சென்ற இதழில் வேண்டாத ஆண்களைக் கண்டால் எப்படி ஆஃப் செய்வது என்பதைப் பற்றிப் பேசினோம். இனி, உங்களுக்கு ஒரு ஆணைப் பிடித்திருந்தால் அவனை எப்படி ஊக்குவித்து, வசப்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
அப்பாடா, இப்போதுதான் மெயின் மேட்டருக்கே வந்தீங்களா, என்று பல சிநேகிதிகள் புன்னகை பூப்பது புரிகிறது... என்ன செய்வது, முதலில் வெத்து ஆண்களை எல்லாம் புடைத்தெறிந்து விட்ட பிறகு தானே தரமான ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அது சரி, இவன் தரமான ஆண் என்பதை எப்படி கண்டு கொள்வதாம்? ஒரு சிநேகிதி எனக்கு ஃபோன் செய்து, ``நம்மகிட்ட பேசுற ஆண்கள்ல எவன் நல்லவன், நம்பகமானவன், எவன் துரோகி, நயவஞ்சகன் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைத் தெளிவாக விளக்குங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.
அதனால், ஆண்களைத் தரம் பிரித்து, தேருபவன், தேராதவன், உருப்படுபவன், உருப்படாதவன், சொத்தை, சொள்ளை, நிஜ குதிரை, மண் குதிரை என்பதை எல்லாம் எப்படிப் பாகுபடுத்துவது என்பதை இந்த இதழில் பார்ப்போம்.
நல்ல தரமான ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். இதை தான் ஆங்கிலத்தில் ஷிவெல்ரி chivalry என்பார்கள். அதாவது பெண் வந்தால், அவளுக்காக கதவைத் திறந்து விடுவது, அவளை முதலில் போக வைத்து விட்டு, பிறகு தான் பின் தொடருவது, அவளுக்கு நாற்காலி இழுத்துப் போடுவது, முதலில் அவளுக்கு உபசரிப்பது.... இத்யாதி என்று ஆண்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வதுதான் குல மகனுக்குப் பெருமை.
பேருந்து வரிசையில் பெண்களைத் தள்ளி விட்டு, மகளிர் மட்டும் இருக்கைகளில், ``ஏன் நான் உட்காரக்கூடாதா?'' என்று அடம் பிடித்து உட்காரும் ஆண். மனைவி தலையில் எல்லா பாரத்தையும் கட்டி விட்டு, ஹாயாய் கைவீசி நடக்கும் ஆண். லிஃப்ட், சினிமா தியேட்டர் வாசல், ஹோட்டல் வாசல் மாதிரியான இடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திபு திபு என்று கால்நடை மாதிரி முந்தி ஓடும் ஆண்கள். சட்டசபையின் பெண் சகா வந்தால் அவளுக்கு வழிவிட்டு நடக்கும் நாகரிகம் கூட இல்லாமல், ``பொம்பளை எனக்கு பின்னால்தான் வரணும்'' என்று வறட்டு இறுமாப்புடன், பந்தாவாய் முந்தி நடந்து போகும் ஆண்கள்.... இவர்கள் எல்லாம் ஓர் அடிப்படை நாகரிகத்தை உணரத்தவறியவர்கள்.
எங்கும், எதிலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று பெண்களுக்கு முன் உரிமையைத் தருவது தான் உச்சக்கட்ட ஆடவர் குணம். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருப்பீர்களே. அதில் அந்த பெரிய கப்பல் மூழ்கப்போகிறது என்று தெரிந்ததும், கேப்டன் லைஃப் போட்டுகளை அவசரமாக இறக்கி, ``பெண்களும், குழந்தைகளும் முதலில் செல்லுங்கள்'' என்பாரே. கவனித்தீர்களா?
ஏதாவது ஊருக்குப் போக நீங்கள் விமானம் ஏறினால், எடுத்த எடுப்பில் வரும் முதல் பாதுகாப்பு அறிவிப்பில், ``விமான விபத்து ஏதும் நேரிட்டால், உங்கள் இருக்கைக்கு அடியில் இருக்கும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு, அவசர வாசலுக்கு வந்துவிடுங்கள். முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியேற வேண்டும், பிறகு ஆடவர்கள் வெளியேறலாம்'' என்று தானே கூறுகிறார்கள்.
ஏன் அப்படிக் கூறுகிறார்கள். மூழ்கும் கப்பல், எரியும் விமானம் மட்டும் அல்ல, எங்கு உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் மகளிரையும், பிள்ளைகளையும் தான் உடனே காப்பாற்ற வேண்டும் என்பது தான் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் பொதுப் பயிற்சி.
அது ஏன் பெண்களுக்கு மட்டும் இந்தச் சிறப்பு கவனிப்பு என்று நீங்கள் யோசித்தால், இந்தக் கேள்விக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்.
இரண்டு தீவுகள். இரண்டிலுமே ஆயிரம் ஆண்களும் ஆயிரம் பெண்களும் இருப்பதாய் வைத்துக்கொள்வோமே. முதல் தீவில் ஆண்களுக்கு எல்லாம் ஏதோ விஷ ஜுரம் ஏற்பட்டு, ஒரே ஒருத்தனைத் தவிர மீதமுள்ள எல்லோருமே மர்கயா என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த தீவில் ஆயிரம் பெண்கள் + ஒரே ஒரு ஆண் மட்டுமே.
அடுத்த தீவில் இதற்கு நேர்மாறாக பெண்களுக்கெல்லாம், விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, ஒரே ஒருத்தியைத் தவிர மீதமுள்ள 999 பெண்களும் மாண்டு விட்டதாய் வைத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த தீவில் 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண்.
இப்போது சொல்லுங்கள், எந்தத் தீவில் ஜனத்தொகை சீக்கிரம் பெருகும்?
1000 பெண்கள் + ஒரே ஒரு ஆண் இருக்கும் தீவிலா? 1000 ஆண்கள் + ஒரே ஒரு பெண் இருக்கும் தீவிலா? நிச்சயம் 1000 பெண்கள் இருக்கும் தீவில்தான் ஜனத்தொகை மட மடவென பெருகும். காரணம், ஒரே ஆணால் ஆயிரம் பெண்களையும் கருவுறவைக்க முடியும். ஆனால், ஆயிரம் ஆண்கள் ஆயிரம் தான் முயன்றாலும், ஒரு பெண்ணால் ஒரு கர்ப்பத்தில் சராசரியாய் ஒரே ஒரு பிள்ளையைத்தானே பெற்றெடுக்க முடியும்.
ஆக, எல்லா உயிரிலும் ஆணை விட பெண்ணின் உயிர் அதி முக்கியமானது. காரணம், அவள் வெறும் ஒரு தனி உயிர் மட்டுமல்ல, அவள் எதிர்கால ஜனத்தொகையின் ஒரு சின்னம். அவள் இல்லை என்றால், வம்சம் விருத்தி அடைய முடியாது என்பதால்தான் ரொம்பவும் நேர்த்தியான கலாச்சாரங்கள் பெண்களைப் போற்றி, முன்னுரிமை தந்து கவுரவிக்கின்றன.
இப்படி ஆண் பெண்ணிடம் கவுரவமாகப் பழகி, அவள் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், அவன் தேறுகிற ஆசாமி. அப்படி இல்லாமல், ``நான் ஆம்பிளை, அதனால் நான் தான் உசத்தி, பெண்கள் எல்லோரும் வந்து எனக்கு ஏவல் புரிய வேண்டுமாக்கும்'' என்று பெண்களைக் குறைவாக நடத்தி, அவர்களை அசவுகரியப்படுத்தும் அற்பனாக அவன் இருந்தால், போச்சு, பையன் தேரமாட்டான் என்று அர்த்தம்.
அதனால் ஆண்களை அலசி, தரம் பிரித்து பாகுபடுத்தும் இந்த ஆய்வின் முக்கிய அளவுகோள், அவன் பெண்களிடம் காட்டும் கண்ணியம்.
அதற்காக பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்பவன் எல்லாமே மகா உத்தமன் என்று உடனே முடிவு கட்டி விடாதீர்கள். ஆண்களில் சில கில்லாடிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண்களோடு நிறைய பரிச்சயம் இருப்பதினால், இப்படி நிறைய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதையே தங்கள் முழு நேர பணியாக அவர்கள் மேற்கொள்வதினால், எப்படி எல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்குப் பிடிக்கும் என்கிற ஆளை அசத்தும் அத்தனை கலைகளும் இவர்களுக்கு அத்துப்படியாக இருக்கும். அதனால் இந்த வகை சல்லாப கேசுகள், பெண்கள் எதிரில் பரம உத்தமன் மாதிரி வளைய வருவார்கள். தெருவில் போகிற வருகிற பெண்களுக்கெல்லாம் கரிசனம் காட்டி, ``உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா?'' என்று வலிய போய் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
ஆனால் வீட்டில் அல்லல் படும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மறந்தும் உதவ முன்வர மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு உண்மையிலேயே பெண்களிடம் கண்ணியமாக இருப்பதில் கவனமே இல்லை. கண்ணியமாக இருப்பதுபோல நடித்து பெண்களைக் கவிழ்க்க பார்ப்பார்கள், ஒருத்தி கவிழ்ந்துவிட்டால், உடனே அவளை ஓரம் கட்டிவிட்டு, அடுத்தவளுக்கு வலை விரிக்க போய் விடுவார்கள். இந்த வகை ஆண்கள், றிக்ஷீணீநீ‡வீƒமீபீ நீலீணீக்ஷீனீமீக்ஷீƒ ஆக மிகவும் பழக்கப்பட்ட லீலை மன்னர்களாக இருப்பார்கள். நீங்கள் சொல்லாமலேயே உங்களுக்காக நிறைய செய்வார்கள். உருகி உருகி உபசரிப்பார்கள். கவனமாகப் பார்த்தால், அதில் கொஞ்சம் பந்தாவும் பகட்டும் தெரியும். தட் மீன்ஸ் வாட்? தலைவர் இதை உபசாரத்திற்காக செய்யவில்லை. அலட்டலுக்காகவே செய்கிறார். தட் மீன்ஸ் அவன் கை தேர்ந்த ஜாலக்காரன். அவனிடம் உஷாராக இல்லை என்றால், தலைவர் உங்கள் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார் என்று அர்த்தம்.
இதற்கு நேர் எதிராய் வேறு சில ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களோடு அதிகம் பழகும் அனுபவமில்லாததால், அவள் எதிரில் எப்படி நடந்துகொள்வது என்பதே அவர்களுக்குத் தெரியாது. நீங்கள்லேசாய் கொஞ்சம் ஹிண்ட் கொடுத்தால், உடனே பிடித்துக்கொண்டு, தக்கப்படி உங்களை கண்ணியமாக நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இந்த வகை அறியாத பிள்ளைகளை தகுந்தவாறு பழக்கி வைத்தீர்கள் என்றால், மிகவும் அக்கறையாய் பெண்களைக் கவனித்து பராமரிக்க பழகிக்கொள்வார்கள்.
இந்த இரண்டு வகை ஆண்களைத் தாண்டி, மூன்றாவது ஒரு ரகம் உண்டு. சுட்டு போட்டாலும் கண்ணியமாய் நடக்கவே தெரியாது. ``நான் ஆம்பிளை,'' என்கிற ஓவர் கர்வத்தில் பெண்களைத் துச்சமாய் மதிப்பிட்டு, வெறும் போகப் பொருளாகவோ அல்லது ஏவலாள் மாதிரியோ மட்டுமே பார்க்கத்தெரிந்த இந்த ஆண்கள், போகப் போக, நிறைய அடி பட்டு, இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது என்று ரொம்ப நாள் கழித்து வயது போன பிறகே புத்திபெறுவார்கள்.
இந்த மூன்று ரகமானவர்களையும் தாண்டி, நான்காவது ரக ஆண்களும் இருக்கிறார்கள். பெண் என்றாலே கூசி, அஞ்சி, ஒதுங்கி ஓடும் இந்த அதீத சங்கோஜ பேர்வழிகளுக்கு பெண் எதிரில் நிற்கவே நடுங்கும். அப்புறம் எப்படி அவன் வந்து அவளை உபசரித்து, சிறப்பு செய்வதெல்லாம்!
ஆக, கைதேர்ந்த லீலைக்காரன், கற்றுக்கொண்டு கலக்குபவன், கர்வத்திலேயே மிதப்பவன், கூச்சத்தினால் ஒதுங்குபவன் என்று இந்த முக்கியமான நான்கு வகை ஆண்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாம் ரக ஆணாகப் பார்த்து தேர்வு செய்வதுதான் புத்திசாலிப் பெண்ணுக்கு அழகு. முதலில் இப்படி ஒரு கண்ணியமான ஆணைக் கண்டுபிடியுங்கள். அவனை எப்படி எல்லாம் ஹேண்டில் செய்வது என்பதை அப்புறம் சொல்கிறேன்......
4 comments:
பெரும்பாலான பெண்கள் இந்த ’கைதேர்ந்த லீலைக்காரன்’-களையே தேர்ந்தெடுத்து பழகி ஏமாந்து வருகிறார்கள் அல்லது வந்துகொண்டு இருந்தார்கள், இல்லையா? ஆனந்த விகடனில் ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற கதைகளை ஜெயமோகன் எழுதியபோது அது இக்கருத்தை ஆமோதிப்பதாக இருந்தது. அதில் அவர் 'ரௌடிகளையும் கோமாளிகளையும் பெண்களுக்கு பிடிக்கும்’ என எழுதியிருந்ததாக ஞாபகம். அதன் பின்னால் இருக்ககூடிய உளவியல் காரணங்களை யோசித்தபோது எனக்கு இப்படித் தோண்றியது. “பெண்களுக்கு தங்களால் செய்ய முடியாத ஆனால் செய்ய ஆசைப்படும் விசயங்களை எளிதாக செய்யும் ஆண்களை பிடிக்கிறது. அதாவது, பெண் தன் இயல்பினாலும் சமுதாயக் கட்டுப்பாடுகளாலும் அச்சம்,கூச்சம் போன்ற குணங்களால் பல விசயங்களை செய்ய முடிவதில்லை. எனவே கூச்சப்படாமல் பொதுவில் சேஷ்டைகள் செய்யும் கோமாளிகளையும் அச்சமின்றி செயல்படும் ரௌடிகளையும் அவர்களுக்கு பிடிக்கிறது” என்று. சரியா மேடம்?
இரண்டு விசயங்கள். எந்த ஆண் பெண்களை சிரிக்கவைக்கிறானோ, இனிக்க இனிக்க பேசுகிறானோ அவனைப்பெண்களுக்கு பிடிக்கும். அவனது நல்ல/கெட்ட குணங்களை பகுத்தறியும் அறிவு பெரும்பாலாண பருவப் பெண்களுக்கு இருப்பதில்லை.
பேச்சு...அந்த ஒற்றை விசயம்.women are verbally induced, இல்லையா மேடம்? Men are visually induced என்பது எப்படி உண்மையோ, அப்படி!
sema classification !
doctor,
where can i get your books?
I tried in landmark ( spencer ) but no stock there.
நீங்கள் Dennis the menace காமிக்ஸ் நிச்சயம் படித்திருப்பீர்கள். அவற்றில் முக்கிய குழந்தை பாத்திரங்கள் டென்னிஸ், ஜோயீ, மார்கரெட் மற்றும் டீனா.
ஒரு எபிசோடில் ஜோயீ ரொம்பத்தான் டென்னிஸ் சொல்லறதுக்கெல்லாம் தலையாட்டறான் என்பது மார்கரெட்டின் துணிபு. ஜோயீக்கு அவ்வாறெல்லாம் இருக்கக் கூடாது என்று சீரியசான உபதேசம் எல்லாம் நடக்கும். ஜோயீயும் அவள் சொல்வதற்கெல்லாம் மண்டையை மண்டையை ஆட்டி விட்டு, “இனிமேல் நான் சுயமாகவே காரியம் எல்லாம் செஞ்சுக்குவேன்” என வீரமாக சூளுரைத்து விட்டு, “அம்மாதிரி நான் செய்யலாமா டென்னிஸ்” என அதே மூச்சில் அவனை பவ்யமாகக் கேட்டுவிட்டு மார்கரெட்டை டரியல் ஆக்குவான்.
பிறகு டென்னிசும் ஜோயீயும் அவ்விடத்தை விட்டு அகல, டீனா மார்கரெட்டிடம் “இதெல்லாம் உனக்குத் தேவையா” என கேட்பாள். மார்கரெட் சுதாரித்து கொண்டு, “இருக்கட்டும், எது எப்படியானாலும் இந்த ஜோயீ பிற்காலத்தில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு நல்ல புருஷனாக அமைவான்” என தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள்.
உங்களது இப்பதிவு, எனக்கு இதை நினைவுக்கு கொண்டு வந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment