Sunday, May 17, 2009

இலங்கை தமிழருக்கான மனநல மேம்பாட்டு உதவிகள்

என்ன தான் அறிவியல் கண்ணோட்டம் என்று எல்லாவற்றையும் சமநிலையாக எடுத்துக்கொள்ள முயன்றாலும், தமிழரா, தெலுங்கரா, அல்லது வேற்றுலக ஜீவராசியா என்ற எல்லா பாகுபாட்டையும் தாண்டி, சின்ன சின்ன கைகுழந்தைகளுடன் சரியான உணவோ, உடையோ, உரைவிடமோ இன்றி லோல் படும் இலங்கை தமிழரை பார்க்கும் போது, இவர்கள் இவ்வளவு கஷ்டப்படும் போது, எதுவுமே செய்யாமல் பேடி மாதிரி சும்மாவே இருப்பது பெரிய அசிங்கமாகவே தோன்றுகிறது.

நல்லவேளையாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இனி மேல் இலங்கைக்கு போவதும், அங்குள்ள மனதால்/உடம்பால் புண்பட்டு போன மனிதர்களுக்கு சிகிச்சை தருவதும் சுலபமாகும் என்று நம்புவோம். ஏற்கனவே சேவை மனப்பான்மை கொண்ட சில மருத்துவர்கள், “ஷாலினி, இலங்கையில் ஏதாவது வேலையிருந்தா என்னையும் கூப்பிடுயா, நானும் வர்றேன்” என்று முன் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
வெறும் எனக்கு தெரிந்த ஒரு சின்ன வட்டத்திற்கு மட்டும் இப்படிப்பட்ட சமூக பணிகள் செய்ய வாய்ப்பு தருவது சரிபடாதே. அதனால் இதனால் சகலமானவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். மிக விரைவில் இலங்கை தமிழருக்கான மனநல/உடல் நல சேவைகளை துவக்க முயன்றுக்கொண்டிருக்கிறோம். இந்த முயறச்சியில் எந்த விதத்திலாவது நீங்களும் பங்கு பெற விரும்பினால், தெரியப்படுத்தவும்.

7 comments:

Anonymous said...

எங்களால் முடிந்த உதவியை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறோம்.

Anonymous said...

நல்லவேளையாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இனி மேல் இலங்கைக்கு போவதும், அங்குள்ள மனதால்/உடம்பால் புண்பட்டு போன மனிதர்களுக்கு சிகிச்சை தருவதும் சுலபமாகும் என்று நம்புவோம்.

is it a joke or are you naive?

Raju said...

Sure I will contribute, once I am stable in the job. Sort of uneasy with no salary paid for the last 2 months. I have time till July only.

வேடிக்கை மனிதன் said...

ஈழத்து மக்களின் வேதனையில் பங்குகொள்ள துடிக்கும் தங்களுடைய மனிதாபிமானத்தைக்கண்டு நெக்குருகுகிறேன், உங்களுடைய முயற்சிக்கு ஒரு சக மனிதனாக என் வாழ்த்துக்கள்.

Gopalan Ramasubbu said...

என்னால் முடிந்த உதவிகளை செய்யத்தயாராக இருக்கிறேன்..மேலதிக விவரங்களைத் தெரியப்படுத்தவும்.

நன்றி!

Unknown said...

Dr.

If you can say us what kind of help you needed, We will try our maximum best to do it. Please write us bit more detail.

-Kumar.

ஆகாய நதி said...

நானும் என்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக காத்திருக்கிறேன்...

-சுபா