Showing posts with label மதநல்லிணக்கம். Show all posts
Showing posts with label மதநல்லிணக்கம். Show all posts

Saturday, April 18, 2009

ஷிண்டோ!




இந்தோநேஷியாவில் இஸ்லாம் தான் மிக பிரபலமான மதம். இந்த இஸ்லாமிய பெண்களுக்கு மிக பிரபலமான பெயர் என்ன தெரியுமா? ஷிண்டோ, அல்லது ஷிந்தா.
”பெயர் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டால் அவர்கள் சொன்னது “இந்த பெயர் உங்கள் ஊர் பெயர் தான். ராமாயணத்தில் வரும் கதாநாயகி இருக்கிறாளே....” என்றார்கள்.
”ராமாயண கதாநாயகியா, சீதா!” என்றேன்.
“அதே தான், எங்கள் ஊரில் சீதாவை ஷிண்டோ என்று தான் சொல்வார்கள், சில ஏரியாக்களில் ஷிந்தா என்றும் சொல்வார்கள்” என்றார்கள்
”ஆனால், நீங்கள் இஸ்லாமியராயிற்றே, சீதாவின் பெயரை வைத்திருக்கிறீர்களே?” என்றால், விசித்திரமாக பார்க்கிறார்கள், “ஏன் அதனால் என்ன, வைக்கக்கூடாதா?” என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.
இந்தோசேஷியாவில் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களுமே மிக பிரசித்தம். எல்லோருக்குமே இவை தெரிந்திருக்கின்றன. எல்லோருமே இஸ்லாமியர்களாக இருதாலும், இந்த கதைகளை, “எங்க ஊர் பாரம்பரியமாக்கும்” என்று மத வேறு பாடுகள் கருதாமல் ஆசையாக கேட்கிறார்கள், நிறைய சமஸ்கிருத சொற்களை சரளமாக உபயோகிக்கிறார்கள்
உதாரணத்திற்கு, அந்த ஊர் பாஷையில், மனைவியை ஸ்திரி என்றும் கணவனை ஸ்வாமி என்றும் குறிப்பிடுகிறார்கள்.