Wednesday, July 14, 2010

உயிர்மொழி: புது மாப்பிள்ளைக்கு….

அவளூடைய முன்னால் கணவனுக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் இவள் திருமணம் என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதை நம்மூர் நீதி மன்றம் ஒரு செல்லா திருமணம் என்று தள்ளுபடி செய்துவிட்டது. செல்லா திருமணமா? ஏன்? என்றால், மேட்டர் இது தான், அவர்களுக்குள் முக்கியமான மேட்டரே நடக்கவில்லை. பிகாஸ் மாப்பிள்ளை சாருக்கு சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யவில்லை. சிஸ்டம் ஒழுங்காய் வேலை செய்யாதவனுக்கு இன்னொரு கல்யாணமா? என்று வியப்பாக இருக்கிறதா? அதை விட அந்த முன்னால் மனைவி சொன்னது இன்னும் வியப்பாக இருக்கும்: என்னை படுத்துன பாடு போதும், அவனால் இன்னொரு பெண்ணும் பாதிக்கபடக்கூடாதில்லை, அதனால் ஆம்பிளைனா எப்படி இருக்கணும், கல்யாணம்னா என்ன, பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும், செக்ஸ்னா என்னனு எல்லாம் அவனுக்கு புரியுறா மாதிரி நீங்க தான் சொல்லித்தரணும்….

அது சரி, இது மாதிரியான விசித்திரங்கள் சைக்கியாட்டியில் சகஜமாயிற்றே. இந்த பெண் தன் முன்னால் கணவனுக்காக வைத்த இதே கோறிக்கையை இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் நிகழ்கால கணவனுக்காக கேட்டுக்கொள்வது உண்டு…..கல்யாணம்னா என்னனே தெரியாம கட்டிக்கிட்டு, இப்ப போட்டு என் தாலிய அறுக்குறார். எப்படியாவது அவருக்கு புரியுறா மாதிரி சொல்லி கொடுத்து என் வாழ்க்கைய காப்பத்துங்க என்று புலம்பும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம்.

அதெப்படி கல்யாணம் என்றால் என்ன என்று கூட தெரியாத பையன்கள் இருப்பார்களா? அதுவும் ’உயிர் தவசிறுது, காமமோ பெரிதே” என்று அந்த காலத்து பெண் புலவர்கள் பாடி வைத்த இந்த தமிழ் திருநாட்டில்! என்று நீங்கள் ஆட்சரியப் பட்டால், கசப்பான உண்மை இது தான்: இன்றூம் நிறைய ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு வந்த பிறகு, “அம்மா அப்பா, ஆசை படுறாங்க, எல்லாரும் செய்துக்குறாங்க நானும் செய்யலன்னா, அசிங்கமா போயிடும்” என்பதற்காக நடக்கும் ஒரு சடங்கு மட்டுமே. பெண்களையாவது சின்ன வயதிலிருந்தே, “இன்னொருத்தன் வீட்டுக்கு போக போறவ” என்று சொல்லி சொல்லியே ஏதோ ஒரு அளவிற்கு அவர்களை தயார் செய்து வைக்கிறார்கள் வீட்டு பெரியவர்கள். ஆனால் ஆண்களை இப்படி தயார் செய்வதில்லை, அதனால் தான் திருமணம் என்கிற இந்த அமைப்பில் ஆண்கள் ரொம்பவே திக்குமுக்காடி போகிறார்கள். அவர்களின் அறியாமை பெண்களையும் பாடுபடுத்தி விடுகிறது.

திருமணத்தின் முதல் நிலை: துணை தேர்வில் இருந்தே ஆரம்பிப்போமே. அந்த வாலிபன் மெத்த படித்து வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். முப்பது வயது நெருங்குகிறதே, கூட இருக்கும் பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே, எத்தனை நாள் தான் படம் பார்த்து படுக்கையில் புரண்டுக்கொண்டிருப்பதாம், என்றெல்லாம் பல வாராக யோசித்து, “பொண்ணு பாருங்க” என்று ஜாடை மாடையாகவும், அது பலிக்காத போது நேரடியாகவும் சொல்லி விட்டான் பையன். ஜாதகம் பார்த்து, நிறம், வசதி, வருமாணம், அந்தஸ்து பார்த்து, இதனால் பல நூற்றுக்கணக்கான பெண்களை கழித்து கட்டி, இறுதியில் மூன்றே பெண்களின் வரலாற்று குறிப்பை கொடுத்தார் அம்மா. அதில் ஒரு பெண்ணை காட்டி, “இந்த பொண்ணை தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அம்மா சொல்லிவிட, பையனும் சுறுசுறுப்பாக அம்மா சிபாரிசு செய்த பெண்ணை முதலில் போய் பார்த்தான். ஆனால் அந்த பெண் அவனுடைய உலகமயமான சிந்தனைக்கு ஒத்துவரவில்லை. லிஸ்டில் அடுத்த பெண்ணை பார்த்தான், அவளை என்னவோ அவனுக்கு பிடித்து போனது…..அம்மாவிடம் சொன்னால் முகம் சுளித்தாள். இப்போது பையனுக்கு ஒரே குழப்பம், தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா, அல்லது அம்மாவுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பதா? தனக்கு பிடித்த பெண் என்றால் அது அம்மாவுக்கு செய்யும் துரோகம் ஆகாதா? அம்மாவுக்கு பிடித்த பெண் என்றால் குறைந்த பட்சம் அம்மாவாவது திருப்தி அடைவார்கள், அம்மாவுக்காக தியாகம் செய்துவிட்டால் தான் என்ன, என்பது பையனின் பெருங்குழப்பம்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அம்மாவுக்கு தெரியாதா? பெரியவங்க பார்த்து பண்ணி வெச்சா தப்பா போகாது, அதனால அம்மா சொல்லுகிற பெண்ணை மனமாற ஏத்துகிட்டா, போக போக தானா ஆசை வந்திரும் என்கிற கட்சியா நீங்கள். கல்யாணம் யாருக்கு, உனக்கு தானே? நீ தானே வாழப்போறே, உனக்கு பிடிச்ச பொண்ணா பாருப்பா, என்கிற கட்சியா நீங்கள்?

உங்கள் கருத்து ஒரு பக்கம் இருக்கட்டும். அறிவியல் என்ன சொல்கிறதென்று பார்போமே:

1. திருமணம் சொர்கத்தில் நிச்சையமானது என்கிற பேத்தல்களை எல்லாம் மீறி, திருமணம் என்பது ஒரு ஜெனடிக் ஒப்பந்தம், இரண்டு பாலினரின் மரபணுக்கள் கலந்து ஆரோகியமான அடுத்த தலைமுறை உருவாகிட சமூதாயம் ஏற்படுத்திய ஒரு சடங்கு. அதனால் தான் திருமணம் என்றாலே, “சாந்தி முகூர்த்தம்” என்கிற சடங்கை முதலில் செய்கிறார்கள்.

2. இப்படி ஒரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்றால் அவர்களுக்குள் செக்ஷுவல் கெமிஸ்டிரி சரியாக ஒருங்கிணைய வேண்டும். இந்த கலவியல் கவர்ச்சி என்பது அவரவர் சொந்த விஷயம், இதில் பெற்றவர்கள் கூட கருத்து சொல்லிவிட முடியாது.

3. அம்மா அப்பாவை திருப்தி படுத்த, அவர்களை பார்த்துக்கொள்ள, என்ற காரணங்களுக்காக எல்லாம் ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துக்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் மரபணுக்களை பரப்பிக்கொள்வதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமாகிறது. மனித விதிகளின் படி, ”அடடா, என்ன ஒரு அம்மா செண்டிமெண்ட், என்ன ஒரு குடும்ப அக்கறை” என்றெல்லாம் நாம் பாராட்டினாலும், இயற்க்கையை பொருத்தவரை, “உன் மரபணுக்களை எதிர்காலத்திற்கு பரப்பிக்கொள் என்றால், உன்னை பெற்றவர்களின் கடந்த கால மரபணுக்களை பராமறிக்க நேரத்தை வீண்டிக்கிறாயே.” ரிவர்ஸ் கியரில் மரபணு பயணம் செய்தால், சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்கிற இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாய் தானே அர்த்தம்.

அதற்காக, அம்மா அப்பாவை அப்படியே விட்டுவிடுவதா, நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கியவர்களை இப்படி உதாசீனப்படுத்துவது அநியாயமாகாதா? அதுவும் சரி தான், இந்த ஈக்குவேஷனை எப்படி சமன் படுத்துவது என்பதை பற்றி எல்லாம் அடுத்த இதழில்

8 comments:

Radhakrishnan said...

புதுமண தம்பதிகளுக்கு என்று சொன்னால் சரியாக இருக்கும் டாக்டர் ;)

கண்ணகி said...

தொடர்கிறேன்...

flower said...

sexual satisfaction differ from person to person.

Unknown said...

அன்புள்ள டாக்டர்!
உங்கள் கட்டுரைகளை வெகு காலமாக படித்து வருகிறேன். மருத்துவச்செய்திகளை நகைச்சுவையோடும், இலக்கியப்பிண்ணனியொடும் சுவாரஸியத்தோடு சொல்லும் ஒரே நபர் நீங்கள் தான். ஆண்-பெண் வேறுபாடின்றி, எந்த மிகைப்படுத்தலுமின்றி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் என்னையே எத்தனையோ முறை கேள்வி கேட்க வைத்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.

எனக்குள் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. மனநல மருத்துவரான உங்களால் என் பிரச்சனை தீர்ந்தால் மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்.

பிரச்சனையை ஈ-மெயில் வாயிலாக தெரிவிக்கலாமா அல்லது நேரில் மருத்துவமனைக்கு வரவேண்டுமா? முகவரி தேவை.

ரசிகன் said...

//அம்மா அப்பாவை திருப்தி படுத்த, அவர்களை பார்த்துக்கொள்ள, என்ற காரணங்களுக்காக எல்லாம் ஒருவனோ ஒருத்தியோ திருமணம் செய்துக்கொள்கிறார்கள்//
//“உன் மரபணுக்களை எதிர்காலத்திற்கு பரப்பிக்கொள் என்றால், உன்னை பெற்றவர்களின் கடந்த கால மரபணுக்களை பராமறிக்க நேரத்தை வீண்டிக்கிறாயே.”//

இதுவரை உணர்வுப்பூர்வமா பார்த்துவந்த உறவுகளை வெறும் மரபணுத்தொகுப்புக்களா பாக்க கொஞ்சம் கடினம்தான்னாலும் நீங்க சொல்லற நிதர்சனம் நல்லாவே புரியுது:) நன்றிகள்:)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நிறைய ஆண்களுக்கு புணர்ச்சி பற்றி தெரிவதில்லை என்பது உண்மைதான். தங்களுடைய உறுப்புகளைப் பற்றிகூட பலருக்கு தெரிவதில்லை. அந்தரங்கங்களைப் பொருத்த மட்டில் ஆண்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

திருமணங்கள் இனப்பெருக்கத்திர்காக மட்டுமே என்பதுபோல கட்டுரை இருக்கிறது. அதைத்தாண்டிய பந்தங்கள் நிறைய இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

கேசவன் முத்துவேல் said...

"ரிவர்ஸ் கியரில் மரபணு பயணம் செய்தால், சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்கிற இந்த ஆட்டத்தில் தோற்றுவிட்டதாய் தானே அர்த்தம்"

நிஜமான உண்மை