Wednesday, May 20, 2009

இலங்கை தமிழருக்கான உதவி

இலங்கை தமிழருக்கு மருத்துவரீதியில் உதவுவது இனிமேலாவது சுலபமாக இருக்கும் என்று நம்புவோம் என்று எழுதினேன். யாரோ பெயர் சொல்ல விரும்பாத பிரகஸ்பதி, விளையாடுகிறாயா, மண்டையில மூளை இல்லையா என்பது மாதிரி கமெண்ட் அடித்து, என் சிற்றறிவை தட்டி வேலை செய்ய வைக்க, ஏதோ என்னாலான சின்ன சின்ன துப்புக்கள் சில வற்றை துலக்குனேன்:
1) இலங்கையில் தற்போது எந்த தொண்டு நிறுவனமும் நிவாரண பணிகள் செய்ய வில்லையாம், ரெட் கிராஸை கூட வெளியேற்றி விட்டதாம் ராஜபக்‌ஷே அரசு. ஆக வெறும் இலங்கை ராணுவத்தின் தயவு தாட்ஷண்யத்தை தவிற வேறு எந்த கதியும் தமிழருக்கு இல்லையாம்
2)இந்தியா நிவாரண நிதி, மருந்துமாத்திரைகள் என்று டண் கணக்கில் அனுப்புவதாக அறிக்கை விடுத்தது. ஆனால் எதை எப்படி அனுப்பினாலும் அதெல்லாம் இலங்கை ராணுவம் தான் பெற்று விண்ணியோகம் செய்யுமாம்....பாரபட்சமின்றி பரோபகாரம் செய்யும் பக்குவம் எல்லாம் இந்த ராணுவ வீரர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் என்பதால், அனுப்பப்படும் உதவி பொருட்கள் கிடைக்க வேண்டிய அபலைகளின் கண்ணில் படாமலேயே ஸ்வாஹா ஆகிவிடும் அபாயம் அதிகம். அதனால் இந்த ஆப்ஷனும் அவுட்
3) மெடிசன் சான்ஸ் பார்டர்ஸ் மாதிரியான பண்ணாட்டு பாரபட்ஷம் பாரா மருத்துவ தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். இலங்கையில் வந்து பணியாற்ற இவர்கள் ஆர்வமாக இருந்தாலும், இது போன்ற மனிதர்களின் தொண்டை ஏற்றுக்கொள்ளும் ஆர்வம் ராஜபக்சே அரசுக்கு இப்போதைக்கு இல்லை.

ஆக கூட்டி கழித்து பார்த்தால், இலங்கை தமிழருக்காக இப்போதைக்கு நாம் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனை மட்டும் தான்.....

பிரார்த்தனை என்றதும் தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் இலங்கையில் மதம் சாகவில்லை. பௌதர்களும், கிறுத்திவர்களும் அங்கே மததொண்டாற்றிக்கொண்டு தானே இருக்கிறார்கள் இன்னும். யாருக்காவது அங்குள்ள மத அமைப்புகளோடு ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்களேன். மனிதர்களுக்கு தானே தடைகள், மதங்களுக்கு தான் எப்போதும் தடையே இல்லையே.....இந்த ஒரு வழியாவது ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்போம். வேறு ஏதாவது நல்ல ஐடியா இருந்தால், திட்டாமல் சொல்லித்தாருங்கள், தட்டாமல் செய்து முடிக்கலாம்.....

8 comments:

kayal said...

I don't think this barbaric man would let rehabilitation step in Lanka. Only our govt can do ,but now that elections are over, it is out of their focus.Religious organisations,yes.let's try.

தமிழ் அமுதன் said...

//மனிதர்களுக்கு தானே தடைகள், மதங்களுக்கு தான் எப்போதும் தடையே இல்லையே.../// unmai

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் முந்தைய பதிவைப் பார்த்து இப்படியாவது ஏதாவது செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்தேன்.
இப்போது அதுவும் போச்சா.

யாருக்காவது அங்குள்ள மத அமைப்புகளோடு ஏதாவது லிங்க் இருந்தால் சொல்லுங்களேன். மனிதர்களுக்கு தானே தடைகள், மதங்களுக்கு தான் எப்போதும் தடையே இல்லையே.....இந்த ஒரு வழியாவது ஒர்க் அவுட் ஆகுமா என்று பார்ப்போம் //

இதுக்கும் சேர்த்து ப்ரார்த்தனை இப்போது.........

SK said...

catching buddhism charity seems to be very tough.

Is it possible via christian charity ?? pls. do write about this. I will try my best.

கானா பிரபா said...

வணக்கம் டாக்டர் ஷாலினி

உங்களைப் போன்ற மருத்துவத்துறை வல்லுனர்கள் கூட்டு இந்த அவலத்தை மேற்குலக மனிதாபிமான அமைப்புக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலமும் ஏதாவது மாற்றம் வருகின்றதா என்று பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சின்ன நாட்டின் கொடுங்கோலனுக்கு உலகமே அடிமையாகி விட்டது போல இருக்கிறது.

பூமகள் said...

வணக்கம் டாக்டர். ஷாலினி.

இலங்கையில் தமிழர்கள் மேல் வன்மம் தீரும் வரைக் கொடுமைகள் செய்த பின்பும், உயிருடன் இருப்பவர்களுக்கும் போதிய மருத்துவ, உணவு வசதிகள் வெளிப்புறத்திலிருந்து புறக்கணித்துவரும் சிங்கள அரசின் மேல் அதீத கோபம் எழுகிறது.

ஒருவேளை அனுமதித்தால், உண்மை நிலை உலகுக்கு விளங்கிவிடும் என்ற பெரிய அச்சம் காரணமாக இருக்கக் கூடும்.

தமிழர்கள் அங்கே இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி இருக்க நாம் இங்கே சந்தோசமாக நிம்மதியாக வாழ்வது மனதுக்கு பெரும் துயரை ஏற்படுத்துகிறது.

ஐ.நா தலையிட்டும், நிவாரணப் பணிகளுக்கு தொண்டு நிறுவனங்களை அனுமதிக்காமல் இருப்பதைக் கண்டித்து கடும் நடவடிக்கை உலக நாடுகள் அனைத்தும் இணைந்து எடுக்க வேண்டும்..

உங்களோடு கனத்த மனதுடன் நானும் பிராத்திக்கிறேன்..

ஜோதி கார்த்திக் said...

plz go thru this link
there are some doctors going to srilanka today , i thing there will be some provision there , as a doctor u can approach the govt. or by your doctors link plz get details of how this doctors going there so you can too can ..
My best wishes for you
http://thatstamil.oneindia.in/news/2009/05/22/india-dispatches-medical-aid-doctors-to-sri-lanka.html

திருமூர்த்தி. சி said...

ennattha solli?