இலங்கை தமிழருக்கு மருத்துவரீதியில் உதவுவது இனிமேலாவது சுலபமாக இருக்கும் என்று நம்புவோம் என்று எழுதினேன். யாரோ பெயர் சொல்ல விரும்பாத பிரகஸ்பதி, விளையாடுகிறாயா, மண்டையில மூளை இல்லையா என்பது மாதிரி கமெண்ட் அடித்து, என் சிற்றறிவை தட்டி வேலை செய்ய வைக்க, ஏதோ என்னாலான சின்ன சின்ன துப்புக்கள் சில வற்றை துலக்குனேன்:
1) இலங்கையில் தற்போது எந்த தொண்டு நிறுவனமும் நிவாரண பணிகள் செய்ய வில்லையாம், ரெட் கிராஸை கூட வெளியேற்றி விட்டதாம் ராஜபக்ஷே அரசு. ஆக வெறும் இலங்கை ராணுவத்தின் தயவு தாட்ஷண்யத்தை தவிற வேறு எந்த கதியும் தமிழருக்கு இல்லையாம்
2)இந்தியா நிவாரண நிதி, மருந்துமாத்திரைகள் என்று டண் கணக்கில் அனுப்புவதாக அறிக்கை விடுத்தது. ஆனால் எதை எப்படி அனுப்பினாலும் அதெல்லாம் இலங்கை ராணுவம் தான் பெற்று விண்ணியோகம் செய்யுமாம்....பாரபட்சமின்றி பரோபகாரம் செய்யும் பக்குவம் எல்லாம் இந்த ராணுவ வீரர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்பதால், அனுப்பப்படும் உதவி பொருட்கள் கிடைக்க வேண்டிய அபலைகளின் கண்ணில் படாமலேயே ஸ்வாஹா ஆகிவிடும் அபாயம் அதிகம். அதனால் இந்த ஆப்ஷனும் அவுட்
3) மெடிசன் சான்ஸ் பார்டர்ஸ் மாதிரியான பண்ணாட்டு பாரபட்ஷம் பாரா மருத்துவ தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். இலங்கையில் வந்து பணியாற்ற இவர்கள் ஆர்வமாக இருந்தாலும், இது போன்ற மனிதர்களின் தொண்டை ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் ராஜபக்சே அரசுக்கு இப்போதைக்கு இல்லை.
ஆக கூட்டி கழித்து பார்த்தால், இலங்கை தமிழருக்காக இப்போதைக்கு நாம் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனை மட்டும் தான்.....
பிரார்த்தனை என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் இலங்கையில் மதம் சாகவில்லை. பௌதர்களும், கிறுத்திவர்களும் அங்கே மததொண்டாற்றிக்கொண்டு தானே இருக்கிறார்கள் இன்னும். யாருக்காவது அங்குள்ள மத அமைப்புகளோடு ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்களேன். மனிதர்களுக்கு தானே தடைகள், மதங்களுக்கு தான் எப்போதும் தடையே இல்லையே.....இந்த ஒரு வழியாவது ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்போம். வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தால், திட்டாமல் சொல்லித்தாருங்கள், தட்டாமல் செய்து முடிக்கலாம்.....