமை போல்.

Anonymous said...

nice post madam

கண்ணகி said...

useful writing.