Sunday, December 26, 2010

எலும்பில்லா ஆண்

என்ன தான் ஆண்கள் குறி நீளத்தை வைத்து தங்கள் மதிப்பை அளவிட ஆரம்பித்து, இதை வைத்து தமக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி இட்டுக்கொண்டாலும், பெண்கள் மிக தெளிவாகவே இருந்தார்கள். வெறும் நீளத்தை வைத்து சுகத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பது தான் பெண்களுக்கு தெரியுமே! அதுமட்டுமல்ல, ஆடை இல்லாத காலத்தில் அமலில் இருந்த ஒரு தேர்வு வரையறையை ஆடைகள் அணியும் காலத்தில் எப்படி பின் பற்றுவது? ஆடை இருக்கும் சவுகரியத்தில் போலியான விளம்பரயுத்திகளில் பெரும்பாலான ஆண்கள் ஈடுபட ஆரம்பித்துவிட்ட பிறகு, இன்னமும் அதே தேர்வு கோட்பாட்டை வைத்து ஆண்களை தரம் பிரிப்பது முட்டாள்தனகாகாதோ?


அதனால் ஆண்கள் பாட்டிற்கு ஒரு பக்கம் ஆண்குறி அளவு குறித்த போட்டிகளில் தங்கள் நேரத்தை வீணடித்து ஏமாற்று, தந்திரத்தில் எல்லாம் ஈடுபட ஆரம்பிக்க, பெண்கள் சத்தமே இல்லாமல் தங்கள் தேர்வு வரையறையை மாற்றினார்கள்: நீளம் அகலம் எல்லாம் இருக்கட்டும், ”நீடித்த சுகத்தை தரமுடியுமா?” என்று வெளிதோற்றத்தை விட்டு விட்டு, செயல்பாட்டு திறனுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள் பெண்கள்.

அதனால் என்ன தான் பிரமாதமான அண்குறி சின்னத்தை அணிந்தவனாக இருந்தாலும், அவன் செயல்பாட்டில் சொப்லாங்கியாக இருந்தால், அவனை மரபணு சங்கலி ஆட்டத்திலிருந்து கழட்டிவிட்டார்கள் பெண்கள். ஆண்களினால் சுயமாய் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்ள முடியாதே, எப்படியும் பெண்ணுடல் தேவை படுமே. அந்த உடம்பை தர பெண் என்ன நிபந்தனை விதித்தாலும், அந்த நிபந்தனைக்கு ஏற்றாற்ப்போல தன்னை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். அல்லது மாற்றிக்கொண்டு விட்டதாக ஒரு பாவ்லாவாவது செய்தாக வேண்டும். இல்லை என்றால் மரபணு போட்டியில் அவனால் பங்கேற்கவே முடியாதே. இது தான் ஆணின் நிலை என்பதால், பெண்களின் இந்த கறாரான ”நீடித்த சுகம்” என்கிற தேர்வு விதியை அனுசரித்து ஆணின் மரபணுக்கள் மீண்டும் மாற ஆரம்பிக்க, இதனால் அவன் உடம்பில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது.

பொதுவாய் ஆண் விலங்குகள் அனைத்திற்கும், ஆண்குறியினுள் பாக்குலம் (Bacculum) என்கிற ஒரு எலும்பு இருப்பதுண்டு. இந்த எலும்பு தான் விரைப்பு தன்மையை நீட்டிக்க உதவுகிறது. சிம்பான்சீ மாதிரியான நம் நெருங்கிய உறவுக்கார வானரங்களுக்கும் இந்த பாக்குலம் இருக்கிறது. ஆனால் மனித ஆண்களுக்கு மட்டும் இந்த பாக்குலம் என்கிற எலும்பு இருப்பதில்லை. ஏன் தெரியுமா? எலும்பின் உபயத்தால் விரைப்பு ஏற்படுவதை விட, எலும்பே இல்லாத போதும் நீட்டித்த விரைப்புடன் இருப்பது தான் நிஜ வீரியத்தின் வெளிபாடு….அதனால் மனித பெண்கள் எல்லோரும் எலும்பில்லாத ஆண்களுடன் கூடி அவர்களின் தரத்தை வித்தியாசபடுத்த ஆரம்பிக்க, காலப்போக்கில் மனித ஆண் தன் பாக்குலத்தை இழந்தான், அது இல்லாமலேயே விரைப்புறும் தன்மையை பெற்றான்.

பாக்குலம் இருப்பதில் ஆண் விலங்குகளுக்கு ஒரு மிக பெரிய சவுகரியம் இருந்தது. உதாரணத்திற்கு நாயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண் நாய் பெண்ணுடன் புணர்ந்த பிறகும், கிட்ட தட்ட அரை மணி நேரத்திற்கு அப்பெண்ணை விடாமல் பற்றிக்கொண்டே இருக்கும். காரணம் இந்த பாக்குலம் பெண் பாகத்தில் பூட்டிக்கிடப்பதால், அந்த ஆண் நினைத்தாலும் விடுபட முடியாது. வேறு வழி இல்லாமல் பெண்ணும் கிட்ட தட்ட அரைமணி நேரத்திற்கு அவனோடு ஒட்டிக்கொண்டே தான் இருந்தாக வேண்டும். இது தெரியாமல் பல பேர் புணர்ந்த நிலையில் இருக்கும் ஆண்களை கல்லால் அடித்து பிரிக்க பார்பப்துண்டு! ஆனால் இந்த ஆண் நாய் இப்படி அரைமணி நேரத்திற்கு பற்றிக்கொண்டே இருப்பதில் ஒரு முக்கியமான மரபணுவியல் காரணம் உண்டு. பெண் நாய்க்கு ஒரே சமயத்தில் ஏழெட்டு கருமுட்டைகள் உற்பத்தி ஆகும். ஒரு ஆணுடன் சேர்ந்த பிறகு உடனே அது இன்னொரு ஆணுடன் புணர்ந்து விட்டால், அந்த இரண்டாவது ஆணின் விந்தணுக்கள் சில கருமுட்டைகளோடு கலந்துவிட முடியும். இன்னொருத்தனின் மரபணுக்கள் பரவிவிட்டால், தன் சந்ததியினருக்கு போட்டி ஆகிவிடுமே என்று தான், கிட்ட தட்ட அரைமணி நேரம் பெண்ணை பிடித்துக்கொண்டே இருக்கிறது ஆண். இந்த அவகாசத்திற்குள் எல்லா கருமுட்டைகளையும் தன் விந்தணுக்களே அபகரித்துவிடும் என்பது தான் ஆணின் கணக்கு.

மற்ற விலங்குகளுக்கு இவ்வளவு அனுகூலமாய் இருக்கும் ஒரு முக்கியமான எலும்பு இந்த பாக்குலம். ஆனால் மனித பெண் மிக குறிப்பாய் பாக்குலமே இல்லாத ஆண்களாய் பார்த்து பல தலைமுறைகளாக தேர்ந்தெடுத்ததில், கடைசியில் மனித ஆண் பாக்குலம் இல்லாதவனாகி போய்விட்டான். இதில் பெண்களுக்கு ஒரு மிக பெரிய அனுகூலம் இருந்தது. வெறும் எலும்பின் உபயத்தால் விரைப்புறும் ஆணின் நிஜ வீரியத்தை நிர்ணயிப்பது சிரமம். ஆனால் எலும்பே இல்லாமல் வெறும் தன் உதிரத்தை மட்டும், புவி ஈர்ப்பு சக்தியை எதிர்த்து உயர்த்தி நிறுத்தி, இந்த சாதனையை தொடர்ந்து சில நிமிடங்கள் செய்து, பெண்ணை குஷி படுத்துகிறான் என்றால் அது அல்லவா நிஜ வல்லமை. உடல் நோய்களோ, மனநோய்களோ இருப்பவனால் இந்த சாதனையை செய்ய முடியாதே. வேறு எந்த தந்திரத்தாலும் இந்த சாதனையை செய்து காட்ட முடியாதே.

ஆக ஆணின் நிஜ உடல்/உள்ள ஆரோகியத்தையும் அவை வெளிபடுத்தும் மரபணு வீரியத்தையும் தரபரிசோதனை செய்ய இதுவே ஒரு மிக சிறந்த வழியாகிவிட, இதில் பெண்களை ஏமாற்றுவது என்பது முடியாத காரியமானது. பெண்கள் இப்படி கறாராக மரபணுக்களை தேர்ந்தெடுப்பது தான் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே நல்லது என்பதால் தான் இன்று வரை உலகெங்கும் இருக்கும் எல்லா மதங்களும், மதம் சாராத சட்டங்களுமே கூட, விரைப்புறும் தன்மை இல்லாத ஆண்களை நிஜ அண் என்று கருதுவதில்லை. அதனால் இப்படி பட்ட ஆணோடு திருமணம் நடந்தாலும், அத்திருமணத்தை ஒரு நிஜ திருமணமாய் இவை அங்கீகரிப்பதில்லை.

இதை விட ஆண்களுக்கு பெரிய சவாலாக அமைந்தது என்ன தெரியுமா? ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் கலவியல் செயல்பாட்டில் இருக்கும் வேறுபாடுகள்.

மனித ஆணால் ஒரு கலவி அனுபவத்தில் ஒரே ஒரு தரம் தான் உச்ச சுகத்தை அடைய முடியும். ஆனால் மனித பெண்ணோ, ஒரே கலவி சேர்க்கையின் போது பல முறை உச்ச சுகத்தை உணரவல்லவள். அது மட்டும் அல்ல, கலவி கொண்ட பிறகு ஆண் அயர்ந்து விடுவது தான் அவனுக்கு இயல்பு, ஆனால் பெண் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருப்பாள். இவன் தூங்கிவிட்ட பிறகு இவள் பாட்டிற்கு அடுத்த சுகத்தை தேடி போய்விட்டால் என்னாவது? மனித ஆணுக்கு தான் பாக்குலமே இல்லையே, இவன் விந்தணுக்கள் எல்லாம் நீந்தியோடி அவள் கருமுட்டையை சென்று கலக்கும் வரை, அவளை அரைமணி நேரத்திற்கு அப்படியே பிடித்து பூட்டிவைக்க அவனால் முடியாதே!

ஆக பாக்குலம் இல்லாமல் போனது, பெண்ணுக்கு சாதகமான சூழலையும், ஆணுக்கு அவஸ்த்தையையும் ஏற்படுத்திவிட, ஆணின் மரபணுக்கள் சும்மா இருக்குமா என்ன? பாக்குலம் இல்லாமலேயே பெண்ணை தன் வசப்படுத்த புது புது யுத்திகளை உருவாக்கின ஆணின மரபணுக்கள். அதனால் மூன்றாவது முறையை மீண்டும் ஒரு முறை ஆணின் உடல் அமைப்பு மாற ஆரம்பித்தது.

அடுத்த இதழில் அது பற்றி.

8 comments:

நவன் said...

பாக்குலம் ஆண்களுக்கு இருந்ததற்கான ஆதாரம் உள்ளதா?

Unknown said...

mm ok

அமர்ஹிதூர் said...

பெண்கள் மிகசிறந்தவர்களே. ஆனால் நீரா ராடிய அம்மா, தமிழ்நாட்டு அம்மா, கனி அம்மா இவர்கள் இந்தியாவை வாழ வைப்பார்களா ? ஏழ்மையை ஒழித்துகட்டுவார்களா ?

இது சம்பந்தம் இல்லாத கமெண்ட் தான். ஆனால் பணம், அதிகாரம் இவற்றை கட்டிக்காப்பதில் பெண்களும் ஆண்கள் போலதானே இருக்கிறார்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வெறும் நீளத்தை வைத்து சுகத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பது தான் பெண்களுக்கு தெரியுமே!
--

ஆண்களுக்கும் புரிந்துவிட்டால் சந்தையில் விற்கும் ஏகப்பட்ட பொருட்களுக்கு வேலையே இல்லை.

உண்மையை மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்.

நன்றி!.

jayakumar said...

everybody is talking about the length of the penis only..its nothing ok..but...what about the width?..is there any importance for that? and,plz authenticate or refer something for about the bacculum sorry for the spelling mistake...jayakumar

Anonymous said...

I think Dr.Shalini is not correct on her view about the extravagant production of sperms in male.Reason for 40 crores sperms is the reminescence of our evolution from acquarians.

Sridhar

Anonymous said...

Shalini,

One small doubt'Did your mom drop you on your head on a concrete road, when you were say 2 or 3 years old?

Bala said...

அன்பின் டாக்டர் ஷாலினி, மன அழுத்தம் காரணமாக் உறக்கம் வராத ஒரு பின்னிரவில், உங்கள் தளத்துக்கு வந்தேன். ஆனந்த விகடனில் உங்கள் கட்டுரைகள் படித்திருக்கிறேன். அதுவும் அம்மா கோண்டுகள் பற்றி வந்த கட்டுரைகள் மிகத் தேவை. எனக்குத் தெரிந்த சில அம்மாக் கோண்டுகளை யோசிக்க வைத்த எழுத்து. உற்சாகமான எழுத்து நடை. bubbly. வாழ்க