Tuesday, June 22, 2010

ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி: 35

ஆண்களை ஹாண்டில் செய்வதெல்லாம் இருக்கட்டும்.  முதலில் ஆண் என்றால் யார், அவன் எப்படி தோன்றுகிறான்? என்பது பற்றி ஒரு குட்டி ஃபிலாஷ்பேக்.  இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சொன்ன சங்கதி தான்:  ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே. 
இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று:  கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது  டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது.  இது தான் முதல் கட்டம்.
அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை.  அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன.  ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது.  இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
ஆனால் அவன் வயதிற்கு வந்த பின், நம் கண்ணுக்கு தெரியாமல் அவன் மூளையில் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.  எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காமம் சார்ந்த சிந்தனை, எந்த விஷயத்திலும் தீவிர கவனம், இதெல்லாம் போக கொசுறாய், அவனுக்கு திடீரென்று Dominance என்கிற ஆதிக்க மனப்பான்மையும் தோன்றிவிடும்.  எங்கு சென்றாலும் தான் முதன்மை இடத்தை பிடித்துவிட வேண்டும், எல்லோரையும் விட முந்திக்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கும். அதனால் வயதிற்கு வந்தவுடன் ஆண் குழந்தைகள் தங்கள் தகப்பனோடோ சண்டை போடுவார்கள், தாயிடம் எதிர்த்து பேசுவார்கள், எல்லோர் எதிரிலும் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை ஷோ காட்டிக்கொள்ள முயல்வார்கள்.
ஏன் இப்படி?  பிகாஸ், இயற்கை வல்லமையே வெல்லும், survival of the fittest என்கிற ஒரு விதியை வைத்திருப்பதால், தான் ரொம்பவே ஃபிட் என்று காட்டிக்கொண்டால் தான் அந்த ஆணை பிறர் கவனிப்பார்கள்.  அப்போது தான் பெண் பாலினம் அவனை தேர்ந்தெடுத்து, மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பை தரும்.  இதனால் தான் இயற்கை எல்லா உயிரினத்திலும் ஆண்பாலுக்கு மட்டும் இந்த டாமினென்ஸ் குணத்தை டெஸ்டோஸ்டீரோனின் மூலமாக தூண்டுகிறது.
ஆணின் இந்த டாமினென்ஸ் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவை பொறுத்தது. ஆனால் இந்த டெஸ்டோஸ்டீரோனோ எப்போதும் ஒரே மாதிரி அளவில் இருக்கும் ஹார்மோன் அல்ல. ஒரே நாளில் பல நூறு நானோ கிராம் அளவுற்கு அலைபாயும் தன்மை டெஸ்டோஸ்டீரோனுக்கு உண்டு.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரோனை போலவே பெண்களுக்குள்ளும் இரண்டு பாலியல் ஹார்மோன்கள் உள்ளன….அவை தான் ஈஸ்டிரஜென், ப்ரொஜெஸ்டிரான்.  ஆனால் டெஸ்டோஸ்டீரானை போல இல்லாமல் இந்த பெண்பால் ஹார்மோன்கள் இரண்டுமே சொல்லி வைத்தாற் மாதிரி நிலையான அளவிலேயே இருக்கும். மாதவிடாய் நாளில் இருந்து அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணின் பாலியல் ஹார்மோன்கள் எந்த நாள் எந்த அளவில் இருக்கும் என்பதை துல்லியமாக அனுமானித்துவிட முடியும்.  ஆனால் ஆணின் உடலிலோ, ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் டெஸ்டோஸ்டிரோன் மேலும் கீழுமாய் நிலை இல்லாமல் அலைபாய்ந்துக்கொண்டே இருக்கும்.  எப்போது எவ்வளவு இருக்கும் என்பதை முன்னறியவே முடியாது.
ஏன் அப்படி என்று தானே கேட்கிறீர்கள்.  காரணம், டெஸ்டோஸ்டீரோனின் அளவு ஆணின் மனநிலையை பொருத்தே இருக்கிறது.  அவன் தன்னை ஒரு வெற்றியாளனாக, வீரனாக, உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டால் உடனே அவனுடைய ரத்ததில் டெஸ்டோஸ்டீரான் அளவு கூடிவிடுகிறது.  இதுவே அவன் தன்னை ஒரு தோத்தாங்கோலியாகவோ, ஏமார்ந்தவனாகவோ, கோழையாகவே நினைத்தாலும் போச்சு, சடாரென டெஸ்டோஸ்டீரான் அளவு சரிந்துவிடும்.
ஒரு மனிதனின் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாய் இருக்கும் போது, அவன் சந்தோஷமாய் இருக்கிறான்.  தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியமும் அப்போது அவனிடம் அதிகமாக இருக்கும்.  ஆனால் அதே ஆணின் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்து போய்விட்டால் அவன் சோகமாகிவிடுகிறான்.  தேவையற்ற எரிச்சல், ஆத்திரம், பொறுமையின்மை, சுய பரிதாபம், தோல்வி மனப்பான்மை, கோழைத்தனம் எல்லாம் சேர்ந்து அவனை ஆட்டி படைக்க ஆரம்பிக்கின்றன.  இதனால் அவன் அதிக நோய்களுக்கு ஆளாகிறான். உடலாலும் மனதாலும் பெருத்த சங்கடத்திற்கு உள்ளாகிறான்.  அதற்கு மேல் போட்டி இட்டு ஜெயிக்கும் திராணியை அவன் இழந்துவிடுவதால் அவனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாமல் போகலாம்.
இது தான் டெஸ்டோஸ்டீரானின் தன்மை என்றால், இப்போது சொல்லுங்கள், உங்கள் ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் உங்களுக்கு லாபமா, அல்லது குறைவாய் இருந்தால் உங்களுக்கு லாபமா?
அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் அவன் சுலபமாய் அதிகமாய் சாதிப்பான்.  அவன் சாதனைகளின் மேல் நீங்கள் இலவச சவாரி செய்து சொகுசாய் வாழலாம்.  ஆனால் அவனுக்கு டெஸ்டோஸ்டீரான் குறைந்து போனால் அவனால் அதற்கு மேல் சாதிக்க முடியாது, அவனால் அவன் மனைவிக்கு பெரிய பயன்பாடு இருக்காது…….ஆக ஆணின் டெஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் தான் பெண்களுக்கும், சமுதாயத்திற்கும் லாபம்!!
இந்த டெஸ்டோஸ்டிரானை எப்படி அதிகமாக்கிவிடுவது என்று தானே யோசிக்கிறீர்கள்? சிம்பிள், அவன் தான் உயர்ந்தவன், வெற்றியாளன், வீரன் என்று அவன் நினைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அதிகமாகி விடுமே. வெளி உலகில் அவன் நிஜமாக ஜெயிக்கிறானா தோற்கிறானா என்பதெல்லாம் பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயமே அல்ல.  அதனால் அவன் வெளியே இருக்கும் போது அவன் டெஸ்டோஸ்டீரான் அளவை பெண்களால் கட்டுபடுத்த முடியாது.
ஆனால் அவள் வீடு என்கிற தனி சாம்பிராஜியத்திற்குள் அவன் வந்துவிட்டால், அதன் பின் அவன் டெஸ்டோஸ்டீரானின் அளவை நிற்னயிப்பதே பெண் தான். அவனை, பெரிய ஹீரோ மாதிரி நடத்தி, உன்னை மாதிரி ஒரு வெற்றீயாளன் யாருமே இல்லையடா என்று நம்பவைத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் அளவு ஆகாஷம் வரை பாயும், உடனே சந்தோஷமும், உற்சாகமும் பீறீட்டு விட, அவன் இன்னும் இன்னும் அதிகமாய் சாதிக்கும் ஆர்வத்தை பெறூவான்.
அதை விட்டு விட்டு, என் அப்பா மாதிரி வருமா? என் அண்ணன் மாதிரி வருமா? எதிர்வீட்டுகாரன் மாதிரி வருமா, என்று அவன் எதிரில் வேற்று ஆண்களை நீங்கள் பாராட்டி, இவனை மட்டம் தட்டிவிட்டீர்ங்கள் என்று வையுங்கள்……போச்சு, அவன் டெஸ்டோஸ்டீரான் அந்தர்பல்டி அடித்துவிடும், அவன் ஆக்ரோஷத்துடன் உங்களை அடிக்க கிளம்பிவிடுவான், அல்லது வேண்டாத பழக்கங்களால் தன்னை அழித்துக்கொள்ள கிளம்பிவிடுவான்.
அதனால் ஆண்களை ஸ்மார்ட்டாக ஹாண்டில் செய்ய விரும்பும் ஸ்நேகிதிகாள், அவனை எப்போதுமே பாராட்டுங்கள்.  உன்னால முடியும், நீ சாதிக்கவே பிறந்தவன், நீ நினைத்தால் முடியாததா என்றெல்லாம் அவனுக்கு கொம்பு வீவி விடுங்கள் பிறகு பாருங்கள் அவன் எவ்வளவு சாதிக்கிறான் என்றூ.
உதாரணத்திற்கு சக்ரவர்தி திருமகன் ராமனை எடுத்துக்கொள்ளூங்களேன்.  அவன் மனைவி சீதாவை ராவணன் கடத்திக்கொண்டு போய் அசோக வனத்தில் சிறைவைத்த போது, அவளை தேடி போய் கண்டு பிடித்த அனுமான், “என் தோளில் ஏறிக்கொண்டால் நான் இப்போதுமே உம்மை காப்பாற்றிக்கொண்டு செல்வேன்” என்று சொன்னான்.  அப்போது சீதை, “ஐ சூப்பர் ஐடியாவா இருக்கே,” என்றூ உடனே அவன் தோளில் ஏறிவிட்டாளா என்ன? இல்லையே, “நான் நினைத்தால் எப்போதோ இங்கிருந்து தப்பி போயிருப்பேன், ஆனால் அது ராமனின் வீரத்திற்கு கலங்கமாகிவிடும்.  அவர் மாவீரர், அவரால் ஆகாதது ஏதும் இருக்கிறதா?  அவர் வந்து என்னை மீட்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. போய் அவரிடம் இதை சொல்” என்றாள். இத்தனைக்கும் ராமன் காட்டில் சாப்பாட்டிற்கே லாட்டரி அடித்துக்கொண்டு, ஒரு குரங்கு கூட்டத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான்.  அவனுக்கே இவ்வளவு ஊக்கம் தந்தாள் சீதை.
ராவணனோ பெரிய பராக்கிரம சாலி, ஏழு லோகத்தையும் வென்ற ஜித்தன்……ஆனால் அவனை அவன் மனைவி மண்டோதரி, “வேண்டாம், போருக்கெல்லாம் போய் டைம் வேஸ்ட் பண்ணாதே.  ராமன் உன்னை விட பலசாலி….” என்று ராமனோடு அவனை ஒப்பிட்டு மட்டம் தட்டி, டிஸ்கரேஜ் செய்து தடுத்தாள்.  இதனால் ராவணனின் டெஸ்டோஸ்டீரான் அளவு என்ன ஆகியிருக்கும்?  சந்தேகமே இல்லாமல் சுரத்தல் குறைந்திருக்கும்.  விளைவு, எவ்வளவோ சக்திவாயந்தவனாக இருந்தும் இராவணம் தோற்று போனான்.
சரியான சாப்பாடு இல்லாமல், குரங்குகளின் உதவியோடு போரிட்டாலும் இராமனே ஜெயித்தான்.  காரணம், அவன் மனைவி அவனை தூக்கிவைத்து பேசியதால் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமாக இருந்தது.  அதனால் அவனால் ஜெயிக்க முடிந்தது.
இதெல்லாம் புராணகதையாக இருந்தாலும், இதில் இருக்கும் அறிவியல் துணுக்கு இது தான்:  பெண்ணின் பாராட்டுக்கு ரொம்பவே அதிக பவர் உண்டு.  நீங்கள் உங்கள் கணவன்/காதலன்/மகன்/சகா/நண்பன்/ஊழியனை ஒரு முறை பாராட்டிப்பாருங்களேன்.  அவன் பெரிய பெரிய சாதனைகளை சுலபமாக புரிவான்.  இதற்கு நேர்மாறாய், அவனை மட்டம் தட்டி, உதாசீனப்படுத்தி, “டேய் சரியான வேஸ்டுடா நீ!” என்றூ இழிவு படுத்தி பாருங்கள்…..இந்த காயம் அவனை தோற்கடித்துவிடும்.
ஆகயால் ஆண்களை ஹாண்டில் செய்ய விரும்பும் அன்பு ஸ்நேகிதிகாள்…..உங்கள் ஆணை ஹீரோ மாதிரி நடத்துங்கள், அவன் மென்மேலும் ஜெயித்துக்கொண்டே போவான்.  ஸீரோ மாதிரி நடத்தினீர்கள் என்றால் அவனுடன் சேர்ந்து நீங்களும் தோற்றுபோவீர்கள்.

17 comments:

ராம்ஜி_யாஹூ said...

மிக அருமையான பயனுள்ள பதிவு.

உங்கள் எழுத்து நடையும் மிக அருமை.

பெரும்பாலும் இந்த விசயங்களில் பலரது எழுத்துக்களும் ஒரு சலிப்பை தரும். உங்களின் இந்த பதிவு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

எனது ஒரு கேள்வி- நம் உணவு அமைப்பை மாற்றினால் குண நலன்கள் மாறுமா. உணவில் சிறிது மாற்றம் செய்தால் ஹார்மோன்கள் கட்டுபடுத்தி நம் குண நலன்களான, பொறாமை, கோபம் போன்றவற்றை குறைக்க முடியுமா.

எனது குழந்தையை பொறாமை கொல்லாத ஒரு பெண்ணாக வளர்க்க விரும்புகிறேன்.
எனது பொறாமையையும் குறைத்து கொள்ள விரும்புகிறேன்.

தனி காட்டு ராஜா said...

//ஆணின் இந்த டாமினென்ஸ் அவன் டெஸ்டோஸ்டீரோன் அளவை பொறுத்தது//
டாக்டர், டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகமா இருந்தா வழுக்கை விழும்னு சொல்லராங்கலே- அது உண்மையா?
வழுக்கை தலை ஆசாமிகள் செக்ஸ் விசயத்தில் நார்மல் ஆசாமிகளை விட கில்லாடிகள் என்று சொல்லுகிறார்களே- அது உண்மையா?
//தோத்தாங்கோலியாகவோ//
இந்த மாதிரி செம்மொழி வார்த்தை எல்லாம் எப்படி?

Anonymous said...

True..and good article.. All the best.!

VS Balajee

வால்பையன் said...

//ராமன் காட்டில் சாப்பாட்டிற்கே லாட்டரி அடித்துக்கொண்டு, ஒரு குரங்கு கூட்டத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான்.//


இந்துத்துவா உங்களுக்கு பத்வா போட்ற போறாங்க!

நிஹேவி said...

Why so long gap?பெண்களை ஹாண்டில் செய்வதி எப்படி ?

kayal said...

கடைசில சோப்பு போடறது தான் வேலைக்கு ஆகும்னு சொல்லிடீங்களே ! சாதிக்கிற பெண்களுக்கும் / transgender / transexual testosterone தான் drive ah ? பெண்கள் சாதிக்ரதுகும் ஆண்கள் சாதிக்ரதுக்கும் வித்தியாசம் இருக்கா ?

rekha said...

Hi Doctor,
Thanks you very much for your tips.learnt a lot from your blog.All are useful.But I have noticed some guys who are so intelligent and self centric are acting like as if they dont like girls and all these are not meant for attracting girls.
If we ask all these is to show off only right.Then they would say like "Naa onnu avalavu mattamanavan illa ponnugalukaga seiradhuku"
Are they Acting?

Anonymous said...

Soooo... a MAN IS MADE, NOT BORN....Wat abt a woman Dr.? Is she made or born?? If we maintain his testosterone level is there any guarantee that they'll maintain our endorphin level.They'll happily remain in the receiving end and never give anything to the one who maintains his T level.They'll do everything to the one they like.Then how to do 'Savari'.

ராம்ஜி_யாஹூ said...

Hi Doctor

Please advise, can we control the behaviours (jealous, enmity, anger) with food control

I mean if you avoid certain foods/oils can one reduce Jealous.

mathi said...

Your articles are very good.
I wonder why people go behind mad TV shows( even if you give some reason for that too).
Why don't you come on some popular TV?.
It is most import than anything to make people understand themselves.

Sankarlal's Thoughts said...

Hi Doctor - Looking for ur answer
டெஸ்டோஸ்டீரோன் - உடைய முக்கியத்துவம் புரியுது. இதை செயற்கையாக அதிகரிக்க வைக்க முடியாதா? மருந்து, மாத்திரைகள் மூலம்?- இது சாத்தியம் என்றால் தினமும் சாப்பாட்டுடன் இதையும் சேர்த்து சாப்பிட வேண்டியது தானே?

Anonymous said...

Hi Doctor,
I am a big fan of your article in snehithi.I missed last issue of snehithi.I Google your name and found this blog.It is very useful.I gained so much knowledge about men.
Thankyou for your service.

flower said...

@kayal: soappu podurathu illai.
Its only encouragement.Please let the man alive.

PARIMALA said...

பரிணாம வளர்ச்சி தான் இயற்கையின் நியதி.கூட்டுப்புழு தான் பட்டாம்பூச்சி ஆகிறது. அது தான் இயற்கை. நாமும் குரங்கிலிருந்து மனிதர்களாக மாறத்தான் வேண்டும். இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.மற்ற நாடுகளில் வாழ்பவர்கள் எல்லாம் இந்த உண்மையை உணர்ந்து மாறிக்கொண்டு வாழும் போது நாம் மட்டும் தான் ராமாயணம் , மகாபாரதம் கதைகளோடு நின்று விட்டோம். இப்படி எல்லாம் தான் இவன் testosterone லெவல் வளர்க்க இத்தனை நாள் பாடுபட்டோமே, இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒலிம்பிக் இல் எத்தனை கோல்ட் மெடல் வாங்கினார்கள்? testosterone லெவல் ஏத்தி விட்டு நாம் செய்த ஒரே சாதனை மக்கள் தொகையில் இன்று இரண்டாம் இடத்தில் இருப்பது தான். முதல் இடம் பிடிக்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. சீதை வாழ்க, ராமன் வாழ்க!!!!

பிரதிபலிப்பான் said...

மிகவும் நன்றாக இருக்கிறது உங்களது பதிவுகள். நான் தொடர்ந்து படிப்பேன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பவெல்லாம்.

பின்னூட்டங்களில் வரும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் நாங்கள் தெரிந்து கொள்வோம்.அப்படியில்லாமல் நீங்கள் நேரில் வந்தால் தான் உங்களுக்கான விடை கிடைக்கும் என்று சொல்லாதீர்கள்.

நன்றி அறிவியல் பூர்வமாக நிறைய விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

RAJKUMAR said...

very nice to read...,

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மிகுந்த வேலைகளுக்கிடையே நீங்கள் வலைப்பூவையும் தொடர்வது சந்தோசத்தை அளிக்கிறது. கொஞ்சம் நண்பர்களின் கேள்விகளுக்கும் விடை சொல்லுங்களேன். உங்களிடம் கேட்டால், பதில் கிடைக்கும் என்றல்லவா நண்பர்கள் கேட்கின்றார்கள்...