Saturday, April 18, 2009

மிஸ் பிளாங்க் ப்பீடி


இந்த படத்தில் தெரியும் அந்த பழுப்பு நிற சட்டை போட்ட பெண்ணின் பெயர் எனக்கு மறந்து விட்டது. ஆனால் அவர் செய்த காரியத்தை என்னால் மறக்கவே முடியாது.
இந்த பெண் இந்தோநேஷியாவில் மேற்கு கடைகரை பகுதியில் உள்ள, பிளாங் பீடி என்ற ஊரில் வாழும் ஒரு மீனவ குடும்பத்தலைவி.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இவரது ஊரே ஒட்டு மொத்தமாய் கடலுக்குள் போய்விட்டது.
தப்பிப்பிழைத்த சிலரில் இந்த பெண்ணும் ஒருவர். இவர் வாழ்ந்த ஆச்சே தொகுதியில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால், மத்திய அரசாங்கத்தால் உடனே உதவி/நிவாரணம் வழங்க முடியாத நிலை. உதவிக்கு யாருமே வராத போதும், இந்த பெண், தனியாக நின்று தன் ஊர் மக்களை காப்பாற்றினாராம். அதன் பிறகும், தன் சொந்த செலவில் ஜகார்தாவிற்கு போய், அரசாங்க அதிகாரிகளிடம் பேசி, தன் ஊர் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்லி, உதவிகளை பெற்று வந்திருக்கிறார்.
இவர் எடுத்துக்கொண்ட சிரமங்களை பார்த்து தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர, இப்போது, “பாலி பீச்” என்கிற புதிய சிற்றூரே அங்கு நிருவப்பட்டுள்ளது.
பாலிபீச்சின் அழகான மரவீடுகளை தான் இந்த படத்தில் பார்க்கிறீர்கள்!

இப்போது இந்த பெண்மணி, பலகாரம் செய்து விற்கும் சிறு தொழில் செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து அந்த கிராமத்தின் பெண்களும் வேலை செய்வதால் எல்லோருக்கும் வருமாணம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

1 comment:

வேடிக்கை மனிதன் said...

மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு திரியும் நம் ஊர் அரசியல் (வி)வாதிகள் படிக்க வேண்டிய நல்லதொரு பதிவு

பகிர்வுக்கு நன்றி டாக்டர்