Monday, January 26, 2009

பெரியார் - நதிமூலம், ரிஷிமூலம்

சரி, பெரியாரை பற்றி எனக்கு அனா ஆவன்னா தெரியாது என்கிற என் அறியாமையை நான் ஒத்துக்கொண்ட போது தான் எனக்கு அதன் மிக பெரிய சவுகரியமே புரிந்தது. ஏற்கனவே யாரோ எதையோ சொல்லி, அதை நான் வேறு நம்பி தொலைத்திருந்தேன் என்றால், என் மனம், முன் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் என் சொந்த கருத்து என்று ஒன்று உண்மையில் இல்லாமல், யாரோ சொன்னதை வைத்து second hand டாய் உருவான கருத்தே மிஞ்சி இருந்திருக்கும். இப்போது அப்படி இல்லையே. பெரியாரை பற்றி a, b, c, d கூட எனக்கு தெரியாது என்பதால், காலி ஸ்லேட்டிலிருந்து புதிதாய் இனி நானே அவரை பற்றி, ஃப்ர்ஷ்ஷாய் தெரிந்துக்கொள்ளலாம், எந்த விதமான கலப்படமும், assumptionsசுமே இல்லாமல்!

தியானம் செய்யும் போது ஒரு டெக்னிக் சொல்லுவார்கள். மனதில் ஏற்கனவே இருக்கும் சரக்கை எல்லாம் இறக்கி வைத்து விட்டு, மனதை முதலில் காலி செய்துக்கொள்ள வேண்டுமாம், அப்போது தான் தெளிவு பிறக்குமாம். இந்த 0 நிலையில் இருந்து ஆரம்பித்தால் தான் சத்தியம் விளங்குமாம். ஆனால் இந்த 0 நிலைக்கு வருவது தான் இருப்பதிலேயே ரொமப கஷ்டமான காரியமாம். காரணம் இந்த மனம் என்கிற விசைக்குள் இதுவரை வாழ்ந்து, கேட்டு, பார்த்து, படித்து, அனுபவித்து, கற்பனை செய்து என்று பல பல குப்பைகள் ஏற்கனவே அடஞ்சிருக்குமாம். இந்த குப்பையை எல்லாம் ஒட்டடை அடித்து, பெருக்கி, கழுவி விட்டு, மனதை முதலில் சுத்தமாக காலி ஆக்கிக்கொண்டால் தான் எல்லா ஞானமும் சாத்தியமாம்.

அதிர்ஷடவசமாக, பெரியார் விஷயத்தில் என் மனம் டோட்டலால் squeaking cleanனாய் எந்த வித முன் தகவலுமே இல்லாமல் இருந்தது. இந்த காலி ஸ்லேட் மனதை வைத்துக்கொண்டு, பெரியார் என்கிற இந்த மனிதனை புரிந்துக்கொள்ள போகிறேன். பெரியார் பெரிய அவர், இவர் ஆஹா ஓஹோ என்று சும்மாவெல்லாம் நான் துதிப்பாடிக்கொண்டிருக்கப்போவதில்லை. பெரிய மாஹாத்மா என்று ஒரு நாடே ஒட்டு மொத்தமாய் போற்றித்தள்ளும் மனிதனில் எத்தனை விதமான வக்கரங்கள் இருக்கின்றன என்பது ஆராய்ந்து பார்த்தால் தானே தெரிகின்றன. எதற்கு சும்மா தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது, அப்புறம், அந்த மனிதனின் ஓட்டை உடைச்சல்கள் தெரிந்தபின், சீ நீ இவ்வளவு தானா என்று கீழே தூக்கிப்போட்டு உடைப்பது? ஆரம்பத்திலேயே நடுநிலையாய், எந்த வித பற்றுமே இன்றி, உள்ளதை உள்ளபடி பார்க்க பழகிவிட்டால் தானே நல்லது. இத்தனை வருட அறிவியல் என்னுள் ஏறபடுத்தி இருக்கும் default மன நிலையும் அது தான் என்பதால், யாரையும் ஒரேயடியாக புகழவும் எனக்கு வருவதில்லை, சாமினியர் தானே என்று யாரையும் குறைத்து மதிப்பிடவும் முடிவதில்லை. இதற்காக ”சரியான திமிர் பிடிச்ச கழுதை, கொஞ்சமாவது பயப்படுதா பாரேன்” என்று நிறைய பேரிடம் நிறைய அர்ச்சனை எல்லாம் வாங்கிகட்டிக்கொண்டிருக்கிறேன்! ஆனால் இந்த objectivity மட்டுமெ அடங்கவே மாட்டேன் என்கிறது.

அதுவும் நல்லதற்குத்தான். இந்த அப்ஜெக்டிவிட்டியோடே பெரியார் என்கிற இந்த ஆசாமியை அனலைஸ் பண்ணித்தான் பார்போமே என்று களமிறங்கினேன். இன்னொரு பி, எச்டி, மாதிரி, இதையும் ஆராய ஆரம்பித்தேன். எந்த ஆராய்ச்சியாக இருந்தாலும் review of literature தானே துவக்க பணி, அதனால் பல பேரிடம் பேசி, பல புத்தங்களை புரட்டி பெரியாரை பற்றி துளாவினேன்.

அப்போது தான் முதல் ஆட்சரியம் உண்டானது. பெரியாரை பற்றி ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் நிச்சயமாய் தெரிந்திருக்கும், ஆனால் நான் தான் சைஃபர் ஆயிற்றே, அதனால் எனக்கு இது கொஞ்சம் பெரிய ஆட்சர்யமே. அது என்னவெனறால், தமிழ் நாட்டில் இத்தனை சமூக பணிகள் செய்த பெரியார் என்கிற இந்த ராமசாமி, உண்மையில் தமிழரே இல்லை. இவர் கர்னாட்டகாவை சேர்ந்த கன்னடம் சேசுகிற பலீஜா நாயிடு வகுப்பை சேர்ந்த வைஷிய குடும்பத்தை சேர்ந்தவராம். அவர் மூதாதையர்கள் ஈரோட்டிற்க்கு வந்து செட்டில் ஆகிவிட்டதால் தமிழோடு பரிச்சையம் ஏற்பட்டுவிட்டதாம்.
மற்றபடி, ஈ வே ராமசாமிக்கும், தமிழுக்கும் தமிழர்களுக்கும், எந்த விதமான ரத்த பாசமோ, பற்றோ இல்லை.

அப்புறம் எதற்க்காக இந்த மனிஷன் மற்ற ஆண்களை போல, தான் உண்டு, தன் வேலை உண்டு, பெண்ட்டாட்டி, பிள்ளை உண்டு என்றில்லாமல், பிழைக்க வந்த ஊர்காரர்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று தன் வாழ் நாளின் பெரும் பகுதியை செலவழித்தார்? what a waste of time! என்ன வியாபார குடும்பமோ போங்கள், இந்த பேஸிக் சர்வைவல் கூட தெரியாத பேக்காக தானே இருந்திருக்கிறார் இந்த மனிதன்! அறிவுள்ள எவனாவது பிழைக்க வந்த வேலையை விட்டு விட்டு பரோபகாரம் செய்கிறேன் என்று தன் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் இப்படி விரையம் செய்வானா?

ஆனால் இந்த மனிதன் செய்திருக்கிறானே, ஒரு நாள் இரண்டு நாளைக்கல்ல, தன் வாழ் நாள் முழுவதுமே. எதற்க்காக இந்த வேண்டாத வேலை இந்த ஆளுக்கு?

10 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாரை மிகச் சரியாக ஆய்வு செய்து வருகிறீர்கள்.

விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிப்படும்.

பெரியாரிடம் பல உண்மைகள் கிடைக்கும்.

உங்கள் ஆய்வு தொடரட்டும்.

நன்றி

Anonymous said...

அட கலக்கலா தான் ஆரம்பிச்சிருக்கீங்க ..வாழ்த்துக்கள் ..

Sabarinathan Arthanari said...

நண்பரே!

பெரியார் போராடிய காலத்தில் ஒரே ஒரு மாகாணம் தானே (மதராஸ்) ?! அனைத்து இன மக்களும் இம்மாகாணம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

மொழி வாரி மாகாணங்கள் பிரிக்க பட்ட பின்பு தான் கன்னடர், தெலுங்கர், மலையாளி எனும் பிரிவினை அதிகமாக்கப்பட்டது.

அவர் தமிழர்களுக்காக மட்டும் பாடுபடவில்லை. பொதுவாக தான் செயல்பட்டார்.

வாழ்த்துக்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்னங்க இது ...போட்டு வாங்க முயற்சி பண்றீங்களோ ... உங்கள் மனோ தத்துவ அலசலுக்கு நல்ல மேட்டர் தேர்வு செஞ்சீங்க போங்க ... எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க ...வீட்ல கல்லு வந்து விழுந்தாலும் விழும் ...

தமிழன் said...

/////////////what a waste of time! என்ன வியாபார குடும்பமோ போங்கள், இந்த பேஸிக் சர்வைவல் கூட தெரியாத பேக்காக தானே இருந்திருக்கிறார் இந்த மனிதன்! அறிவுள்ள எவனாவது பிழைக்க வந்த வேலையை விட்டு விட்டு பரோபகாரம் செய்கிறேன் என்று தன் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் இப்படி விரையம் செய்வானா?

ஆனால் இந்த மனிதன் செய்திருக்கிறானே, ஒரு நாள் இரண்டு நாளைக்கல்ல, தன் வாழ் நாள் முழுவதுமே. எதற்க்காக இந்த வேண்டாத வேலை இந்த ஆளுக்கு? //////////////

நல்ல சிந்தனை, வாழ்க உங்கள் சிந்தனை.

இப்படி சிந்திப்பதால் தான் இன்னும் அண்டை நாட்டில் ஆண்ட இனம் அடிமையாக உள்ளது. உதவி செய்யவேண்டிய நாம் உறக்கத்தில்.

RAMASUBRAMANIA SHARMA said...

Doctor, how would you like to conclude about "Thanthai Periyar"...!!!! The said article is completed or to be continued...

Rathna said...

உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு........எதுக்கு தெரியுமா? இவ்வளவு படிக்கரீங்களேன்னு ..........எனக்கு ஒரு புத்தக கடைய பார்த்தா அங்கே இருக்கிற புத்தகம் எல்லாத்தையும் ஒரேடியா படிசுடனும்ன்னு தோணும்.....பேராசைதான்.....

பெரியார் ஒரு "கனடிகான்னு" நீங்க சொல்லறதும்...அவர் அடுத்த ஊர் காரனுக்கு எதுக்கு தன்னோட வாழ் நாள் பணம் எல்லாத்தையும் செலவு செய்தார்ன்னு சொல்லறது கொஞ்சம் வேடிக்கையாதான் இருக்கு.....ஒரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? .....அவர் வாழ்ந்த காலத்துல கன்னடத்துக்காரன் தமிழ்நாட்டுகாரன்னு எல்லாம் வேற்றுமையா பார்க்கறது கிடையவே கிடையாதுங்க.......இல்லன்னா நம்ம எம்.ஜி.ஆர். எல்லாம் எப்படிங்க முதலமைச்சராகி இருக்க முடியும்......

சிவக்குமரன் said...

///இவர் கர்னாட்டகாவை சேர்ந்த கன்னடம் சேசுகிற பலீஜா நாயிடு வகுப்பை சேர்ந்த வைஷிய குடும்பத்தை சேர்ந்தவராம். அவர் மூதாதையர்கள் ஈரோட்டிற்க்கு வந்து செட்டில் ஆகிவிட்டதால் தமிழோடு பரிச்சையம் ஏற்பட்டுவிட்டதாம்.
மற்றபடி, ஈ வே ராமசாமிக்கும், தமிழுக்கும் தமிழர்களுக்கும், எந்த விதமான ரத்த பாசமோ, பற்றோ இல்லை. ///இது உண்மையிலேயே எனக்கு புது தகவல்ங்க!!

Anonymous said...

His Mother only belonging with Baleeja Naidu his father belonging with other group of Telugu Naidu.His mothers native is salem so he was born in salem.but his father is orgin is erode only.Bcoz i am also same community