Friday, February 20, 2009

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி, 11

அத்தியாயம் 11
மேன் வாட்சிங் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? உங்களுக்கு தெரிந்த ஆண்களை எல்லாம், பாடபொருளாக்கி, கவனமாய் பார்த்து, புரிந்துக்கொள்ள பழகி வருகிறீர்களா? அப்படியானால் ஆண்களின் அடுத்த இயல்பை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே.

“அடி செருப்பால, ராஸ்கல், அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ.

அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா?

ஆணின் இந்த இயல்பிற்கு அவன் காரணம் இல்லை. இயற்க்கை அவனை அப்படி இயங்கும் படியாகத்தான் வடிவமைத்திருக்கிறது. இந்த இயற்க்கைக்கு வேறு வேலை இல்லையா? போயும் போயும் இப்படியா ஆண்களை வடிவமைக்கணும்? என்று அதற்குள் அலுத்துக்கொள்ளாதீர்கள் ஸ்நேகிதி. இயற்க்கையின் இந்த ஏற்பாட்டில் நிறைய லாஜிக் இருக்கிறது.

மனித இனம் உருவான ஒன்றரை மில்லையன் வருஷத்திற்கு முன்னால் பூமியில் வேறு சில மனித குரங்குகளும் வாழ்ந்துக்கொண்டிருந்தன. இந்த எல்லா மனித குரங்குகளும் கிட்ட தட்ட ஒரே இனம் என்பதால் எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். உதாரணத்திற்கு பொனொபோக்களும், சிம்பான்ஸீக்களூம் வெவ்வேறு விதமான மனித குரங்குகள். பழக்கப்படாதவர் பார்வையில் இரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு என்றே தோன்றிவிடும். ஆனால் உத்து பார்த்தால் வித்தியாசங்கள் தென் படும்.

இது போல தான் அந்த கால மனிதவர்க்கம். சேப்பியன் மனிதர்கள், நியாண்டிரதல் மனிதர்கள், ஃப்லொரிசியன் மனிதர்கள் என்று மூன்று வகையான, (யாருக்கு தெரியும் அதற்கு மேலும் இருக்கலாம்) மனித ஜாதிகள் ஒரே சமயத்தில் பூமியில் வாழ்ந்து வந்தன. இந்த மூன்றூம் ஒன்றுவிட்ட உறவுக்கார உயிரினங்கள் தான் என்றாலும், இவற்றில் கலப்பு நேர்ந்தால் மகசூல் இருக்காது. உதாரணத்திற்கு பூனையும், புலியும் ஒரே ரகமான ஒன்றுவிட்ட உறவுக்கார மிருகங்கள் தான். ஆனால், பூனையும் புலியும் சேர்ந்தால் மகசூல் ஏற்படாதே. அதனால் இயற்க்கை பூனைக்கு தனியாக இன குறீகளையும், புலிக்கு தனியாய் வேறு வித இன குறீகளையும் ஏற்படுத்தி இருக்கு. அந்தந்த மிருகம் அதன் அதன் இன குறியை சரிபாத்து புணரும் படியாக தான் இயற்கை அவற்றின் நரம்புமண்டலத்தை வடிவமைத்து வைத்திருக்கிறது.

இதற்கும் ஆண்கள் பெண்களை இப்படி கண்ட கண்ட இடத்தில் உத்து பார்ப்பதற்கும் என்னங்க சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கே. நிறைய சம்மந்தம்! பல வகை வானர ஜாதிகள் ஒன்றாக வாழும் போது, அதில் யார் நிஜ மனித பெண் என்பது எப்படி மனித ஆணுக்கு தெரியும்? அவளுக்கு என்று பிரத்தியேகமாய், மனித இன குறிகள் ஏதாவது இருந்தால் தானே, சரி, இது நம்ம ஜாதி என்று இவன் அடையாளம் கண்டு கொள்வான். அப்படி குறி பார்த்து சரியான துணையை தேடி பிடித்து, புணர்ந்தால் தானே மனித இனம் பெருகும். இவன் பாட்டுக்கு குறி தவறி வேற்றின பெண்குரங்குடன் உறவு கொண்டு விட்டால், மனித இனம் பரவாதே.
அதனால் தான் இயற்க்கை, மனித பெண்ணுக்கு என்று பிரத்தியேகமாய் சில இன குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதில் முக்கியமான ஒரு இன குறி தான் மனித பெண்ணின் மார்பகம். மற்ற எந்த வானரத்திற்கு இது போன்ற ஒரு கொழுத்த பாலூட்டும் கருவி இல்லை. மனிதர்களில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது.

அது சரி, மனிதர்களில் மட்டும் ஏன் இப்படி ஓர் ஏற்பாடு? ஏன் என்றால் மனித பெண் தான் மற்ற மிருகங்களை மாதிரி இல்லாமல், எப்போதுமே இரண்டு கால்களில் நடக்கிறாள். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? விஷயம் இது தான். மற்ற மிருகங்களில் பருவகாலம் வந்ததும் பெண் மிருகத்தின் உடம்பில் சில ஹார்மோன்கள் ஊரும். இந்த ஹார்மோனின் நெடி, காற்றில் பறந்து சுற்றியுள்ள பதினெட்டு பட்டிக்கும் பரவி விடும். இந்த ஹார்மோனால் ஈர்க்கப்பட்டு, வேறேதோ பிரதேசத்தில், மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆண் மிருகம் மோப்பம் பிடித்துக்கொண்டு, பெண்கள் இருக்கும் இடத்தை வந்து சேரும்.

இப்படி ஆண் வந்து ஆஜராகி, பார்த்தால், அங்கே பல பெண்கள் கூட்டமாய் இருக்குமே. இத்தனை பெண்களின் யார் தனக்கு ஹார்மோன் சிக்னல் அனுப்பினாள் என்று எப்படி தெரிந்துக்கொள்வது? இதற்காக ஆண் மிருகம் பெண்களின் பின்னால் போய், யாருடைய பின் புறம் சிவந்து உப்பி போயிருக்கிறது என்பதை கவனிக்கும். காரணம், சூல் கொள்ளும் தன்மையுள்ள பெண்ணின் ஜனன உருப்பு, சிவந்து உப்பிபோகும். இப்படி ஒருத்தி வீங்கி இருந்தால், அவளிடம் தன் விந்தணுக்களை முதலீடு செய்தால், அடுத்த சில மாதங்களின் அடுத்த தலைமுறை ரெடி! இப்படி இதை கண்டால் இப்படி ரியாக்ட் செய் என்று இயற்கையில் இயங்கும் இது மாதிரியான உத்தரவுகளை தான் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசம் என்கிறோம். (Innate Releasing Mechanism) எல்லா மிருகங்களிலும் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்கள் உண்டு. இந்த IRM தூண்டப்படாவிட்டால், அந்த மிருகத்தால் சரியாக ரியாக்ட் செய்யமுடியாது.

நான்கு கால்களின் நடமாடும் மிருகம் என்றால் இப்படி பின்னால் போய், யாருடைய ஜனன பகுதி உப்பி சிவந்திருக்கிறது என்று இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்களை நோட்டம் விடலாம். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களின் செங்குத்தாக தானே நிற்கிறாள். அதனால் அவள் ஜனன பகுதி கண்மறைவாகி விடுமே. இதில் யார் கருவுற தயாராக இருக்கிறாள் என்பதை எப்படி ஆண் மிருகம் கண்டுபிடிப்பானாம்?

இன்றைகாவது ஜன தொகை பெருகி விட்டது, அதனால் யாரும் அடுத்த தலைமுறையை பெற்றுக்கொள்வது பற்றி பெரிதும் கவலை படுவதில்லை. ஆனால் மனிதவர்கம் உருவான அந்த மில்லயன் வருடத்திற்கு முன், நிலைமையே வேறு. அப்போது பூமியில் மனிதர்கள் மிக சொர்ப்ப எண்ணிக்கையில் தான் இருந்தார்கள். அதனால், மகசூலை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.

ஆனால் உயிர் உருவாகி, பாலின பிறிவினைகள் ஏற்பட்ட ஆதிகாலத்திலிருந்தே, ஜனன பாகம் உப்பி சிவந்திருக்கும் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்தை வெளிபடுத்தும் பெண்களோடு புணரும் படி தான் ஆண் மிருகங்கள் எல்லாவற்றின் நரம்பு மண்டலம் அமைக்கபட்டிருந்தது. இந்த IRM இல்லாத பெண்ணோடு புணர ஆண்களுக்கு உந்துதல் ஏற்பட்டதே இல்லை.
ஆக, உப்பும் பாகத்தை பார்த்தலே ஒழிய ஆணுக்கு கிளர்ச்சி ஏற்படாது, என்பதால் தான் இயற்க்கை மனித வர்க்க பெண்களுக்கு மட்டும் இந்த IRMமை கண்ணில் தெரியும் படி, இடமாற்றம் செய்தது. மற்ற மிருகங்களுக்கு இடுப்பெலும்போடு இனைந்திருக்கும் இந்த சமிக்ஞையை மனிதர்களில் மட்டும் மார்பெலும்போடு இனைத்துள்ளது.

இந்த இடமாற்றத்தினால், மனித பெண் முன் பக்கம் சமிக்ஞை பாகம் கொண்ட ஒரே வானர இனமாகி போனாள். அதனால் முன் பக்க வீக்கம் = மனித பெண். இந்த அமைப்பு இல்லாத பெண்= வேற்றின பெண் என்கிற முடிவிற்கு வந்தான் மனித ஆண். இந்த இனகுறீயை வைத்து அவன் தன் இன பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து உறவுக்கொண்டதால் தான் இன்று நாமெல்லாம் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு முக்கியமான மனித இன அடையாள குறியாக இருப்பதினால் மனித ஆணின் மூளையில் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்திற்கான ஈர்ப்பு மிக அழுத்தமாய் ஏற்கனவே முன் பதிவு செய்ய பட்டுள்ளது. அதனால் தான் சின்ன குழந்தையில் ஆரம்பித்து தொண்டு கிழங்கள் வரை வெறும் இந்த பாகத்தின் மேல் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்.

நாகரீகத்தின் துவகத்தில் பெண்கள் இந்த பாகத்தை மறைக்காமல் வெளிப்படையாகவே விட்டுவைத்தார்கள். ஆனால் மனித கலாச்சாரம் பெருகி, நான் எனது என்ற எண்ணங்கள் எழுந்த பிறகு, என் மனைவியின் மனித இன அடையாள குறியை வேறு எவனும் பார்க்கக்கூடாது என்ற கருத்தும் தலைதூக்கியது. அதனால் பெண்கள் மாராப்பு அணிந்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறினார்கள்.

என்ன தான் மாராப்பை அணிந்து கொண்டாலும், மனித பெண்ணின் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிச பாகத்தை கண்டு குஷிபடும் ஆணின் தன்மை இன்னும் மாறவில்லை. அதனால் தான் மனித ஆண் இன்னமும் பெண் என்றதும் உடனே அவள் இன குறி பாகத்தை கவனித்துவிடுகிறான். இந்த பாகத்தின் செழுமையை வைத்து அந்த பெண்ணின் வயது, பருவ நிலை, மகபேற்று வளம் ஆகியவற்றையும் யூகிக்க முயல்கிறான்.

இதெல்லாம் அந்த கால பெண்களுக்கு பெரிய விஷயமாய் இருந்ததோ இல்லையோ. காரணம் சமீபத்திய இருநூறு ஆண்டுகள் வரை தமிழ் பெண்கள் மாராப்பு அணிந்தது இல்லை, ஆனால் நாகரீகம் அடைந்து சுய மரியாதை பெற்ற பெண்களுக்கு எவனாவது தன் முகத்தை பார்க்காமல் கண்ட இடத்தை பார்த்து பேசினால் கோபம் வருகிறது. காரணம் முந்தய காலத்தில் சாமானிய பெண்ணுக்கு தன் உடலின் மீது கூட உரிமை இருக்கவில்லை. அதனால் எவன் வேண்டுமானாலும் மானாவாரியாக தன்னை உற்று பார்ப்பதை அவளால் ஆட்சேபிக்க முடிந்திருக்காது.

ஆனால் இன்றைய பெண்ணுக்கு சுய மரியாதை உண்டே. அவள் தன்னை ஆணூக்கு சரி சமம் என்று நினைப்பதால், தன் உடலின் மீது தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாய் அவள் நினைக்கிறாள். தன்னை எவன், எப்படி, எப்போது, எங்கே, எதற்க்காக பார்க்கலாம் என்பதை எல்லாம் அவளே முடிவு செய்கிறாள். அதனால் தான் அவள் அனுமதி இன்றி யாரும் அவள் உடம்பை உற்றூ பாத்தாலும் அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது.

இந்த நாகரீக வளர்ச்சி புரிந்த மார்டன் ஆண்கள், இதனாலேயே தங்கள் இயற்க்கை உந்துதல்களை அடக்கிக்கொள்ள பழகி வைத்திருக்கிறார்கள். சாப்பாடு, தூக்கம், கழிவகற்றல் மாதிரியான இயற்கை உந்துதல்களை பிறருக்கு சங்கோஜம் ஏற்படாத படி, இடம் பொருள் ஏவல் பார்த்து எந்த அளவிற்கு நாசூக்காக செய்கிறார்களோ, அதே போலவே இந்த மனித பெண்ணின குறியையும் அணுகுகிறார்கள்.

இந்த அளவிற்கு நாகரீகம் அடையாத ஆண்களோ, இன்னும் காட்டு மிராண்டிகளை போல, சந்தர்ப்பம் சூழ்நிலை என்று எதையும் கருதாமல், யாருடையது, அதை பார்க்க நமக்கு உரிமை இருக்கிறதா என்ற இங்கீதம் எல்லாம் ஏதும் இல்லாமல், பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்ப்பதை போல, இதையே பெரிய அதிசயமாய் உற்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களை ஹாண்டில் செய்ய கற்றுக்கொள்ள உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கான இந்த வார ஓம் ஒர்க்…உங்களை சுற்றி உள்ள ஆண்களை வாட்ச் செய்யுங்கள். அவர்களில் எத்தனை பேர் நாகரீகம் அடைந்திருக்கிறார்கள், எத்தனை பேர் இன்னும் காட்டுமிராண்டியாக இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். நாகரீகம் அடைந்துவிட்ட ஆணாய் இருந்தால் அவனுக்கு ஒரு சபாஷ் போட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் அதற்காக நாகரிகம் இல்லாத ஆண்களை கண்டு வருத்தமோ, கோபமோ, பட்டுவிடாதீர்கள். அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று ஒரம் கட்டிக்கொள்ளுங்கள். அவனுக்கு நாகரீகம் இல்லாததற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்?

ஆண்களை ஹாண்டில் செய்யும் இன்னும் நிறைய ரகசியங்கள் அடுத்த ஸ்நேகிதியில்!

10 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

thanx doctor....

plz come snd see my blog site..

www.thottarayaswamy.net

post some reviews/..

வடுவூர் குமார் said...

நல்ல பதிவு.
இதைப் பற்றி கூட நான் சில முறை யோசித்துப்பார்ததுண்டு.இயற்கை என்பதால் வந்தது எப்படியோ போகப்போவது அப்படியே என்பதால் சும்மா இருந்துவிட்டேன்.

சாணக்கியன் said...

என்ன மேடம் அறிவியல் பூர்வமாக விளக்கிவிட்டு கடைசியில் ‘காட்டுமிரண்டி’, ‘நாகரீக வளர்ச்சி அற்றவர்கள்’ என்று அறிவியல் கண்ணாடியை கழட்டிவிட்டு சொல்லிவிட்டீர்களே?

/* இந்த பாகத்தின் செழுமையை வைத்து அந்த பெண்ணின் வயது, பருவ நிலை, மகபேற்று வளம் ஆகியவற்றையும் யூகிக்க முயல்கிறான் */

நாகரீகம் அடைந்துவிட்ட ஆணுக்கும் இந்த கவனிப்பு+யூகங்கள் அவசியம்தானே?

தெருவில் சிறு நீர் கழிக்காமல் கழிப்பிடத்தில் கழிப்பதை நாகரீகத்திற்கு உவமையாகக்(analogy) கொண்டால் இந்த விசயத்தில் உவமை எது? பார்க்கப்படும் பெண்ணிற்கு சங்கடங்கள் உருவாக்காமல் கூச்சபடவைக்காமல் பார்ப்பதா? அல்லது சுத்தமாக பார்க்காமலேயே இருப்பதுதான் நாகரீகம் என்கிறீர்களா?

சாணக்கியன் said...

ஜெயமோகனின் மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6(http://jeyamohan.in/?p=1702) என்ற பதிவை படித்தீர்களா? அதில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

/* பாலுணர்வு மீது குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் இருந்த காலகட்டம் ஒன்று நமக்கிருந்தது.அது வாழ்க்கையின் இன்றியமையாத அடிப்படையாகக் கருதப்பட்டது. அத்துடன் தொன்மையான வேளாண்சமூகமான நம்மிடம் பாலுறவுக்கு மேலும் ஆழமான அர்த்தங்கள் இருந்தன. பாலுறவு என்பது பிறப்புக்கு ஆதாரமான சக்திகளின் முயக்கத்தின் தருணம் என்ற புரிதல் நம் மதத்தையும் சடங்குகளையும் ஆள்வதைக் கவனிக்கலாம். இயற்கையில் ஒவ்வொரு கணமும் பிறப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு கணமும் பாலுறவும் நடந்துகொண்டிருக்கிறது.

இடைவிடாத பிறப்பின் மூலமே இயற்கை பிரபஞ்சப்பெரும் சக்தியான மரணத்தை எதிர்கொள்கிறது. ஆகவே பாலுறவு என்பது நோய், முதுமை, அழிவு அனைத்துக்கும் எதிரான ஒரு செயல்பாடு. ஆகவே பாலுறவை பண்டைய மனம் கொண்டாடியது. வளம் என்பதும் வாழ்வு என்பதும் பாலுறவுடன் தொடர்புடையனவாகவே கருதப்பட்டன. இயற்கையின் வளம் மிக்க தோற்றத்தை காமத்தோற்றம் [ரதி·பாவம்] என்றே மகாபாரதம் சொல்கிறது. பூக்கள் , வசந்தம், வண்ணங்கள், நறுமணங்கள், இளமை, அழகு , கொண்டாட்டம் எல்லாமே பாலுறவுடன் இணைத்தே பார்க்கப்பட்டன.

தொன்மையான வேளாண்சமூகங்களில் ‘விருஷ்டி’ சடங்குகள் என்று சிலவகை ஆசாரங்கள் இருந்தன. அறுவடைக்குப்பின் அந்த நிலத்தில் பாலுறவுக் களியாட்டங்களை நிகழ்த்துவதுதான் அது. கூட்டான பாலியல்க் கொண்டாட்டங்கள் கூட நிகழ்ந்திருந்தன. அதன் சாயல்களை நாம் சங்ககாலத்து புதுப்புனலாட்டம், இந்திரவிழா கொண்டாட்டம் போன்றவற்றில் காணலாம்
*/

இது பற்றி தங்கள் கருத்தென்ன?

யசோதா.பத்மநாதன் said...

மூன்றாவது மனிதனாய் நின்று ஒரு விடயத்தைப் பார்ப்பவர்கள் வெகு சிலரே.நீங்கள் அவர்களில் ஒருவர்.

பதிவு நிறைய விடயங்களைக் கற்றுத் தருகிறது.எளிமையாக!

நன்றி.

Vijay said...

நன்றி டாக்டர்,

ஒரு சந்தேகம். மற்ற விலங்குகளுக்கு பால் உணர்வு சூல் கொள்ளும் காலத்திலே மட்டும் வருகையில், மனிதனுக்கு மட்டும் ஏன், அது எப்போதும் இருக்கிறது.

hayyram said...

பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கும் ஆண்கள் காட்டுமிராண்டிகள் என்றால் 'எனக்கு எவ்வளவு பெரிதாய் இருக்கிறது பார்த்தாயா?' என்று கேட்பது போல மார்பகங்களைத் தூக்கிக் காட்டும் டீஷர்ட்டு, டைட் சுடிதார் பெண்களும் காட்டுமிராண்டிகள் தானே?

Rahul said...

Hi, I don't agree with you. sorry.

Anonymous said...

There is no scienitific backing for comments given here